Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி

Published:Updated:

சோயா ஆயில் (Soya oil)

கடந்த சில வாரங்களாகவே சோயா ஆயில் விலை அதிகளவு ஏற்ற இறக்கம் இல்லாமல் ரூ.690 - 730 என்ற லெவலிலேயே வர்த்தகமாகி வருகிறது. இதையடுத்து, வரும் வாரத்திலும் இதேபோல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரலில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சர்வதேச அளவில் சோயாபீன் உற்பத்தி முந்தைய கணிப்பிலிருந்து

14 லட்சம் மெட்ரிக் டன் குறைந்து, 2,840 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கும் என்று தெரிகிறது. பிரேசில் மற்றும் இந்தியாவில் உற்பத்தி குறையும் என தெரிகிறது. இருப்பும் குறைவாகவே உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்திய சந்தைகளில் தேவை மற்றும் எல்நினோ காரணமாக விலை அதிகரிக்கலாம். வரும் வாரத்தில் தேர்தல் முடிவுகள், வாக்குச்சாவடி கருத்துக் கணிப்பு வெளியீடு போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பில் அதிகளவு மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, கமாடிட்டி வர்த்தகத்திலும் பிரதிபலிக்கும் என்பதால் வர்த்தகர்கள் கட்டாயம் ஸ்டாப்லாஸ் வைத்து வர்த்தகம் செய்வது நல்லது.

அக்ரி கமாடிட்டி!

சோயா ஆயில் (ஜூன் கான்ட்ராக்ட்) தற்போது ரூ.696 லெவலில் வர்த்தகமாகி வருகிறது. இதன் முக்கிய சப்போர்ட் லெவல் ரூ.689 - 684. ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ.703. கடந்த வெள்ளியன்று ரூ.703-க்கு மேல் முடிவடையும்பட்சத்தில் அடுத்த ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ. 709 - 713, 720.

பரிந்துரை: சோயா ஆயில் (ஜூன் கான்ட்ராக்ட்) ரூ.692- 689 லெவலில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.684க்கு கீழே. இலக்கு விலை ரூ.703 - 708.Ó

  ஜீரகம் (Jeera)

அக்ரி கமாடிட்டி!

ஜீரகம் ஏற்றுமதி நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக உற்பத்தி குறைந்துள்ளது; ஏற்றுமதியும் பாதிப்படைந்துள்ளது. இந்த ஏற்றுமதி ஆர்டர்கள் தற்போது இந்தியாவுக்குத் திரும்பியுள்ளன. தவிர, சர்வதேச அளவில் தேவை சற்று உயர்ந்ததன் காரணமாக கடந்த வாரம் ஜீரகம் விலை அதிகரித்து வர்த்தகமானது.

தற்போது, ஜீரகத்தின் விலை குறைந்த அளவில் இருப்பதால் உள்நாடு மற்றும் சர்வதேச வியாபாரிகள் அதிகளவு வாங்கலாம். புதிய வரத்து, அதிகளவு இருப்புக் காரணமாக ஜீரகம் அதிக விலையேறுவது தடுக்கப்படலாம். வரும் வாரத்தில் ஜீரகத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு என்றாலும், அதிக  வரத்து விலை உயர்வதைத் தடுக்கலாம்.

  மஞ்சள் (Turmeric)

கடந்த சில தினங்களாக மஞ்சளின் தேவை குறைந்தது மற்றும் தரம் குறைந்த

மஞ்சள் வரத்து  காரணமாக விலை சற்று குறைந்து வர்த்தகமானது. எனினும், கடந்த வியாழக்கிழமை, சர்வதேச அளவில் தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக, விலை சற்று அதிகரித்தது. மேலும், லோயர் லெவலில் ஷார்ட் கவரிங் செய்தது விலையேற்றத்துக்கு வழி வகுத்தது. 2014-ல் பருவநிலையில் மாற்றம் இருக்கும் என்று முன்னர் அறிவிப்புகள் வெளியானதும் விலையேற்றத்துக்கு வழிவகுத்தது.

கடந்த வியாழனன்று ஈரோடு சந்தைக்கு வரத்து 5,000 பைகளாக இருந்தது. 2013-14 சீஸனில் ஆந்திரப்பிரதேசத்தில் மஞ்சள் பயிரிடப்படும் பரப்பளவு 0.53 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு 0.68 லட்சம் ஹெக்டேராக இருந்தது. 2013-14-ம் ஆண்டு உற்பத்தி 40 லட்சம் பைகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, 10-15% குறைவு. வரும் வாரத்தில் மஞ்சள் விலை அதிகரிக்க வாய்ப்பு அதிகம். ஆனால், அதிக இருப்பு அதிக விலையேற்றத்தைத் தடுக்கலாம்.

அக்ரி கமாடிட்டி!

  ஏலக்காய் (Cardamom)

ஏலக்காய் விலை கடந்த வாரம் சற்று அதிகரித்தே வர்த்தகமானது. வானிலை குறித்த கவலைகள் காரணமாகவும், சந்தைகளில் ஏலக்காய் வரத்து குறைவும் விலையேற்றத்துக்கு வழிவகுத்தது. கடந்த வியாழக்கிழமை, ஏலக்காய் ஏலமிடும் சந்தைக்கு மொத்த வரத்து 35 டன்களாக இருந்தது. ஸ்பாட் சந்தையில் அதிகபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.1,070 வரை வர்த்தகமாகியது. சராசரி விலையாக கிலோவுக்கு ரூ.853 வரை வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி!

அண்மையில் ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 28-வுடன் முடிவடைந்த காலத்தில், இந்தியாவில் ஏலக்காய் ஏலமிடும் சந்தைகளில் 3,03,489 டன் ஏலமிடப்பட்டுள்ளதாகவும், இதன் சராசரி விலை கிலோவுக்கு 906.24 ரூபாயாகவும் வர்த்தகமாகியது. இதுவே, கடந்த ஆண்டு இதேகாலத்தில் 3,94,289 டன்களாகவும், சராசரி விலை கிலோவுக்கு ரூ.592.01-ஆகவும் இருந்தது. வரும் வாரத்தில் தேவை காரணமாக ஏலக்காய் விலை அதிகரிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism