Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: செய்திகளின் கையில் சந்தை!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: செய்திகளின் கையில் சந்தை!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: செய்திகளின் கையில் சந்தை!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: செய்திகளின் கையில் சந்தை!

Published:Updated:

 டிரேடர்ஸ் பக்கங்கள்

தேர்தல் முடிவுகளுக்கு ஒன்பது டிரேடிங் நாட்களே இருப்பதால், சில காலத்துக்கு டைரக்ஷன்லெஸ் நிலை வந்துவிடக்கூடும் என்றும்; வரும் வாரத்தில் ஓப்பனிங்கில் கேப் வந்தால் ஒரு மணிநேரம் தாமதித்து பின்னரே டிரேடிங்கில் இறங்கவேண்டும் என்றும்; சிறிய அளவில்கூட ஓவர் நைட் பொசிஷன்களும், ஃப்யூச்சர்ஸ் பொசிஷன்களும் வைத்துக்கொள்ளக்கூடாத நேரமிது என்றும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம்.

திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பெரிய மாறுதல்களை சந்திக்காத நிஃப்டி புதனன்று கணிசமான இறக்கத்தையும், வெள்ளியன்று அதிவேகமான ஏற்றத்தையும் சந்தித்து, வார இறுதியில் வாராந்திர அளவில் 164 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது. வெள்ளியன்று நடந்ததைப் போன்ற திடீர் திருப்பங்கள் சந்தையில் இனிவரும் ஏழு டிரேடிங் தினங்களில் எந்த நேரத்திலும் வந்துவிடக்கூடும் என்பதை நினைவில்வைத்தே டிரேடர்கள் டிரேடிங் செய்ய வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தல் முடிவுகள் வெள்ளியன்று வெளிவர உள்ளது. தேர்தல் முடிவுகளின் பாதிப்பு குறைந்தபட்சம் அதை அடுத்துவரும் வாரத்தில் புதன் வரையிலுமே சந்தையில் இருக்கக்கூடும். எனவே, மிகுந்த கவனத்துடனும், ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடனும் ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும்.

டிரேடிங்குக்கு புதியவர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களும் அடுத்த ஏழு டிரேடிங் நாட் களுக்கு வியாபாரம் செய்வதை ஒட்டுமொத்தமாகத் தவிர்ப்பதே நல்லது. செய்திகளின் தாக்கம் அதிகமாக சந்தையின் மீது இருக்கப்போவதால் டெக்னிக்கல் கள் சந்தையில் முழுமையாக பொய்க்கும் காலத்தை எதிர்கொள்ளப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் வையுங்கள்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: செய்திகளின் கையில் சந்தை!

மேலே கொடுக்கப்பட்டுள்ள லெவல்களைத் தாண்டியோ/வெகுவாக கீழேயோ சந்தை மிகுந்த வாலட்டைலிட்டியுடன் செயல்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

09/05/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை. டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-:

ஜாக்ரன் (104.05), கெய்ர்ன் (335.10), அல்ட்ரா செம்கோ (2079.60), டென் (181.60), ஜி.எஸ்.பி.எல். (73.30), கோல் இந்தியா (308.65), ஹிந்த் சிங்க் (123.65), கெயில்(371), எவரெடி (55.80), எம் அண்ட் எம் (1102.55), ஹெச்.டி.எஃப்.சி. (884.60), ஹெச்.சி.எல். டெக் (1370.70), சிப்லா (392.30), பஜாஜ் ஹிந்த் (17.75), ரேணுகா (21.75), ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் (771.10), டிவி18ப்ராட்காஸ்ட் (24.95), எஸ்.எஸ்.எல்.டீ (183.40), எம் அண்ட் எம் ஃபைனான்ஸ் (246.20), ஐ.பி. பவர் (8.15) -குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:

டைட்டான் (277.50), மாரிக்கோ (237.50), ஜி.பி.பி.எல். (97.85), ஹெச்.டீ. மீடியா (92.15), சி.யூ.பி. (63.75), ஜூப்லியன்ட் ஃபுட் (985.75), சத்பாவ் (138.50), இண்டோகோ (152.65), பி.சி. ஜுவல்லர் (93.80)- நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):

ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் (756.80), கோட்டக் பேங்க் (850.75), ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் (1378.60), ஐ.ஆர்.பி. (131.75), ஹிந்த் பெட்ரோ (362.90), எஸ்ஸார் ஆயில் (68.55), கல்ப்ஆயில் கார்ப் (130.95), சின்டெக்ஸ் (51) -  டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் சில இவற் றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):

ஹெக்ஸாவேர் (139.05), இந்த் ஹோட்டல் (69.80), ஆன்மொபைல் (34.20), வீடியோ இண்ட் (159.80)-இதில் லாங் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிருங்கள்.

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்:

எஸ்ஸார் போர்ட்ஸ் (63.45), ஐ.என்.ஜி. வைஸ்யா (601.10), அல்ட்ரா செம்கோ (2079.60), ஜுப்லியன்ட் ஃபுட் (985.75), ஆயில் (494.15), பவர்கிரீட் (106.85), ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் (756.80), சி.இ.எஸ்.சி. (508.10), ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் (771.10), இன்ஜினீயர்ஸ் இந்தியா (241.20), டாடா மோட்டார்ஸ் (427.50), எல் அண்ட் டி (1342.70), அசோக் லேலாண்ட் (23.90), மாருதி (1974.85), ஐஓசி (286.55)-இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள் : (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்):

எஃப்.ஆர்.எல். (124), கிரான்யூல்ஸ் (370.45), இ.ஐ. ஹோட்டல் (74.45), அப்போலோ ஹாஸ்ப் (929.05) -இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்:

கெய்ர்ன் (335.10), இசட்.இ.இ.எல். (262.75), நேஷனல் அலுமினியம் (38.95), கோல் இந்தியா (308.65), என்.டி.பி.சி. (118.15), பவர்கிரீட் (106.85), பார்தி ஏர்டெல் (309.45), சவுத் பேங்க் (24), ஐ.டி.சி. (345.55), ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் (756.80), ஆர்.இ.சி. லிட் (249.75), ரிலையன்ஸ் (997.60), ஓ.என்.ஜி.சி. (347.95), பி.டி.சி. (67.30) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்):

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: செய்திகளின் கையில் சந்தை!

டாபர் (179.85), ஐடியா (135.80), பெட்ரோநெட் (143.65), ஹிந்த் யுனிலீவர் (556.30), என்.எம்.டி.சி. (149.85), கெயில் (371), மார்க்சன்ஸ் (23), ஹெச்.டி.எஃப்.சி. (884.60), சிப்லா (392.30), பஜாஜ் ஹிந்த் (17.75), ரேணுகா (21.75), ஜே.பி. இன்ஃப்ராடெக் (25), டிவி18ப்ராட்காஸ்ட் (24.95), விப்ரோ (513.95), ஹெச்.சி.சி. (20.05), விஐபி இண்ட் (88.50), எம்.டி.என்.எல். (17.15), எஃப்.எஸ்.எல். (29.95), டாடா குளோபல் (145), எக்ஸைடு இண்ட் (117), ஜி.பி.பி.எல். (97.85) டி.டி.எம்.எல். (8.70)- இவற்றை வியாபாரத்துக்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்:

எஸ்ஸார் போர்ட்ஸ் (63.45), எஃப்.எல்.எஃப்.எல். (92.15), செஞ்சுரி பிளைபோர்ட் (40.75), அல்ட்ரா செம்கோ (2079.60), டென் (181.60), கோல் இந்தியா (308.65), ஸ்டெர்லிங் பயோ (12.30), எவரெடி (55.80), ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் (756.80), சி.இ.எஸ்.சி. (508.10),

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் (771.10) இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள்.

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

எச்சரிக்கை: செய்திகள்  சந்தையின் டெக்னிக்கல்களை மொத்தமாக முடக்கிவிடும் காலகட்டத்தில் இருக்கின்றது சந்தை என்பதை மனதில் வைத்தே டிரேடர்கள் செயல்படவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism