Published:Updated:

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

சே.புகழரசி

பிரீமியம் ஸ்டோரி

தங்கம்!

''கடந்த ஒரு மாதமாகவே சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,275 டாலரிலிருந்து 1,310 டாலர் வரை வர்த்தகமானது. இதுவே, இந்திய கமாடிட்டி வர்த்தகமான எம்.சி.எக்ஸ்-ல் 28,300 ரூபாயிலிருந்து, 28,900 ரூபாய் வரை வர்த்தகமானது.  

தற்போது உக்ரைனில் நிலவிவரும் பதற்றத்தாலும், அமெரிக்காவில் இருந்து வெளியான பொருளாதாரம் குறித்த குறியீடு காரணமாகவும், சர்வதேச அளவில் தங்கத்தின் விலையானது அவுன்ஸுக்கு 1,285 டாலர் வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. அமெரிக்காவிலோ அல்லது உக்ரைன் பிரச்னையிலோ ஏதும் மாற்றம் இருந்தால் மட்டுமே, தங்கத்தின் விலை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பிருக்கிறது.

எம்.சி.எக்ஸ்-ல் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் மிக கவனமாக வர்த்தகம் செய்வது நல்லது. தேர்தல் முடிவுகளை அடுத்து ரூபாயின் மதிப்பில் வாலட்டைலிட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலி தங்கத்தின் விலையிலும் காணப்படலாம்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

இந்த வாரத்தைப் பொறுத்த வரை லோயர் லெவலில் வாங்கி ஹையர் லெவலில் விற்கலாம்.

வெள்ளி!

உலக வெள்ளி சர்வே 2014-ன்படி, 2013-ல் வெள்ளியின் தேவை 13 சதவிகிதமாக அதிகரித்தது. இது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்று வெள்ளி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

பார்கள்,  காயின்கள் மற்றும் நகைகளில் சில்லறை முதலீடு 76 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது பிசிக்கல் பார்களின் தேவை இருமடங்காக அதிகரித்து 127.2 மில்லியன் அவுன்ஸாக அதிகரித்துள்ளது. வெள்ளி காயின்கள் மற்றும் பதக்கங்களாக வாங்கப்பட்டது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து 118.5 மில்லியன் அவுன்ஸாக வாங்கப்பட்டது. தவிர, ஸ்கிராப் வெள்ளியின் சப்ளையும் குறைந்துள்ளது.  

இதன் விளைவு, வெள்ளியின் விலையில் பிரதிபலிக்கலாம்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 20 டாலரை தாண்டிச் செல்லும்பட்சத்தில் 21 - 21.50 டாலர் வரை செல்லலாம்.

அடிப்படை உலோகங்கள்!

காப்பர்: காப்பரை அதிகளவில் உபயோகப்படுத்தும் நுகர்வோரான சீனாவில் தேவை அதிகரிக்கும் என்று ஊகங்கள் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்டதையடுத்து, காப்பரின் விலை கடந்த பத்து வாரங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த புதன்கிழமையன்று அதிகரித்து காணப்பட்டது.

ஆசிய நாடுகளிலேயே கடந்த ஆண்டு உலகின் மொத்த நுகர்வு களில் சுமார் 40% சீனாவே பயன்படுத்தியுள்ளது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. சீன அரசு அந்த நாட்டின்  மூலதன சந்தைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது.  இது காப்பரின் விலையேற்றத்துக்கு மேலும் வழிவகுத்தது.

மேலும், வரும் வாரத்தில் சீன பொருளாதாரத்தை சரிசெய்ய, சீன அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் வாரத்தில் காப்பரின் விலை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இந்திய சந்தைகளில் தேர்தல் முடிவு காரணமாக ரூபாயின் மதிப்பை வலுவாக்கலாம். எனவே, ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே காப்பரின் விலை இருக்கும்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

ஜிங்க்: காப்பரை போலவே ஜிங்கின் விலையும் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த சில வர்த்தக தினங் களாகவே தொடர்ந்து ஜிங்க் இருப்பு குறைவாக இருப்பதும் விலை யேற்றத்துக்கு வழிவகுத் தது. வரும் வாரத்திலும் ஜிங்க் விலை அதிகரிக்கவே வாய்ப்பு கள் அதிகம்.

லெட்: லெட் விலையும் கடந்த வாரம், மூன்று மாதங் களில் இல்லாத அளவுக்கு விலை அதிகரித்தே வர்த்தகமானது. காரணம், லெட்டின் இருப்பும் குறைவாக உள்ளதே. குறிப்பாக 2 வர்த்தக தினங்களில் மட்டும் 1,93,475 டன்னிலிருந்து 1,92,175 டன்னாக இருப்பு குறைந்துள்ளது.  

நிக்கல்: வர்த்தகர்கள் லாபம் எடுக்கத் தொடங்கியதால் நிக்கல் விலை கடந்த வாரம் குறைந்தே வர்த்தகமானது. வரும் வாரத்திலும் நிக்கல் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம்.

அலுமினியம்: தொடர்ந்து இருப்பும் குறைந்து வருவதை யடுத்து, அலுமினியம் விலை கடந்த வாரம் சற்று அதிகரித்து வர்த்தகமானது. வரும் வாரத் திலும் அலுமினியம் இருப்பு குறைவாக இருப்பதால் லோயர் லெவலில் வாங்கலாம்.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)

கச்சா எண்ணெய்!

கடந்த வாரம் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித் துள்ளது. மேலும், ஆயில் இறக்குமதியும் சுமார் ஒரு நாளைக்கு 8.43 மில்லியன் பேரல் அதிகரித்துள்ளது. எனினும், அமெரிக்காவில் உள்ளார்ந்த தேவைகள் அதிகரிக்கலாம் என்றும், இதனால் மே மற்றும் ஜூன் மாதங்களில் கச்சா எண்ணெய் இருப்பு குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை அடுத்த சில வாரங் களுக்கு அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

சர்வதேச சந்தையில் விலை அதிகரித்தாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வரும் இந்தநிலையில் அதிக விலையேற்றம் தடுக்கப்படலாம்.

இயற்கை எரிவாயு!

தொடர்ந்து இயற்கை எரிவாயு தேவை குறைந்தே காணப்படு வதாலும், அதேசமயம் இயற்கை எரிவாயு இருப்பும் அதிகமாக இருந்து வருவதாலும் கடந்த மே 7-லிருந்து இயற்கை எரிவாயு விலை சுமார் 8% குறைந்துள்ளது.

அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் சராசரியைவிட வெப்பநிலை அடுத்த

15 நாட்களுக்கு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வெப்பமூட்டும் தேவை குறைந்து,

இயற்கை எரிவாயுவின் தேவையும் குறையலாம். வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை குறையவே வாய்ப்புள்ளது.

கமாடிட்டி - (மெட்டல் - ஆயில்)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு