இந்த வாரம் தங்கத்தின் விலைபோக்கு குறித்து விரிவாகச் சொல்கிறார் அலைஸ் ப்ளூ கமாடிட்டி நிறுவனத்தின் மண்டல மேலாளர் முத்துராஜ் பிரபு.

தங்கம்!

இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தகமாகி வருகிறது. தற்போது அமெரிக்காவிலிருந்து வெளியாகிவரும் பொருளாதாரம் சார்ந்த குறியீடுகள், அமெரிக்கப் பொருளாதாரம் வலுவடைந்து வருவதையே

காட்டுகிறது. இதனால் உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு சற்றுக் குறைந்துள்ளது.

மேலும், தங்கத்தை அதிகளவு உபயோகப்படுத்தும் நாடான சீனாவில் தொடர்ந்து பொருளாதார நிலை மந்தமாகவே இருப்பதால் தங்கத்தின் தேவை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கை களை எடுத்தது. இதனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் தற்போது ஒரு கட்டுக்குள் வந்திருக்கிறது. தவிர, மத்தியில் நிலையானதொரு ஆட்சியும் அமைந்துள்ளது. இதனால் இந்தியப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும்; ரூபாயின் மதிப்பும் உயரும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் வரும் வாரத்தில் தங்கத்தின் விலை குறையவே வாய்ப்பு அதிகம்.

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் சப்போர்ட் லெவல்: 1,280- 1,250 - 1,200 (டாலர்). ரெசிஸ்டன்ஸ் லெவல்: 1,300 - 1,330 - 1,380 (டாலர்).

இதுவே, இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் சப்போர்ட் லெவல்: ஜூன் கான்ட்ராக்ட்: ரூ.27,040 - 26,620 - 26,140. ரெசிஸ்டன்ஸ் லெவல்: ரூ.27,600- 28,050 - 28,620.

பரிந்துரை: ஜூன் கான்ட்ராக்ட் (பொஸிஷனல்) ரூ.27,800-க்கு மேல் வாங்கலாம். இலக்கு விலை : ரூ.28,200 - 28,500 - 28,800. ஸ்டாப்லாஸ்: ரூ.27,700. ஜூன் கான்ட்ராக்ட்: ரூ.27,200-க்குக் கீழ் விற்கலாம். இலக்குவிலை: ரூ.27,000 - 26,600 - 26,200. ஸ்டாப்லாஸ்: ரூ.27,500.Ó

வெள்ளி!

தொடர்ந்து அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ந்து வருவதை யடுத்து, அமெரிக்காவின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்ற வாய்ப்புள்ளது. இது வெள்ளியின் விலையிலும் எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடைந்த நிலையிலேயே காணப்படுவது வெள்ளியின் விலை மேலும் குறைய வாய்ப்பாக அமையலாம்.

அடிப்படை உலோகங்கள்!

காப்பர்: காப்பரை அதிகளவு பயன்படுத்தும் நாடான சீனாவிலிருந்து வெளியான ஹெச்.எஸ்.பி.சியின் உற்பத்திக் குறியீடு, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 49.7 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் 48.1 புள்ளிகளாக இருந்தது. இதனால் கடந்த வாரம் காப்பரின் விலை சற்று அதிகரித்து வர்த்தகமாகியது. இதையடுத்து வரும் வாரத்தில் காப்பருக்கான தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு காப்பரின் விலையில் எதிரொலிக்கலாம்.

நிக்கல்: உலகின் மிகப் பெரிய தாது சுரங்கமான இந்தோனேஷியாவிலிருந்து, நிக்கல் இறக்குமதி செய்வது சீனாவில் 67% குறைந்துள்ளது. மேலும், லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் நிக்கல் பீரிமியம் 46 டாலரிலிருந்து 22 டாலராகக் குறைந்துள்ளது. இது ஸ்பாட் டிமாண்ட் குறைந்ததையே காட்டுகிறது. வரும் வாரத்தில் இந்த பிரீமியம் 20 டாலருக்கு கீழாகக் குறைய வாய்ப்புகள் உள்ளது.

ஜிங்க்: லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்சில் ஜிங்க் பிரீமியம் தொடர்ந்து மாற்றம் இல்லாமல் 5-6 டாலருக்குள்ளே வர்த்தகமாகி வருகிறது. வரும் வாரத்தில் இந்த பிரீமியம் குறைந்தால் ஜிங்க் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

கச்சா எண்ணெய்!

சீனாவில் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஹெச்.எஸ்.பி.சியின் உற்பத்திக் குறித்த குறியீடு அதிகரித்துள்ளதால், சீனாவிலும் கச்சா எண்ணெய்யின் தேவை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. தவிர, அமெரிக்காவில் இருப்பு அதிகளவு குறைந்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே நிலவிவரும் பிரச்னை காரணமாக கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படலாம். இது கச்சா எண்ணெய் விலையில் எதிரொலிக்கலாம்.

சவுதி அரேபியாவுக்கு அடுத்து, இரண்டாவது ஆயில் ஏற்றுமதியாளர் ரஷ்யாவாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்பட்சத்தில் விலை குறையலாம்.

இயற்கை எரிவாயு!

அமெரிக்காவில் இயற்கை எரிவாயு இருப்பு அதிகமாக இருப்பதாகவும், தேவை குறைந்ததாலும் விலை சற்று குறைந்தே வர்த்தகமாகியது.

வரும் வாரத்திலும் இயற்கை எரிவாயு விலை குறையவே வாய்ப்புகள் அதிகம். எனினும் இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இயற்கை எரிவாயு விலை இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்தே வர்த்தகமாகும்.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044 66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!