Published:Updated:

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

ச.ஸ்ரீராம்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

ச.ஸ்ரீராம்

Published:Updated:

தங்கம்!

''இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் இந்த வாரம் தங்கத்தின் விலை இறக்கத்துடனேயே வர்த்தகமாகி வருகிறது. கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரக் குறியீடுகள் முன்னேற்றத்துடன் காணப்படுவதும், அமெரிக்கப் பொருளாதாரம் வலுவடைந்து வருவதாலுமே இந்த இறக்கம் ஏற்பட்டிருக்கிறது.

மேலும், கடந்த ஆண்டு தங்கத்துக்கான தேவையில் முன்னணி யில் இருந்த சீனாவில் தொடர்ந்து தேவை குறைந்துவருவதும் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைய இன்னொரு காரணம். இந்திய பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும் என்பதாலும், ரூபாயின் மதிப்பும் நல்ல அளவில் வர்த்தகமாகி வருவதாலும் தங்கத்தின் மீதான முதலீடு குறைய வாய்ப்புள்ளதால் அதன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் வாரங்களில் 10 கிராம் தங்கத்தின் விலை 26,000 வரை குறையும் என எதிர்பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் சப்போர்ட் லெவல்: 1225, 1185 டாலர்; ரெசிஸ்டன்ஸ் லெவல் 1275, 1295 டாலர்; கமாடிட்டி வர்த்தகத்தில் சப்போர்ட் லெவல் ரூ.26.000, ரூ.25.000; ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ.27,500, ரூ.28,000.''

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

  வெள்ளி!

அமெரிக்கச் சந்தைகள் தொடர்ந்து வலுவடைந்து வருவதாலும், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் வெள்ளியின் விலை குறையும். ஆனால், தங்கத்தின் விலை அளவுக்குக் குறைய வாய்ப்பில்லை. மேலும், அமெரிக்கச் சந்தைகளின் தாக்கம் அதிகம் உள்ளதால், வெள்ளியின் விலை குறைந்தே காணப்படும்.

அடிப்படை உலோகங்கள்!

காப்பர்: சீனாவில் காப்பரின் தேவை அதிகரித்துள்ளதாலும், அமெரிக்காவிலிருந்து வெளியான புள்ளிவிவரங்களில் நுகர்வோர்களின் மனோநிலை பாசிட்டிவாக இருப்பது தெரியவந்தாலும், கையிருப்பு 0.7% குறைந்ததாலும் கடந்த வாரத்தில் காப்பரின் விலை அதிகரித்து காணப்பட்டது. என்றாலும், ஜெர்மனியிலிருந்து வெளியான விற்பனை குறித்த புள்ளிவிவரங்கள் நெகட்டிவாக இருந்தாலும் மேற்கொண்டு காப்பரின் விலை உயராதபடிக்கு தடுக்கப்பட்டது. அடுத்த வாரத்தில் காப்பரின் விலை சிறிது ஏற்ற இறக்கத்தோடு இருக்கும் என்றாலும், இந்திய சந்தைகளில் ரூபாயின் மதிப்பின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப காப்பர் விலையில் மாற்றங்கள் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

நிக்கல்: சர்வதேச அளவில் நிக்கலின் உபரி 3,600 டன்களாக உள்ளது. இது சென்ற ஆண்டைவிட ஏறக்குறைய 52% குறைவு. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தின்போது 7,600 டன் நிக்கல் உபரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சில புள்ளிவிவரங்கள் நெகட்டிவாக இருப்பதால், நிக்கலின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிக்கலின் ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ.1124-ஆக இருக்கும். இது உடையும்பட்சத்தில் ரூ.1093-ஆக இருக்கும். ரெசிஸ்டன்ஸைப் பொறுத்தவரை, ரூ.1,124-ம் அது உடையும்பட்சத்தில் ரூ.1,135 வரையும் செல்ல வாய்ப்புண்டு.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

கச்சா எண்ணெய்!

அமெரிக்காவில் பெட்ரோலுக்கான தேவை அதிகரிக்கும் என்கிற புள்ளிவிவரம் வெளியானதைத்

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்

தொடர்ந்து கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்து வர்த்தகமாகியது. நைமேக்ஸ் சந்தையில் டபிள்யூ.டி.ஐ. கச்சா எண்ணெய்க்கான ஜூலை எக்ஸ்பைரி 0.85% உயர்ந்திருக்கிறது. மேலும், உக்ரைன் பிரச்னையைக் காட்டிலும், லிபியாவின் பிரச்னை பெரிய அளவில் எழுந்ததால், கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது. தவிர, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு 1.8 மில்லியன் பேரல்கள் குறைந்திருக்கிறது. வரும் வாரத்தில் ரூபாயின் மதிப்பு உயர்வதைப் பொறுத்து நம் நாட்டில் கச்சா எண்ணெய் விலை மாறும் என்பதால் கமாடிட்டி டிரேடர்கள் கவனமாக டிரேட் செய்வது நல்லது.

இயற்கை எரிவாயு!

கடந்த வாரத்தில் மூன்று டிரேடிங் தினங்களில் எம்.சி.எக்ஸ். சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 5.8% உயர்ந்திருக்கிறது. 200 நாள் மூவிங் ஆவரேஜான 262 ரூபாயையட்டியே கடந்த இரண்டு வாரங்களாக இயற்கை எரிவாயு டிரேடிங் ஆகிறது. எனினும், ஐரோப்பாவில் வருகிற குளிர்காலத்தில் இயற்கை எரிவாயுவின் தேவை அதிகமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பினாலும் உக்ரைன் பிரச்னை தொடர்ந்து ஒருமுடிவுக்கு வராமலே இருப்பதாலும் இயற்கை எரிவாயுவின் விலை உயரும் என்றே அனலிஸ்ட்கள் கருதுகிறார்கள்.

கமாடிட்டி - மெட்டல் - ஆயில்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism