Published:Updated:

கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!

ச.ஸ்ரீராம்

பிரீமியம் ஸ்டோரி

   தங்கம்!

'இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் சென்ற வாரம் இறக்கத்தில் இருந்த தங்கத்தின் விலை, இந்த வார இறுதியில் சற்று ஏற்றத்துடன் காணப்பட்டது. இதற்குக் காரணம், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வெளிவந்த வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகள்தான். ஆனால், இந்த ஏற்றத்தைத் தற்காலிகமான ஏற்றமாகவே கருத வேண்டும். ஏனெனில், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து நல்ல அளவில் வர்த்தகமாவதால், தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை குறைவது தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவிகிதத் திலிருந்து 6 சதவிகிதமாகக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டின் போது அறிவிக்கப்படும் என்ற செய்தியாலும் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்தது. இனிவரும் வாரங்களில் 10 கிராம் தங்கத்தின் விலை 26,000 வரை குறையும் என எதிர்பார்க்கலாம். தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் சப்போர்ட் லெவல்: 1227, 1192 டாலர். ரெசிஸ்டன்ஸ் லெவல்: 1288, 1332 டாலர். எம்.சி.எக்ஸ். சந்தையில் சப்போர்ட் லெவல்: ரூ.25,570, ரூ25,010. ரெசிஸ்டன்ஸ் லெவல்: ரூ.26,430, ரூ.26,970.

கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!

  கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய் நல்லதொரு  சப்போர்ட்டில் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்காவில்  பெட்ரோலுக்கான தேவை குறித்த செய்திகளைப் பொறுத்தே கச்சா எண்ணெய் அடுத்த இலக்கை அடையும். உக்ரைன், லிபியா பிரச்னை, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்புக் குறைவு, ஜூலை மாத அமெரிக்க வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் 13% குறைந்துள்ளது போன்ற காரணங்கள் இருப்பினும், கச்சா எண்ணெய் விலை உயரவே  வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் சப்போர்ட் லெவல்: 101, 99.4 டாலர். ரெசிஸ்டன்ஸ் லெவல்: 104, 107.5 டாலர். எம்.சி.எக்ஸ். சந்தையில் சப்போர்ட் லெவல்: ரூ.5,812, ரூ.5,960. ரெசிஸ்டன்ஸ் லெவல்: ரூ. 6,150, ரூ.6278.'

கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!

  வெள்ளி!

தங்கத்தின் விலையில் தொடர் மாற்றம் ஏற்படுவதாலும், ரூபாய் நல்ல மதிப்பில் வர்த்தகமாகி வருவதாலும் வெள்ளியின் விலை குறைந்தே காணப்படுகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 4.22% குறைந்துள்ள தாலும், வெள்ளியின் விலை வரும் வாரங்களிலும் குறைய வாய்ப்புள்ளது. எனினும், தங்கம் அளவுக்கு இதில் ஏற்ற இறக்கங்கள் இருக்காது.

கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!

காப்பர்!

அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. சீனாவில் காப்பருக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால்,  உலக அளவில் பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் காப்பர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. சீன அரசு வளர்ச்சிக்கான மாற்றங்களைக் கொண்டுவந்தால்,  காப்பர் விலை உயர வாய்ப்புண்டு. மேலும், கமாடிட்டி சந்தையில் ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே காப்பரின் விலை அமையும் எனக் கூறப்படுகிறது.

கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு