பிரீமியம் ஸ்டோரி
அக்ரி கமாடிட்டி!

தரமற்ற மஞ்சள் வரத்து மற்றும் தேவை குறைவு போன்ற காரணங்களால் மஞ்சள் விலையானது கடந்த வாரத்தில் குறைந்து வர்த்தகமானது. கடந்த வியாழக்கிழமையில் நிஜாமாபாத் மற்றும் ஈரோடு மஞ்சள் மண்டிகள் முறையே 4,500 பைகள் மற்றும் 2,500 பைகள் (ஒரு பை என்பது 75 கிலோ) வந்தது. ஆந்திரப்பிரதேசத்தில் 2013-14-ல் 0.53 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் 0.68 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு மஞ்சள் பயிரிடப்பட்டது. 2013-14-ல் மொத்த மஞ்சள் உற்பத்தி 10-15% குறைந்து, 40 லட்சம் பைகளாகப் பதிவாகி உள்ளது. தரமற்ற மஞ்சள் வரத்து, தேவை குறைவு, அதிகக் கையிருப்பு போன்ற காரணங்களால் மஞ்சள் விலை வரும் வாரத்திலும் இதே நிலையில்தான் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

கடந்த வாரத்தில் ஜீரகம் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. உள்நாடு மற்றும் வெளிநாட்டில் ஜீரகத்தின் தேவை அதிகரித்துக் காணப்பட்டாலும், அதிக உற்பத்தி மற்றும் அதிக வரத்து போன்ற காரணங்களால் விலையேற்றம் தடுக்கப்பட்டது. குஜராத்தில் 4,55,000 ஹெக்டேரிலும், ராஜஸ்தானில் 3,90,000 ஹெக்டேரிலும் ஜீரகம் பயிரிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தைகளுக்கு ஜீரகம் சப்ளை செய்யும் நாடுகளான சிரியா மற்றும் துருக்கியில் உற்பத்தி குறைந்துள்ளது. சந்தை அறிக்கையின்படி, ஊஞ்ஹா சந்தையில் கடந்த வியாழக்கிழமை வரத்து 14,000 பைகளான (ஒரு பை என்பது 55 கிலோ) இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல்-டிசம்பரில் ஜீரகம் ஏற்றுமதி 89% அதிகரித்து 96,500 டன்கள் பதிவாகி உள்ளது. தேவையும் அதிகமாக இருப்பதால் விலை அதிகமானாலும் அதிக உற்பத்தியும் வரத்தும் விலையேற்றத்தைத் தடுக்கும்.

அக்ரி கமாடிட்டி!

 சர்வதேச சந்தையில் சோயாபீன் தேவை குறைந்ததன் காரணமாக கடந்த வாரத்தில் அதன் விலை குறைந்தது. மூன்றாவது அட்வான்ஸ்டு எஸ்டிமேட்டின்படி, 2012-13-ல் சோயாபீன் உற்பத்தியானது 14.67 மில்லியன் டன்களாகப் பதிவானது. ஆனால், 2013-14-ல் இது 11.9 டன்களாக இருந்ததாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. அதேபோல, சோயாமீல் ஏற்றுமதி கடந்த ஏப்ரலில் 89,883 டன்களாக இருந்தது. இது அதற்கு முந்தைய மாதத்தைவிட 9.6% குறைவு. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 59.73% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குத் தேவை குறைவு மற்றும் அதிக விலை காரணமாக இருந்துள்ளது. சர்வதேச சந்தையின் தேவை குறைவு காரணமாக வரும் வாரத்திலும் சோயாபீன் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி!

 தேவை குறைவு, அதிக வரத்து காரணமாகக் கடந்த வாரத்தில் விலை குறைந்தது. மூன்றாவது அட்வான்ஸ்டு எஸ்டிமேட்டின்படி, பருப்பு வகைகளின் உற்பத்தியானது 2013-14-ல் 19.6 மில்லியன் டன்னாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 19.8 மில்லியன் டன்னாக இருந்தது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா மற்றும் ஆந்திராவில்  பெய்த மழையால் அறுவடை தாமதமானதோடு, பயிர்களும் சேதமடைந்துள்ளன. வேளாண்மை அமைச்சகத்தின் தகவல்படி, தற்போது 10.21 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் கொண்டைக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தைவிட அதிகம். அதிக வரத்து, அதிக உற்பத்தி போன்ற காரணங்களால் விலை பாதிப்பு இருக்கும். ஆனால், குறைந்த விலையில் வர்த்தகர்கள் வாங்க ஆரம்பித்தால் விலையிறக்கம் தடுக்கப்படும்.

அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு