Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: அதிக பலம் பெறும் காளைகள்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: அதிக பலம் பெறும் காளைகள்!

பிரீமியம் ஸ்டோரி

 டிரேடர்ஸ் பக்கங்கள்

இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள் இந்திய சந்தையின் போக்கினை நன்றாகவே பாதிக்க வாய்ப்புள்ளது என்றும்; ஒரு இறக்கம் வந்து முடியும் வரை பெரிய பொசிஷன்களையோ, ஓவர்நைட் பொசிஷன்களையோ எடுக்காதீர்கள் என்றும்; இறக்கம் வரவில்லை என்றால் பெரிய அளவிலான வியாபாரத்தைத் தவிர்ப்பதே நல்லது. செய்திகளின் மீது கவனம் வைத்தே ஒவ்வொரு நிமிடமும் வியாபாரம் செய்யவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம்.

வாலட்டைலிட்டியையும், புதன் அன்று குளோஸிங்கில் சிறிய அளவிலான இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி, வெள்ளியன்று இறுதியில் வாராந்திர ரீதியாக 353 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது. சற்று ஓவர்பாட்டாக இருக்கிற நிலையே தொடர்கிறது. இருப்பினும் ஏறுகிற சந்தைக்கு ரெசிஸ்டன்ஸ் கிடையாது என்ற ரூலை மனத்தில்கொண்டே டிரேடர்கள் செயல்பட வேண்டும்.

வரும் வாரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மே மாத இன்ஃப்ளேஷன் டேட்டாவும், ஏப்ரல் மாத மேனுபேக்ஸரிங் மற்றும் இண்டஸ்ட்ரியல் புரொடக்ஷன் டேட்டாவும் வெளிவர உள்ளது. டேட்டாக்கள் சந்தையின் எதிர்பார்ப்புக்கு இணையாக இல்லாதபட்சத்தில் சிறியதொரு இறக்கம் வரலாம்.

எனினும், ஷார்ட் சைடு வியாபாரத்தைத் தற்போதைக்கு முழுமையாகத் தவிர்ப்பதே நல்லது. ஓரளவுக்கு இறக்கம் வரவேண்டும் என்றால், குறைந்தபட்சமாக இரண்டு சம அளவிலான (ஏறக்குறைய 40 புள்ளிகள் ஒவ்வொருநாளும்) நெகட்டிவ் குளோஸிங்குகள் அவசியம் நடந்தேயாக வேண்டும். அதுவரை டிரெண்ட் ரிவர்ஸலுக்கு வாய்ப்பேயில்லை எனலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: அதிக பலம் பெறும் காளைகள்!

குறைந்த ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் செய்துகொள்வதே சிறந்ததாக இருக்கும். ஏறக்குறைய ஒருமாத காலத்தில் சந்தை கடந்து வந்திருக்கும் ஏற்றத்தின் வேகமும் சீற்றமும் கவலை கொள்ளவைக்கும் அளவிலேயே இருக்கிறது. எனவே, டிரேடராகவே இருந்தாலும் அதீத கவனத்துடன் செயல்படுங்கள்.

06/06/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-: எஃப்எல்எஃப்எல்(100.30), ஜிடிஎல்(227.50), பிரதிபா(48.60), எஸ்ஜேவிஎன்(25.90), பிந்தால் அக்ரோ(37.30), எல் அண்ட் டி (1691.05), ராலீஸ்(189), கோட்டக் பேங்க்(902.75), சிட்டி கேபிள்(25), பெனின் லேண்ட்(45.20), எம்ஓஐஎல்(329.55), நொய்டா டூல்(35.65), எலெக்ட் காஸ்ட்(34.65), என்டிபிசி(165.50), ஐபி பவர்(14.45), மஹா பேங்க்(54.20), விஜயா பேங்க்(56.90), எம் அண்ட் எம்(316.50), ஜிஎம்டிசி லிட்(167.80), ஹிந்த்ஆயில் எஸ்ப்(67.25), 3ஐ இன்ஃபோ டெக்(10.05), பேங்க் ஆஃப் இந்தியா(325.20), பேங்க் ஆஃப் இந்தியா(325.20), ருச்சி சோயா(47.60)-குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்- ஆர்பிட் கார்ப்(24.35), எம்சிஎக்ஸ்(591.05), இசட்இஇஎல்(274.80), ஜெட் ஏர்வேய்ஸ்(258.90), பிரிஸம் சிமென்ட்(70.45), ஹேவல்ஸ்(1170) நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):- அமரராஜா பேட்(430.35), ராடிகோ(114.20), இஐ ஹோட்டல்(98.55), எஸ்ஸெல் ப்ரோபேக்(100.65), பிந்தால் அக்ரோ(37.30), உஷர் அக்ரோ(41.55), அதானி போர்ட்ஸ்(257.65), ஜேஎம் ஃபைனான்ஷியல் (41.50), ஜிஎம்டிசி லிட்(167.80), கேசிபி சுகர்(27.75), அப்போலோ டயர்(194.15)-  டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): இந்த வகையில் குறிப்பிடும்படியான பங்குகளே இல்லை.

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: அமரராஜா பேட்(430.35), ராடிகோ(114.20), எப்எல்எஃப்எல்(100.30), ஹெச்டிஎஃப்சி(935.15), ஐடிசி(336.70), கோத்ரெஜ் இண்ட் (321.85), எஸ்ஸெல்பேக்(100.65), பிந்தால் அக்ரோ(37.30), ஜிஎஸ்பிஎல் (83.70), உஷர் அக்ரோ(41.55), நொய்டா டூல்(35.65), சிப்லா (396.15), எஸ்ஆர்இஐ இன்ப்ரா (49.80), டாடாமோட்டார்(439.10), கெயில்(422.10)- இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளைத் தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள் : (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்):- பேங்க் ஆஃப் இந்தியா(325.20), டிரைடர்பைன்(97.15), சன்பார்மா (599.65), டின்ப்ளேட்(80.85), ஹிந்த்ஆயில் எக்ஸ்ப்(67.25), டிவிஎஸ் மோட்டார்(130.80), டிபி ரியாலிட்டி(87.45), இந்தியாபுல்ஹவுசிங் ஃபைனான்ஸ்(388.55), ஜேஎஸ்எல் (54.55)-இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: இன்ப்ராடெல்(244.75), த்ரிவேணி டர்பைன்(97.15), பிடிலைட் இண்ட்(298), ராடிகோ(114.20), எஃப்எல்எஃப்எல்(100.30), ஜிடிஎல் (227.50) ஹெச்டிஎஃப்சி(935.15), ஏசியன் பெயின்ட்(505.35), ஹெச்சிஎல் டெக்(1327.70) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): மாதர்சன்சுமி(308.80), டிவிஎஸ்மோட்டார்(130.80), பவர் கிரிட்(128.10), கோல் இந்தியா (390.65), இசட்இஇஎல்(274.80), எஸ்ஜே விஎன்(25.90), ஹெச்எஃப்சிஎல்(16.05), எல் அண்ட் டி (1691.05) இவற்றை வியாபாரத்துக்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: எஃப்எல்எஃப்எல்(100.30), பிரதிபா (48.60), பிரஸ்டீஜ்(229.30), ஜிஹெச்பிஎல்(83.70), எலெக்ட்காஸ்ட்(34.65), ஜிஎம்டிசி(167.80), நெட்வொர்க்18 (65.90), கெயில்(422.10), லஷ்மிவிலாஸ்(107.90), மணப்புரம்(23.65)- இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள்.

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு