Published:Updated:

கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!

ச.ஸ்ரீராம்

கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!

ச.ஸ்ரீராம்

Published:Updated:

 கச்சா எண்ணெய்

''கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. ஈராக்கின் வடபகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளை ஈராக் புரட்சியாளர்கள் பிடித்துவைத்திருப்பதால் கச்சா எண்ணெய் சப்ளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்து, விலையும் அதிகரித்திருக்கிறது.  

ரூபாய் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டா லும் சர்வதேச சந்தையில் உள்ள பிரச்னை காரணமாக இந்திய சந்தை யிலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். வர்த்தகர்கள் ஸ்டாப்லாஸ் ரூ.6250 வைத்துக்கொண்டு ரூ.6330 - ரூ.6350 என்ற விலையில் வாங்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் சப்போர்ட் லெவல்: ரூ.107-105.50 டாலர். ரெசிஸ்டன்ஸ் லெவல்: ரூ.109 டாலர். இந்திய கமாடிட்டி சந்தையில் சப்போர்ட் லெவல்: ரூ.6,330-ரூ.6,250. ரெசிஸ்டன்ஸ் லெவல்: ரூ.6,530.''

தங்கம்!

கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!

அமெரிக்க, சீனப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்தது.  இந்திய ரூபாயின் மதிப்பும் 60 ரூபாய்க்குக் கீழ் வர்த்தகமாகி வருவதால் தங்கத்தின் விலை குறைவது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருப்பதால், தங்கத்தின் விலை குறையலாம் என கூறப்படுகிறது. 10 கிராம் தங்கத்தின் விலை 26,000 ரூபாய் என்ற அளவுக்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஈராக்கில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் குழப்பத்தால் அதிக விலையிறக்கம் தடுக்கப்படும். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1272 டாலர் அளவில் வர்த்தகமாகி வருகிறது. சப்போர்ட் 1245, 1220 டாலர். ரெசிஸ்டென்ஸ் 1285, 1,305 டாலர்.  

வெள்ளி!

ஐரோப்பிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் வெள்ளி நல்ல விலையில் வர்த்தகமாகி வருகிறது. ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டாலும் வெள்ளியின் விலையில் முன்னேற்றம் இருக்கும்.

பட்ஜெட்டுக்குமுன் பெரிய மாற்றம் இருக்காது!

கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!

சிவசுப்ரமணியம், சீனியர் ரிசர்ச் அனலிஸ்ட், ஆதித்யா பிர்லா மணி.

''பணவீக்கம் குறைந்ததாலும், ஃபேக்டரி அவுட்புட்  உயர்ந்ததாலும் ரூபாய் மதிப்பு அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், தற்போது ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது. ஈராக் பிரச்னை மற்றும் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். ரூபாய் மதிப்பு 59.20-க்கு  கீழ் தொடர்ந்து வர்த்தகமானால், இலக்கு விலை ரூ.59.80-ரூ.60 வரை செல்லும். பட்ஜெட்டுக்குமுன் ரூபாயின் மதிப்பு பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் ரூ.58.50-ரூ.60.50 என்கிற அளவில் வர்த்தகமாகும். பட்ஜெட்டுக்குபின், 58.78-க்கு கீழ் செல்லும்போது ரூபாய் மதிப்பில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.''

கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!
கமாடிட்டி: மெட்டல் - ஆயில்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism