Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

Published:Updated:

கடுகு (MUSTARD SEED)

அக்ரி கமாடிட்டி!

அதிக தேவை மற்றும் குறைவான வரத்தினால்  சென்ற வாரத்தில் கடுகு விலை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்தது. கடந்த வியாழன் அன்று  கடுகு ஜூலை கான்ட்ராக்ட் ஒரு குவிண்டால் ரூ.3,462-க்கு வர்த்தகமானது. இது அதற்கு முந்தைய நாள் வர்த்தக விலையை (ரூ.3,454) விட 0.23% அதிகம். ஜெய்ப்பூர் ஸ்பாட் மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் கடுகு ரூ.3,455-3,460 வரை விலை போனது. இதற்கு முந்தைய வர்த்தக விலைக்கும் இந்த விலைக்கும் எந்தவொரு மாற்றமும் இல்லை.  கடுகு எண்ணெய் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சமீபத்திய  அறிக்கையில், கடுகு மீல் ஏற்றுமதி அளவு (95,847 மெட்ரிக் டன்) கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 9% அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ஜீரகம் (JEERA)

அக்ரி கமாடிட்டி!

அதிக தேவை காரணமாக ஜீரகத்தின் விலை  கடந்த வாரத்தில் அதிகரித்தது. ஜீரக ஏற்றுமதிக்கு அதிக விலை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பால் விலை உயர்ந்தது. போதுமான வரத்து மற்றும் உற்பத்தியால் ஸ்பாட் மார்க்கெட் சந்தையில் விலையானது மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்பட்டது. குஜராத் மாநிலத்தின் ஜீரக உற்பத்தியானது 2013-14-ல் 36% அதிகரித்து 3,19,000 டன்னாக இருக்கிறது.  இருப்பினும், ஜீரக ஏற்றுமதி நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம்  காரணமாக உற்பத்தியானது குறைந்துள்ளது.

ஊஞ்ஹா மண்டியில் 20 கிலோ ஜீரகம் ரூ.1,800 மற்றும் ரூ.2,200-க்கும், ராஜ்கோட் சந்தையில் ரூ.1,850-2030-க்கும் வர்த்தகமானது.

 மஞ்சள்(Turmeric)

அக்ரி கமாடிட்டி!

கடந்த வாரத்தில் மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமானது. தரமற்ற மஞ்சள் வரத்து மற்றும் குறைவான தேவை காரணமாகவே மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. கடந்த புதன்கிழமை அன்று மட்டும் நிஜாமாபாத் சந்தைக்கு 15,000 பைகள் வந்தன. ஆனால், அஸ்ஸாம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தரமற்ற மஞ்சள் வர்த்தகம் காரணமாக 40% மஞ்சள் மட்டுமே வர்த்தகமானது. விலை குறைவாக உள்ளதால் வியாபாரிகள் ஏற்றுமதி ஆர்டர்களை எதிர்பார்த்து ஸ்டாக் செய்யலாம் என தெரிகிறது. கடந்த வாரம் ஈரோடு மண்டியில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.4,004-6,214 ரூபாய்க்கு வர்த்தகமானது. சேலம் ஹைபிரீட் வகை விரலி மஞ்சள் 5,386-6319 ரூபாய்க்கு விற்பனையானது.

 சோயா ஆயில் (SOY OIL)

அக்ரி கமாடிட்டி!

கடந்த வராம் வியாழக்கிழமை அன்று ஜூலை கான்ட்ராக்ட் சர்வதேச சந்தை விலையில் ஒரு பவுண்ட் 38.58 சென்ட்டில் முடிவடைந்தது. இதற்கு முந்தைய முடிவைவிட இது 0.42% அதிகம். சமீபத்திய வாராந்திர ஏற்றுமதி அறிக்கையில் இதற்கு முந்தைய வாரத்தைவிட நிகர விற்பனை அதிகரித்து 71,800 மெட்ரிக் டன்னாக இருந்தது. இருப்பினும், முந்தைய வாரத்தைவிட ஏற்றுமதியின் அளவானது 34% குறைந்து 4,500 மெட்ரிக் டன்னாக உள்ளது.  கடுமையான விநியோக தேக்கம் மற்றும் அரவைக் குறைபாடு காரணமாக சோயாபீன் விற்பனையானது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோயா ஆயில் ஜூலை டெலிவரி கான்ட்ராக்ட் முந்தைய முடிவை விட 0.22% உயர்ந்து ரூ.667.40-ஆக முடிந்துள்ளது.

அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism