Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் கரெக்ஷன் வந்துபோகலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் கரெக்ஷன் வந்துபோகலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் கரெக்ஷன் வந்துபோகலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் கரெக்ஷன் வந்துபோகலாம்!

Published:Updated:

 டிரேடர்ஸ் பக்கங்கள்

டேட்டாக்கள் சந்தையின் எதிர்பார்ப்புக்கு இணையாக இல்லாதபட்சத்தில் சிறியதொரு இறக்கம் வரலாம் என்றும்; சந்தை கடந்து வந்திருக்கும் ஏற்றத்தின் வேகமும் சீற்றமும் கவலைகொள்ளவைக்கும் அளவிலேயே இருக்கிறது என்றும்; அதீத கவனத்துடன் செயல்படவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம்.

இந்த வாரம் மூன்று நாள் ஏற்றத்திலும் இரண்டு நாள் கணிசமான அளவு இறக்கத்திலும் நிஃப்டி குளோஸாகி வார இறுதியில் ஏறக்குறைய 41 பாயின்ட் அளவுக்கு இறக்கத்தில் வாராந்திர ரீதியாக குளோஸானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரும் வாரத்தில் திங்களன்று இன்ஃப்ளேஷன் (ஹோல்சேல் பிரைஸ்) டேட்டா வெளிவர உள்ளது.

அமெரிக்க டேட்டாக்களில் செவ்வாயன்று இன்ஃப்ளேஷன் டேட்டாவும், புதனன்று க்யூஇ (டிரஷரி, டோட்டல், எம்பிஎஸ்) டேட்டாவும், ஃபெடரல் ரிசர்வின் வட்டிவிகித முடிவும் வெளிவர இருக்கிற முக்கிய டேட்டாக்களாகும்.

இந்த டேட்டாக்களின் பாதிப்பு இந்தியச் சந்தையில் நன்றாகவே எதிரொலிக்க வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்வதே நல்லது.

இதுபோன்ற சூழ்நிலைகளில் டெக்னிக்கல்கள் அடிக்கடி தோற்க வாய்ப்பிருப்பதால் முழுக்க முழுக்க இண்டிகேட்டர்களை நம்பி வியாபாரம் செய்யும் டிரேடர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும்.

ஹைரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்கள் அடிப்படை வலிமையாக உள்ள பங்குகளில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் மட்டுமே வியாபாரம் செய்யலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் கரெக்ஷன் வந்துபோகலாம்!

இன்னமும் மூன்று நெகட்டிவ் குளோஸிங்குகள் (கணிசமான அளவு -50/60 பாயின்ட்கள்) வந்தால் வேகமானதொரு இறக்கம் வந்துவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

13/06/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-: டிவிஎஸ் மோட்டார் (130.10),நோசில்(24.00),ஹிமாத்சீட் (61.20),விஐபிஇண்ட்(102.10), பல்ராம்பூர்சினி (79.45), கும்மின்ஸ்இண்ட் (657.85),மஹிந்திராலைஃப்(551.75), என்பிசிசி(299.55),ஹெச்எஸ்ஐஎல் (239.30)-குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்- இந்த் ஹோட்டல் (103.20), கேஇசி(121.40),கெயில்(415.45), ஆர்சிஎஃப்(58.95),கேபிஆர்மில்(213.40), ரோஹிந்த்பெரோ(13.15),போர்ட்டிஸ் (119),ஜேகேபேப்பர்(36.40),டிசிடபிள்யூ (21.30),ஆஷாபுராமின்(81.30),எம்கோ (43),அப்போலோடயர்(200.50)- நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):- எஸ்கார்ட்ஸ்(137.45), ஆட்டோஇண்ட்(96),மங்களுர்கெமிக்கல் (73.50),மஹாலைஃப்(551.75), எஸ்எம்எல்இசுசூ (517.15)- டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் கரெக்ஷன் வந்துபோகலாம்!

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):அதானிஎண்ட் (469.90),பேங்க்பரோடா (840.85),ஜெட்ஏர்வேய்ஸ் (250.45),ஸ்வான்எனர்ஜி (61.10),லஷ்மிஇஎஃப்எல்(21.95), ஐபிடபிள்யூ எஸ்எல் (21.40)-இவற்றில் வால்யூம் குறைவாக இருக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிர்க்கவும்.

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: மெக்டொவெல் (2700),மாதர்சன்சுமி(306.45),  மேக்ஸ்வெல்(19.95)-இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்கு தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்):- ஓரியன்ட் சிமென்ட் (94.75), எஸ்ஸார்போர்ட்ஸ் (84.10),ஹீரோமோட்டோகோ (2592.05),எலெக்ட்காஸ்ட் (30.50),உஷாமார்ட்டின்(39.85), மிர்சாஇண்ட்(31.40),சவுத்பேங்க் (27.80),ஆர்சிஎஃப்(58.95), எஸ்ஸெல்பேக்(96.50),சிஏபிஎஃப் (202.85),பல்ராம்பூர்சினி(79.45), எஸ்சிஐ(62.50), போர்ட்டிஸ் (119), ஜீமீடியா(18.95) -இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: சன்பார்மா(629.70),ஹீரோ மோட்டோகோ(2592.05), சிட்டிகேபிள்(26.15), மெக்டோவெல்(2782.50), ஹிமாத்சீட்(61.20),பிஎஸ்எல்லிட் (33.65),ரசோய்பிஆர்(16.25), எம்அண்ட்எம்ஃபைனான்ஸ் (274.45),மாதர்சன்சுமி(318.50), ஹெச்சிஎல்டெக்(1438.95), செஞ்சுரிப்ளை(72.90), ஐவிசி (26.30),எம்அண்ட்எம் (1228.85),டிசிடபிள்யூ(21.30), ஐசிஐசிஐபேங்க்(1428.35), ஐஓசி (333.30),இந்தியன்பேங்க் (173.35),எடெல்வெய்ஸ்(58.95), ஹெச்டிஎஃப்சிபேங்க்(835.40), கோத்ரெஜ்இண்ட்(338.20)- தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் கரெக்ஷன் வந்துபோகலாம்!

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்):சுஸ்லான்(32.65), ஹெச்டிஎஃப்சிபேங்க்(979.70), இந்த்ஹோட்டல்(103.20), ஐபிசெக் (25.90),ஐடிசி(332.60), எலெக்ட்காஸ்ட்(30.50),கெயில் (415.45),எஃப்எஸ்எல்(34.55), ரிலையன்ஸ்(1081.90), பார்தி ஏர்டெல்(333.30), இசட்இஇஎல் (266.05),சவுத்பேங்க்(27.80), ஆர்சிஎஃப்(58.95), ஜேபி இன்ஃப்ராடெக்(30.95), சம்பல்ஃபெர்டிலைசர்(53), எஸ்ஜேவிஎன்(24.10), எம்டிஎன்எல் (29.15),எஸ்சிஐ(62.50), குஜராத்என்ஆர்இகோக்(14), தன்பேங்க்(50.65),யுபிஎல் (296.55),பஜாஜ்ஹிந்த்(28.20),  இன்பி(3187),டாடாமோட்டார்ஸ் (438.25),விப்ரோ(530.40), ஆப்டோசர்க்யூட்(37.30), ஆன்மொபைல்(29.45), நோசில் (24),ஜீமீடியா(18.95), ப்ராஜ்இண்ட் (66.60)- இவற்றை வியாபாரத்துக்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: அஜந்தாபார்மா (1424.55),மஹிந்திராலைஃப் (551.75),எஸ்எம்எல்இசுசூ (517.15),காமத்ஹோட்டல் (100.40) -இவை வியாபர எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள் இவை.

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும். ஸ்டாக் லிஸ்ட்தனைப் பார்த்தால் சந்தை ரொம்பவுமே வீக்காக இருப்பதைப் போன்ற தோற்றம் இருக்கிறது. மிகுந்த கவனத்துடன் எண்ணிக்கையை குறைத்து ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்யவேண்டிய தருணமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism