Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

ச.ஸ்ரீராம்

அக்ரி கமாடிட்டி!

ச.ஸ்ரீராம்

Published:Updated:

மஞ்சள் (Turmeric)

மஞ்சள் விலை கடந்த வியாழனன்று சந்தையில் குறைந்தே வர்த்தகமாகியது. தரம் குறைந்த   மஞ்சள் வரத்து சந்தையில் அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி, அதிக கையிருப்பினால் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. அதேசமயம், இந்த வருடம் மழை அளவு குறையும் என்பதால் உற்பத்தி குறையலாம். இந்தக் காரணத்தால் விலையிறக்கம் தடுக்கப்படும்.

அக்ரி கமாடிட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிஜாமாபாத் மற்றும் ஈரோடு சந்தைக்கு மஞ்சள் வரத்து முறையே 2,000, 6,000 பைகள் என்ற அளவில் கடந்த வியாழனன்று இருந்தது. ஆந்திராவில்   மஞ்சள் பயிரிடும் பரப்பளவு சென்ற ஆண்டு 0.68 லட்சம் ஹெக்டேராக இருந்தது; இப்போது 0.53 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளதால், உற்பத்தியானது 10 - 15% வரை குறையும். ஏற்றுமதி தேவை அதிகரித்தால் விலையில் உடனடி முன்னேற்றம் இருக்கும்.

மிளகு! (Pepper)

மிளகு நல்ல விலையிலேயே வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் போதிய அளவு மிளகு வரத்து இல்லாததாலும், தேவை அதிகரித்ததாலும் கிலோ 710 ரூபாய்க்குமேல் வாங்குபவர்கள் தயாராக இருந்தும், விற்பதற்கு யாரும் தயாரில்லை. கர்நாடக சந்தையிலும் மிளகு அதிக விலைக்கு வர்த்தகமானது. ஸ்பாட் சந்தையில் ஒரு குவிண்டால் விலை 900 ரூபாய்க்கும்மேல் அதிகரித்தது. இந்தியாவில் மிளகு உற்பத்தி 35,000 டன்னுக்கும் குறைவாக இருக்கும் என தெரிகிறது.

அக்ரி கமாடிட்டி!

முன்னணி ஏற்றுமதியாளர்கள் மிளகை மறுவிற்பனையாளர்களிடமிருந்து அதிக விலைக்குக் கேட்டாலும் விற்பனையாளர்களிடம் இருப்பு இல்லாததால் தர முடியாத சூழல் நிலவுகிறது. இதுவரை கிலோ 645, 650 ரூபாய்க்கு இந்தியா முழுவதும் விற்பனை செய்துவந்த கர்நாடகா, தற்போது 700 ரூபாய்க்கு விற்று வருகிறது. வரும் வாரங்களிலும் மிளகின் தேவை அதிகரிக்கும் என்பதால் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

 கொண்டைக்கடலை! (Chana)

அதிக வரத்து மற்றும் அதிக கையிருப்பு காரணமாக,  கொண்டைக்கடலையின் விலை குறைந்த அளவிலேயே உள்ளது. பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் கொண்டைக்கடலையின் விலையிறக்கம் அதிக அளவில் இருக்காது. 2013-14ம் ஆண்டுக்கான மூன்றாவது அட்வான்ஸ்டு எஸ்டிமேட்டின்படி, பருப்பு வகைகளின் உற்பத்தி 19.6 மில்லியன் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

இதுவே, கடந்த ஆண்டு 19.8-ஆக இருந்தது. அதிக வரத்து  மற்றும் கையிருப்பு போன்ற காரணங்களால் வரும் வாரத்தில் கொண்டைக்கடலையின் விலை சற்று குறைந்து காணப்படலாம்.

ஏலக்காய்! (Cardamom)

அக்ரி கமாடிட்டி!

ஏலக்காயின் தேவை குறைந்ததன் காரணமாக, விலை சற்று குறைந்து காணப்பட்டது. சென்ற வியாழனன்று மட்டும் 48 டன் ஏலக்காய் எலத்துக்கு வந்துள்ளது. கிலோவுக்கு 1,109 ரூபாய் என்ற அளவில் அதிகபட்சமாக வர்த்தகமாகி இருக்கிறது. சராசரியாக 722 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த வருட கையிருப்பு அதிகமாக சந்தைக்கு வருவதால் சற்று விலையிறக்கம் இருக்கக்கூடும்.

அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism