Published:Updated:

கம்பெனி ஸ்கேன் - அர்விந்த் லிமிடெட்!

கம்பெனி ஸ்கேன் - அர்விந்த் லிமிடெட்!

கம்பெனி ஸ்கேன் - அர்விந்த் லிமிடெட்!

கம்பெனி ஸ்கேன் - அர்விந்த் லிமிடெட்!

Published:Updated:

இந்த வாரம் நாம் ஸ்கேனிங்குக்கு எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் அர்விந்த் லிமிடெட். இந்தியாவின் மிகப் பெரிய டெக்ஸ்டைல் நிறுவனமான இது, லால்பாய் குழுமத்தின் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பருத்தி துணி தயாரிப்பு நிறுவனமும் ஆகும்.

உலகத்தின் மிகப் பெரிய பிராண்டுகளான போலோ, டீசல், கேப், ஆர்மனி எக்ஸ்சேஞ்ச், பனானா ரிபப்ளிக், கால்வின் கிளெய்ன், ஹூகோ பாஸ், எஸ்பிரிட், ஸாரா, லீவிஸ், மிஸ் சிக்ஸ்ட்டி, ஆன் டெய்லர், ப்ரூக்ஸ்பிரதர்ஸ், எக்ஸ்பிரஸ் அண்ட் எட்டிஃபேர் போன்ற ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு துணி சப்ளை செய்வதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் இது. இந்தியாவில் ஏறக்குறைய 28 முன்னணி பிராண்டுகளைத் தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

கம்பெனி எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1931-ம் ஆண்டு அர்விந்த் மில்ஸ் லிமிடெட் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 1986-ல் இந்தியாவில் முதல் முதலாக டெனிம் துணியை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியது. இன்றைக்கு டெனிம் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகவும் (வருடத்துக்கு 108 மில்லியன் மீட்டர்), ஏனைய துணி வகைகளான ஷர்ட்டிங்ஸ், வாயில்ஸ், காக்கி, பின்னலாடை போன்றவற்றிலும் ஏறக்குறைய 130 மில்லியன் மீட்டர்கள் தயாரிக்கும் வசதியையும், பருத்தியை உபயோகித்து நெய்யப்படும் துணிகளில் முதன்மையான உற்பத்தி வசதியாக ஆண்டொன்றுக்கு 220 மில்லியன் மீட்டர்களை உற்பத்தி செய்யும் வசதியைக் கொண்ட நிறுவனமாகவும் திகழ்கிறது இது.

கம்பெனி ஸ்கேன் - அர்விந்த் லிமிடெட்!

2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரீடெயில் ரெடிமேடு விற்பனை நிலையமான மெகா மார்ட் இன்றைக்கு ஏறக்குறைய மொத்த அளவில் 4.5 லட்சம் சதுர அடிகளைக்கொண்ட ஷோரூம்களைக் கொண்டதாக இந்திய அளவில் ரீடெயில் வியாபாரத்தில் கோலோச்சி வருகிறது.

பாப்புலர் பிராண்டுகள்!

இந்தியாவில் 28 பிராண்டுகளைத் தன்வசத்தே கொண்டுள்ளது

இந்த  நிறுவனம். இதில் 15  பிராண்டுகளைச் சொந்தமாகவும், 13 பிராண்டுகளுக்கு லைசென்ஸ்தாரராகவும் திகழ்கிறது. ஃப்ளையிங் மெஷின், ஆரோ

போன்ற பல பாப்புலரான பிராண்டுகளைக் கைவசம் வைத்திருப்பதால், பல்வேறு விலை நிலைகளிலும் தனது ரெடிமேடு தயாரிப்பினை விற்க முடிகிறது இந்த நிறுவனத்தால்.

இந்த நிறுவனத்துக்கு ஏறக்குறைய 1.2 மில்லியன் சதுர அடியைக் கொண்ட 684 விற்பனை ஷோரூம்கள் 150 ஊர்களில் இருக்கிறது. இதைத் தவிர்த்து, 700 மல்ட்டி பிராண்ட் அவுட்லெட்களும், 656 டிபார்ட்மென்டல் ஸ்டோர்களும் இதன் தயாரிப்பை விற்பனை செய்துவருகின்றன.

கம்பெனி ஸ்கேன் - அர்விந்த் லிமிடெட்!

பிராண்டுகளும் லாப அதிகரிப்பும்!

ஜவுளியை உற்பத்தி செய்து விற்பதைவிட, அதை பிராண்டிங் செய்து விற்பதிலேயே நல்ல லாபம் பார்க்க முடியும். குறிப்பாகச் சொன்னால், ஜவுளித் துறையில் பிராண்டிங் என்பதே அதிக லாபத்தைத் தரும் சூட்சுமமாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான ஜவுளி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பலவும் இந்த பிராண்டிங் துறையில் பெரிய அளவில் தங்களைச் செயல்படுத்திக் கொள்ளவில்லை. உலகளாவிய அளவிலும்கூட பல பெரிய நிறுவனங்களும் பிராண்டுகளின் மூலம் லாபம் பார்க்க முடியும் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றன.

கம்பெனி ஸ்கேன் - அர்விந்த் லிமிடெட்!

தற்சமயம் இந்தியாவில் நடந்துவரும் பிராண்ட் மற்றும் ரீடெயில் துறையின் வேகமான வளர்ச்சியில் இந்த நிறுவனம் பெரிய அளவில் தனது பங்களிப்பைக் கொண்டுள்ளது. ஜவுளி உற்பத்தியில் ஆரம்பித்துத் துணியை ஆயத்த ஆடையாக மாற்றும் வசதி முழுவதையுமே தன்வசம்  கொண்டுள்ளதாலும், சிறந்த சப்ளை செயின் நிர்வாகத்தினாலும், வலுவான பிராண்டுகளைப் பெற்றிருப்பதாலும், பல்வேறு வகையான பிராண்டுகளைப் பல்வேறு வகையான விலைகளில் வைத்திருப்பதால், மல்ட்டி பிராண்ட் ரீடெயில் நிறுவனங்களுடன் லாபகரமான டீல்களைப் போட்டுக் கொள்ள முடிவதும் இந்த நிறுவனத்தின் தனிச் சிறப்பு.

வளர்ச்சித் திட்டங்கள்!

2010-ம் நிதியாண்டில் 139 பிராண்ட் ஸ்டோர்களைக் கொண்டிருந்த இந்த நிறுவனம், 2013-ம் நிதியாண்டின் இறுதியில் 487 பிராண்ட் ஷோரும்களைக் கொண்டுள்ளது. நடந்துகொண்டிருக்கும் நிதியாண்டில் ஏறக்குறைய 200 ஷோரூம்களை அதிகரிக்கும் திட்டத்தையும் இந்த நிறுவனம் தன்வசத்தே கொண்டுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் ஏறக்குறைய 1.6 மில்லியன் சதுர அடி ஷோரூம் இடத்தைக்கொண்டதாக இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டின் இறுதியில் இது ஏறக்குறைய 1.3 மில்லியன் சதுர அடியாக இருந்தது.

கம்பெனி ஸ்கேன் - அர்விந்த் லிமிடெட்!

தனது தயாரிப்புகளான ஸ்போர்ட்ஸ் துணிவகைகள், கேஷ§வல் ஆயத்த ஆடைகள், குழந்தைகள் மற்றும் மகளிருக்கான ஆயத்த ஆடைகள் போன்றவற்றில் புதுப்புது ரகங்களை அறிமுகப்படுத்தவும் திட்டங்களைத் தன்வசத்தே கொண்டுள்ளது இந்த நிறுவனம். குழந்தைகள் மற்றும் மகளிருக்கான ஆயத்த ஆடைகளில் தனது பங்களிப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களைத் தீட்டிவருகிறது இந்த நிறுவனம்.

மெகா மார்ட் மற்றும் அர்விந்த் ஸ்டோர்!

இந்தியாவின் ஆயத்த ஆடை உலகில் மிகப் பெரிய ஷோரூம்களான மெகா மார்ட், அர்விந்த் லிமிடெட்டால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஷோரூம்கள் குறைந்தபட்சமாக 2,000 சதுர அடியையும், அதிகபட்சமாக 65,000 சதுர அடியையும் கொண்டவையாக இருக்கின்றன. தற்சமயம் தென் இந்தியாவில் பல இடங்களில் செயல்படுகிறது மெகா மார்ட்.

கம்பெனி ஸ்கேன் - அர்விந்த் லிமிடெட்!

ஜவுளி வகைகளை விற்பதற்குத் தனது தனித்துவம் வாய்ந்த கடைகளாக அர்விந்த் ஸ்டோர்களை நிர்வகித்து நடத்தி வருகிறது அர்விந்த் நிறுவனம். தற்சமயம் ஏறக்குறைய 100 ஸ்டோர்களைத் தன்வசம்  கொண்டுள்ள இந்த நிறுவனம், 2017-18ம் நிதியாண்டின் இறுதியில் 400 ஸ்டோர்கள் என்ற எல்லையை அடையும் திட்டத்தைத் தன்வசம் வைத்துள்ளது.

ரிஸ்க் ஏதும் உண்டா?

பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போலவே, டெக்ஸ்டைல் துறையின் வளர்ச்சியும் ஒன்றையொன்று முற்றிலுமாகச் சார்தே உள்ளது எனலாம். எனவே, உலக அளவிலான பொருளாதாரச் சுணக்கம் இந்த நிறுவனத்தின் லாபத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல், பருத்தி விலையில் தாறுமாறான ஏற்றம் வந்தாலும் லாபம் பதிக்கப்படும். இந்த நிறுவனம் ஏற்றுமதி வர்த்தகத்திலும் இருப்பதால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்புக் கூடினால் லாபம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

கம்பெனி ஸ்கேன் - அர்விந்த் லிமிடெட்!

புதிய ஸ்டோர்கள் மற்றும் புதிய பிராண்டுகள் என பல விரிவாக்கத் திட்டங்களைத் தன்வசம் கொண்டுள்ளது. இந்தப் புதிய ஸ்டோர்களையும், புதிய பிராண்டுகளையும் நிர்மாணம் செய்ய நிறைய பணம் செலவாகும். அதேநேரத்தில், ஸ்டோர்கள் லாபம் தர சற்று நாட்களும் ஆகும். இந்த முதலீட்டுக்கு வருமானம் தரும் நாட்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்தாலும் லாபம் கணிசமான அளவு குறைவதற்கு வாய்ப்புள்ளது.

ஜவுளித் துறை என்பது வாய்ப்புகள் நிறைந்தது. எனவே, முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டில் சிறுபகுதியை இந்தத் துறைக்கு ஒதுக்கலாம். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, அர்விந்த் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை ட்ராக் செய்து ஒரு விலை இறக்கம் வரும்போது நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்ய முயற்சிக்கலாம்.

- நாணயம் ஸ்கேனர்.

 
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய  விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல.
இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின்  தனிப்பட்ட முடிவாகும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism