Published:Updated:

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

ச.ஸ்ரீராம்

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

ச.ஸ்ரீராம்

Published:Updated:

கச்சா எண்ணெய்!

''சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஈராக் உள்நாட்டுப் பிரச்னையின் காரணமாகக் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்குத் தற்போது உயர்ந்துள்ளது. ஈராக்கின் வடபகுதி, புரட்சியாளர்கள் பிடியில் தொடர்ந்து இருப்பதால் கச்சா எண்ணெய் வரத்து தடைபடலாம் என தெரிகிறது. உலகில் அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான ஈராக் ஒரு நாளைக்கு 3.3 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்கிறது.

இது உலக அளவில் 4 சதவிகிதமாக உள்ளது. அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு 386.3 மில்லியன் பேரல்களாக உள்ளது. சென்ற வாரத்தில் அமெரிக்காவில் 6 லட்சம் பேரல்கள் இருப்பு குறைந்துள்ளது. சீனாவின் ஏற்றுமதி மே மாதத்தில் 7% உயர்ந்துள்ளது. இது, சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியைக் காட்டுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஈராக்கில் நிலவிவரும் சூழலுக்கு அமெரிக்கா தீர்வு காணும் முனைப்பில் உள்ளதால், பிரச்னை முடியும் வரை கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றத்தில் இருக்கும். இதேநிலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய்யின் விலை 108-110 டாலர் வரை சர்வதேச சந்தையில் செல்லலாம். இந்திய கமாடிட்டி சந்தையில் ஜூலை கான்ட்ராக்ட்டை ரூ.6,330-40 அளவில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.6,295 டார்கெட் ரூ.6,500, 6610''

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

தங்கம்!

கடந்த வாரங்களில் விலை குறைந்து வர்த்தகமாகிவந்த தங்கம், மீண்டும் விலை அதிகரித்து வர்த்தகமாகிறது. கடந்த வியாழனன்று மட்டும் சர்வதேச சந்தையில் 3% விலை அதிகரித்தது.  அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகப்படுத்தப்படாததால் டாலர் சிறிது மதிப்பிழந்து காணப்பட்டது. இதுவும் தங்கத்தின் விலையேற்றத்துக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஈராக்கில் உள்நாட்டுப் பிரச்னைகள் எழுந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்கத்தை நோக்கிய முதலீடும் இந்த ஏற்றத்துக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. வரும் வாரங்களிலும் இதேநிலை தொடரும் என்பதால் தங்கத்தின் விலை ஏற்றத்திலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1,316 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. ரூபாயின் மதிப்பு வரும் வாரத்தில் இன்னும் குறைந்தால் தங்கத்தின் விலையில் ஏற்றம் இருக்கும்.

வெள்ளி!

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

சர்வதேச சந்தைகளில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதால், வெள்ளி விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் பூஜ்ஜிய வட்டி கொள்கையினாலும், வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 20.68 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை அதிகரிப்பதாலும் ரூபாயின் மதிப்பைப் பொறுத்தும் வெள்ளியின் விலை வரும் வாரங்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பர்!

காப்பரின் விலை வார இறுதியில் 0.2% உயர்ந்துள்ளது. அமெரிக்க மற்றும் இங்கிலாந்து சந்தைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி காரணமாகவும், சீனா மற்றும் அமெரிக்காவில் காப்பரின் தேவை அதிகரித்துள்ளதாலும் காப்பரின் விலை உயர தொடங்கியுள்ளது. ஐரோப்பாவில் நிலவிவரும் நல்ல பொருளாதாரச் சூழல் காரணமாக காப்பரின் விலை அதிகரித்தே காணப்படும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையைப் பொறுத்தவரையில் காப்பரின் விலை ரூபாயின் மதிப்பைப் பொறுத்து இருக்கும் என தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism