Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எக்ஸ்பைரி வரை குழப்பமே மிஞ்சும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எக்ஸ்பைரி வரை குழப்பமே மிஞ்சும்!

Published:Updated:

சட்டென ஒரு கரெக்ஷன் வந்துபோகலாம் என்றும்; இது போன்ற சூழ்நிலைகளில் டெக்னிக்கல்கள் அடிக்கடி தோற்க வாய்ப்பிருப்பதால் முழுக்க முழுக்க இண்டிகேட்டர்களை நம்பி வியாபாரம் செய்யும் டிரேடர்கள் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும், ஹைரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்கள் பண்டமென்டல்கள் ஸ்ட்ராங்காக உள்ள ஸ்டாக்குகளில் ஸ்ட்ரிக்டான ஸ்டாப் லாஸுடன் மட்டுமே வியாபாரம் செய்யலாம் என்றும் சொல்லியிருந்தோம்.

புதனன்று 73 புள்ளிகள் இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர அளவில் 30 புள்ளி இறக்கத்தில் முடிவடைந்தது. வரும் வாரம் எக்ஸ்பைரி வாரம். முக்கிய இந்திய டேட்டா வெளியீடுகள் இல்லாத வாரமிது. அமெரிக்க டேட்டா வெளியீடுகளில் முக்கியமாக செவ்வாயன்று கன்ஸ்யூமர் கான்பிடன்ஸ் டேட்டாவும், புதனன்று ஜிடிபி டேட்டாவும் வெளிவர இருக்கிறது.

எக்ஸ்பைரிக்கான மூவ்களும் மற்றும் செய்திகளும் மட்டுமே வரும் வாரத்தில் சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும். டெக்னிக்கல்களும், இண்டிகேட்டர் களும் சந்தை டைரக்ஷன்லெஸ்ஸாக மாறியதைப்போன்ற தோற்றத்தையே காட்டுகின்றன. எனவே, பெரிய அளவிலான வியாபாரத்தில் டிரேடர்கள் இறங்கக்கூடாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஓவர்நைட் பொசிஷன்கள் எடுக்கவே கூடாத நேரமிது. எக்ஸ்பைரி தினத்தன்று பெரிய அளவிலான வாலட்டைலிட்டியும் கடைசி அரை மணி நேரத்துக்கு சற்று முன்னர் வேகமான டிரெண்ட் மாறுதலும் நடக்கலாம். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

டிரேடர்ஸ் பக்கங்கள்

20/06/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-: இஐடிபாரி(206), பர்ஸ்வந்த்(33.75), காக்ஸ்அண்ட்கிங்ஸ்(200.50), கெய்ர்ன்(372), பிபோகஸ்(41.55), நித்தின்பயர்(67.65), எல்ஐசிஹவுசிங்(319.95), கேபிஆர்மில்(249.30), எஃப்எஸ்எல்(39.70), எஃப்ஆர்எல்(128.90), டைட்டான்(333.85)-குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்- ஸ்பிக்(21.75), ஏசியன் பெயின்ட்(568.45), லூபின்(999.45), ஹிமாத்சீட்(75.25), ராலிஸ்(206.60), நெல்காஸ்ட்(38.05) - நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):- எஃப்எஸ்எல்(39.70), டெக்ஸ்மோபைப்(11), டிசிபிபேங்க்(77.65), சுவென்(97.50), ப்ரிகால்(41.75), பெட்ரோநெட்(167.20), மைண்ட்ட்ரீ(905.30), கிரான்யூல்ஸ்(449)-  டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): - குறிப்பிடும்படியான ஸ்டாக்குகள் எதுவும் இந்த அளவீட்டில் இல்லை.

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: சுவென்(97.50), ரெடிங்டன்(97), ராம்கோசிமென்ட்(269.40), எலெக்ட்காஸ்ட்(32.85), டாடாஎலெக்ஸி(572.35)-இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்கு தவிர்க்கவும்.

டிரேடர்ஸ் பக்கங்கள்

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்):- அல்ட்ராசெம் கோ (2727.45), மாதர்சன்சுமி (311.85), வெல்கார்ப் (83.30), ஐவிசி(23.95), போலாரிஸ்(195.95), ரோல்டா(102.70), எஸ்ஆர்இஐ இன்ஃப்ரா(42.50), பஜாஜ் ஹிந்த் (26.65)-இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத்  தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: ரெடிங்டன்(97), சியுபி(74.05), ராம்கோசிமென்ட்(269.40), இண்டஸ்இந்த்பேங்க்(555.50), ஹிந்த்யுனிலீவர்(624.30), ஐசிஐசிஐபேங்க்(1396.85), வெல்கார்ப் (83.30), எஸ்கேஎஸ்மைக்ரோ(263.50), கெய்ர்ன்(372), ஓம்மெட்டல்ஸ்(25.80), பிபோகஸ்(41.55), ராடிகோ(118.80), இசட்இஇஎல்(284.45) -தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற் கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்-(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): ஐடிசி(335.70), ஹெச்டிஎஃப்சி(969.05), அம்புஜாசி மென்ட்(218.20), இன்பி(3316.60), எஸ்ஜேவிஎன்(24), பவர்கிரீட்(132.30), பார்தி ஏர்டெல்(338.75), டாடா மோட்டார்ஸ்(438.05), மார்க்சன்ஸ் (29.15), ரிலையன்ஸ்(1036.50), சன்பார்மா(631.30), ரோல்டா(102.70), சின்டெக்ஸ்(87.10), எஸ்ஆர்இஐ இன்ஃப்ரா(42.50), ஹிந்த்சிங்க் (163.05), எஸ்எஸ்எல்டி(291.85), ஐஓசி(321.80), என்சிசி(68.70), ஓஎன்ஜிசி(417.50) - இவற்றை வியாபாரத்துக்குத் தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: எம்டிஎன்எல்(37), எஃப்எஸ்எல் (39.70), டெக்ஸ்மோபைப்ஸ்(11), கீதாஞ்சலி (92.55), ராஜேஷ்எக்ஸ்போர்ட்(183.40), சியட்லிட்(585.55), டாடாஎலெக்ஸி (572.35), நாட்கோபார்மா(1130.70), லிபர்ட்டிஷூ(214.65), கேபிஆர்மில் (249.30)-இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்தவை.  

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

ஸ்டாக் லிஸ்ட்தனைப் பார்த்தால் சந்தை ரொம்பவுமே வீக்காக இருப்பதைப் போன்ற தோற்றம் இருக்கின்றது. மிகுந்த கவனத்துடன் எண்ணிக்கையைக் குறைத்து ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்யவேண்டிய தருணமிது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism