Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

Published:Updated:

இந்த வாரம் அக்ரி கமாடிட்டியில் மஞ்சள் விலைப் போக்கு குறித்து விரிவாகச் சொல்கிறார் அலைஸ் புளூ நிறுவனத்தின் மண்டல மேலாளர் முத்துராஜ் பிரபு.

மஞ்சள் (Turmeric)

அக்ரி கமாடிட்டி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சந்தையில் நிலவிவரும் தட்டுப்பாடு மற்றும் குறைவான மழை காரணமாக அடுத்த வாரம் முதல் மஞ்சளின் விலை மேல்நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுதான் பருவமழை தொடங்கும் தருவாயில் இருப்பதால், மழையைப் பொறுத்தே மஞ்சளின் விலையில் மாற்றம் வரும். இனிவரும் மாதங்களில் மஞ்சளின் தேவை அதிகரிக்கும் என்பதால் மஞ்சள் விலை மேல்நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பைசஸ் போர்டு அமைப்பானது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2013 ஏப்ரல் - டிசம்பரில் ஏற்றுமதி ஆகியிருக்கும் மஞ்சள் அளவு 58,000 மெட்ரிக் டன் என்றும், இது அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 17% அதிகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், 2013-14-ம் ஆண்டின்

மஞ்சள் உற்பத்தியானது 40 லட்சம் பைகள் (ஒரு பை என்பது 75 கிலோ) என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, 10-15% குறைவு.

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள் ஜூலை மாத கான்ட்ராக்ட் தற்போது 6,462 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதன் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டன்ஸ் விவரம்: 6,380-யை முதல் சப்போர்ட்டாகவும் 6220-யை இரண்டாவது சப்போர்ட்டாகவும் கொள்ளலாம். 6,580-யை முதல் ரெசிஸ்டன்ஸ்ஸாகவும் 6,700-யை இரண்டாவது ரெசிஸ்டன்ஸ்ஸாகவும் கொள்ளலாம்.''

 கடுகு விதை Mustard seed)

அக்ரி கமாடிட்டி!

சென்ற வாரம் குறைந்த தேவை காரணமாக இதன் விலை குறைந்தே வர்த்தகமானது. சென்ற ஆண்டைவிட கடுகு விதை உற்பத்தி 3.89 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து, நடப்பு ஆண்டில் 71.38 லட்சம் ஹெக்டேராக உள்ளது. இதன் உற்பத்தி அளவு சுமார் 72.25 லட்சம் மெட்ரிக் டன்னாகக் காணப்படுகிறது. மே, 2014 நிலவரப்படி, கடுகு மீல் ஏற்றுமதி 8.75%  அதிகரித்து, 95,847 டன்னாக உள்ளது. வரும் வாரங்களில் இதன் தேவை அதிகரிக்கலாம்!

அக்ரி கமாடிட்டி!

 ஜீரகம் (Jeera)

அக்ரி கமாடிட்டி!

சென்ற வாரத்தில் ஜீரகத்தின் கையிருப்பு அதிகமாக இருந்ததாலும், போதுமான அளவு சப்ளை இருந்ததாலும் விலை குறைந்தே வர்த்தகமானது. இருப்பினும் உள்நாட்டு தேவை மற்றும் சர்வதேச வியாபாரிகள் வாங்க ஆர்வம்காட்டியதால், விலை மேலும் குறையாமல் தடுக்கப்பட்டது.

ஜீரகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் நிலவிவரும் அரசியல் பதற்றத்தினால் சர்வதேச சந்தைகளில் விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளிலும் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றம் காரணமாகவும் ஜீரகத்தின் உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று ஊஞ்ஹா சந்தைக்கு 14,000 பைகள் வரத்து இருந்தது. இந்தியாவில் ஜீரகத்தின் உற்பத்தியானது நடப்பு ஆண்டில் 6.5 - 7 மில்லியன் பைகளாக (ஒரு பை என்பது 55 கிலோ) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உற்பத்தி இதற்கு முந்தைய ஆண்டில் 4.5 - 5 மில்லியன் பைகளாக இருந்தது. ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா அறிக்கைபடி, ஏப்ரல் - செப்டம்பர், 2013-ல் 67,500 டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 35,018 டன்களாகும். ஜீரகத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவை இருக்கும் வரை விலையில் பெரிய இறக்கம் இருக்காது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism