Published:Updated:

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

ச.ஸ்ரீராம்

கச்சா எண்ணெய்! 

''ஈராக்கில் நிலவிவரும் உள்நாட்டுப் பிரச்னைகள் தொடர்வதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. ஈராக்கின் வடபகுதியை புரட்சியாளர்கள் தொடர்ந்து தங்கள் வசமே வைத்துள்ளதால், கச்சா எண்ணெய்யின் வரத்து தொடர்ந்து தடைபட்டு வருகிறது. அதேசமயம், அமெரிக்க மற்றும் சீன பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதால், கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால், சர்வதேச சந்தைகளில் நிலவிவரும் பிரச்னைகளால் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, வரும் வாரங்களில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தே காணப்படும்.

சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் சப்போர்ட் லெவல்: 108 - 110 டாலர்; ரெசிஸ்டன்ஸ் லெவல்: 118 - 120 டாலர்; எம்சிஎக்ஸ் கமாடிட்டி சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சப்போர்ட் லெவல்: 6,250 ரூபாய்; ரெசிஸ்டன்ஸ் லெவல்: 6,600 ரூபாய்.''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கமாடிட்டி மெட்டல் & ஆயில்

தங்கம்! 

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை குறைந்தே வர்த்தகமானது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாலும், தங்கத்தின் மீதான முதலீடுகளில் ஆர்வம் குறைந்துள்ளதாலும் தங்கத்தின் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. மேலும் சீனாவில் 15 பில்லியன் டாலர் அளவில் தங்கக் கடன் கொடுத்ததில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதும் தங்கம் விலை குறைய காரணமாகும். அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் குறைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியதால் சென்ற வாரத்தில் தங்கம் விலை சற்று உயர்ந்தது. ஆனால், ஃபெடரல் வங்கியின் தலைவர் விரைவில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என கூறியவுடன் விலை குறைந்தது.

ஹாங்காங்கிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் தங்கம் 17 சதவிகிதம் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,317.6 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. ரூபாயின் மதிப்பைப் பொறுத்து, இந்திய சந்தைகளில் தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி! 

சர்வதேச பொருளாதாரம் வளர்ச்சியில் உள்ளதால், வெள்ளி விலை உயர்ந்தே வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கருத்துகளால் இறங்கினாலும், வெள்ளியின் விலை ஏற்றத்திலேயே உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 21.1 டாலராக உள்ளது. இந்திய கமாடிட்டி சந்தையில் வரும் வாரங்களில் வெள்ளி விலை ஏற்றத்திலேயே காணப்படும் என கூறப்படுகிறது.

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

காப்பர்! 

காப்பர், வார இறுதியில் விலை அதிகரித்தே வர்த்தகமாகியுள்ளது. சர்வதேச சந்தையில் காப்பரின் விலை கடந்த வியாழனன்று மட்டும் 0.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரங்கள் சாதகமாக வளர்ந்து வருவதால் காப்பரின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன மற்றும் அமெரிக்கச் சந்தைகளில் காப்பருக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால் வரும் வாரங்களில் சர்வதேச சந்தையில் விலை ஏற்றத்துடனேயே இருக்கும் எனவும், சர்வதேச சந்தையைவிட இந்திய சந்தைகளில் காப்பரின் விலை உயர்ந்தே காணப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்திய சந்தையைப் பொறுத்தவரையில் ரூபாயின் மதிப்பைப் பொறுத்து காப்பரின் விலை இருக்கும்.

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

இயற்கை எரிவாயு! 

அமெரிக்காவில் இயற்கை எரிவாயு  மிக அதிகமாக உள்ளது  என்ற அறிவிப்புக்கு பிறகு, விலை 3.3 சதவிகிதம் குறைந்துள்ளது. ஈராக்கில் நிலவி வரும் சூழலால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், தேவையை சரி செய்யவும் அமெரிக்கா இந்த ஏற்பாட்டை செய்துவைத்துள்ளது. மேலும் லிபியாவிலிருந்து எண்ணெய் வரத்து அதிகரித்துள்ளதால் இயற்கை எரிவாயுவின் விலை கட்டுப்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரத்தில்  சர்வதேச சூழல்களைப் பொறுத்தே விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி மெட்டல் & ஆயில்