Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எதிர்மறை அணுகுமுறை வெற்றி தரலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எதிர்மறை அணுகுமுறை வெற்றி தரலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எதிர்மறை அணுகுமுறை வெற்றி தரலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எதிர்மறை அணுகுமுறை வெற்றி தரலாம்!

Published:Updated:

 டிரேடர்ஸ் பக்கங்கள்

எக்ஸ்பைரி வரை குழப்பமே மிஞ்சும் என்றும்; எக்ஸ்பைரிக்கான மூவ்களும் மற்றும் செய்திகளும் மட்டுமே வரும் வாரத்தில் சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாக இருக்கும் என்றும்; டெக்னிக்கல்களும், இண்டிகேட்டர்களும் சந்தை டைரக்ஷன்லெஸ்ஸாக மாறியதைப் போன்ற தோற்றத்தையே காட்டுகின்றன என்றும் சொல்லியிருந்தோம்.

குளோஸிங்கில் மூன்று நாட்கள் ஏற்றத்தையும் இரண்டு நாட்கள் இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர அளவில் இரண்டு புள்ளி இறக்கத்தில் குளோஸானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரும் வாரத்தில் செவ்வாயன்று ஹெச்எஸ்பிசி மேனுபேக்சரிங் பிஎம்ஐ டேட்டாவும், வியாழனன்று ஹெச்எஸ்பிசி சர்வீசஸ் பிஎம்ஐ டேட்டாவும் வெளிவர இருக்கும் முக்கிய இந்திய டேட்டாக்கள். அமெரிக்க டேட்டாக்களில் செவ்வாயன்று ஐஎஸ்எம் மேனுபேக்சரிங் பிஎம்ஐ டேட்டாவும், புதனன்று எடிபி எம்ப்ளாய்மென்ட் சேஞ்ச் டேட்டாவும், வியாழனன்று பேலன்ஸ் ஆஃப் டிரேட், நான்ஃபார்ம் பே ரோல்ஸ் மற்றும் அன்எம்ப்ளாய்மென்ட் ரேட் டேட்டாவும் முக்கியமானவை.  

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எதிர்மறை அணுகுமுறை வெற்றி தரலாம்!

பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளே சந்தையின் போக்கை வரும் வாரத்தில் நிர்ணயிப்பதாக அமையும். செய்திகளின் மீது கண்வைத்தே வியாபாரம் செய்யவேண்டும். பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிக பாசிட்டிவாக இருப்பதால் டிரேடர்கள் கொஞ்சம் கன்சர்வேட்டிவ் அப்ரோச்சையே வாரத்தின் ஆரம்பத்தில் (புதன் வரை) கடைப்பிடிக்க வேண்டும். செவ்வாயன்று குளோஸிங்தான் சந்தையின் அடுத்தகட்ட மூவ்மென்ட்டை நிர்ணயிப்பதாக அமையும். இரண்டுக்கும் மேற்பட்ட நெகட்டிவ் குளோஸிங்குகள் (-40/-50 அளவில்) வந்தால் 7220 வரையிலும்கூட சென்றுவிடும் வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் சூழலில், சிலசமயம் எதிர்மறை அணுமுறை (கான்ட்ரேரியன் அப்ரோச்) ஜெயித்துவிடும் என்பதாலேயே மிகவும் கவனத்துடன் டிரேடர்கள் வியாபாரம் செய்யவேண்டும். டிரேடர்கள் ஆர்டரைப் போட்டுவிட்டால், சந்தையைவிட்டும் கண்ணை அகற்றக் கூடாத காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்தே டிரேடிங் செய்யவேண்டும்.

ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே இதுபோன்ற காலகட்டங்களில் வியாபாரத்தில் இறங்கலாம். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். ஓவர் நைட் மற்றும் ஷார்ட் சைடு பொசிஷன்களைத் தவிருங்கள்.

27/06/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

  புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்-: எஃப்சிஇஎல் (8.50), இன்பி (3223.40), நொய்டாடூல் (32.75), லஷ்மிவிலாஸ் (109.60), சன்பார்மா (660.85), டிசிஎஸ் (2399.55), ஜீமீடியா (21.15), எல் அண்ட் டி (1667.30) - குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

  புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்- அம்டெக்ஆட்டோ (244.60), மார்க்சன்ஸ் (28.55), எம் அண்ட்எம் ஃபின் (274.30), நோசில் (24.35), கெயில் (456.90), மணப்புரம் (23.45) - நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

  உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது):- டிசிஎம்ஸ்ரீராம் (181.40), சவுத்பேங்க் (30.85), மெக்லியோட்ரஸ்ஸல் (317), டிவிஸ்லேப் (1437.55), சிசிஎல் (70.70), யுபிஎல் (329.60), டெக்மஹிந்திரா (2125.70), ஹெச்சிஎல்டெக் (1481.45), ஐபிடபிள்யுஎஸ்எல் (27.80)- டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: எதிர்மறை அணுகுமுறை வெற்றி தரலாம்!

  உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): -ஐடியா (130.55), ஐசிஐசிஐபேங்க் (1384.65), உஷா மார்ட் (37.60), டீஐ (56.10). சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: உத்தம்வேல்யு (9.15), எஃப்சிஇஎல்(8.50), பவர்கிரீட் (136.55), கேஸ்ட்ரால் (325.50), குஜராத் என்ஆர்இகோக் (14.25), ரசோய்பிஆர் (16.85), பான்கோ இந்தியா (115.40), எம்டீஎடுகேர் (115.50) - இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்குத் தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள் : (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்):- எக்ஸைடு இண்ட் (143.10), விஜயாபேங்க் (52.50), ஹிந்த்யூனிலீவர் (616.40), கேட்டி (113.65), சுவென் (95.65), ஃபெடரல் பேங்க் (131.15), ஸ்டெர்டெக் (62.20), ஹிந்த்ஆயில்எக்ஸ்ப் (58.25), கோப்ரன் (43.85), ஜிந்தால்ஸ்டீல் (320.40), என்எம்டிசி (178.95) -இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

  வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: சிட்டிகேபிள் (25.60), இன்ஃப்ராடெல் (263.05), மாதர்சன்சுமி (318.95), கிளென்மார்க் (569.65), எம்அண்ட்எம் (1153.50), எக்ஸைடு இண்ட் (143.10), பாரதி ஏர்டெல் (331.70), பவர்கிரீட் (136.55), ஐசிஐசிஐ பேங்க் (1384.65), சன்பார்மா (660.85), எல்அண்ட்டீஎஃப்ஹெச் (73), டிசிஎஸ் (2399.55), கோல்இந்தியா (380.85), ஜீமீடியா (21.15)- தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்- (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): ஹெச்டிஎஃப்சி (976.10), ஐடிசி (319.75), ஐடியா (130.55), 3ஐஇன்ஃபோடெக் (10.90), அம்டெக்ஆட்டோ (244.60), ஹெச்டிஎஃப்சிபேங்க் (816.20), அம்புஜாசிமென்ட் (216.65), பல்ராம்சினி (81), எல்ஐசிஹவுஸிங் ஃபைனான்ஸ் (317.20)- இவற்றை வியாபாரத்துக்குத் தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: உத்தம்வேல்யு (9.15), இன்ஃப்ராடெல்(263.05), ஐபிடபிள்யுஎஸ்எல் (27.80), ஹீலியோஸ்மேத் (83.75), ஜோதிஸ்ட்ரக் (59.45), பான்கோ இந்தியா (115.40), டீவிஸ்லேப் (1437.55), மெக்லியோட்ரஸ்ஸல் (317), ஹேவெல்ஸ் (1174.05), டிசிஎம்ஸ்ரீராம் (181.40), டிக்யுஇ (31.70), ஜியோமெட்ரிக் (143.35), பானாசியாபயோ (189.35) -இவை வியாபார எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள் இவை.

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism