நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

மஞ்சள் (TURMERIC)

கடந்த வாரத்தில் மஞ்சள் வரத்து அதிகமாக இருந்ததாலும், மஞ்சளின் தேவை குறைவாகக் காணப்பட்டதாலும் விலை குறைந்து வர்த்தகமானது. வரும் காலங்களில் மஞ்சள் பயிரிடுதல் குறையலாம் என்பதால், மேலும் விலை குறைவது தடுக்கப்படும். கடந்த வார வியாழக்கிழமை நிலவரப்படி ஈரோடு மஞ்சள் மண்டியில் மஞ்சள் வரத்து 3,000 பைகளாக இருந்தது (ஒரு பை என்பது 75 கிலோ). 2013-14 சீஸன் ஆண்டில் ஆந்திராவில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ள அளவு 0.53 லட்சம் ஹெக்டேர்.

அக்ரி கமாடிட்டி!

இது அதற்கு முந்தைய நிதியாண்டில் 0.68 ஹெக்டேராக இருந்தது. 2013-14-ம் ஆண்டில் மஞ்சள் உற்பத்தி 10-15% குறைந்துள்ளது. ஏப்ரல் - டிசம்பர், 2013 - நிலவரப்படி, மஞ்சள் ஏற்றுமதி 58,000 டன்னாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 49,526 டன்னாக இருந்தது. வரும் வாரங்களில் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றாலும், மேலும் குறையாமல் தடுக்கப்படும் சூழ்நிலை உருவாகலாம்.

 ஜீரகம் (JEERA)

ஏற்றுமதி தேவை காணப்பட்டதாலும், குஜராத் மாநிலத்தில் அதிகமான மழைபொழிவு இல்லாததாலும் சென்ற வாரம் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமானது.

அக்ரி கமாடிட்டி!

உஞ்ஹா சந்தையில் கடந்த வியாழக்கிழமை வரத்து 10,000 பைகள். நடப்பு ஆண்டில் குஜராத்தில் 4,55,000 ஹெக்டேர் ஜீரகம் பயிரிடப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 3,35,200 ஹெக்டேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜீரகம் ஏற்றுமதி நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் நிலவிவரும் அரசியல் பதற்றம் காரணமாக உலகச் சந்தைகளில் சப்ளை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் ஜீரகத்தின் ஏற்றுமதி ஆர்டர்கள் இந்திய ஜீரகத்துக்கு வருகின்றன. துருக்கி மற்றும் சிரியாவில் இனிவரும் காலங்களில் ஜீரகம் உற்பத்தி பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜீரகம் ஏற்றுமதி அளவு பிப்ரவரி 14, 2014 நிலவரப்படி ஒரு லட்சம் டன்களைத் தாண்டியுள்ளது. 2013-14-ம் ஆண்டின் உற்பத்தி அளவு 45-50 லட்சம் பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ) எதிர்பார்க்கப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 40-45 லட்சம் பைகளாக இருந்தது.

அக்ரி கமாடிட்டி!

 ஏலக்காய் (CARDAMOM)

இந்தியாவில் உள்ள ஏலக்காய் உற்பத்தி இடங்களில் ஏலக்காய் உற்பத்தியானது குறைந்ததன் காரணமாக கடந்த வாரத்தில் ஏலக்காய் விலை அதிகரித்து வர்த்தகமானது. கடந்த வாரம் வியாழக்கிழமை நிலவரப்படி, சந்தைக்கு வரத்து 42 டன்களாக இருந்தது. ஒரு கிலோ ஏலக்காய் சராசரியாக 778 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதிகபட்ச விலை 1,082 ரூபாய்க்கு வர்த்தகமானது. ஏலக்காய் விளையும் கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அக்ரி கமாடிட்டி!

ஜூலை 13-ம் தேதி வரையும் கனமழை காணப்பட்டது. கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலத்திலும் பரவலான மழை இருந்தது. இதனால் அழுகல் இருக்குமோ என்று விவசாயிகள் யோசித்து வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் கடைசிநாள் வரை வரத்து 21,190 டன்களாகக் கணக்கிடப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 48% அதிகம். ஆனால், ஏலக்காயின் சராசரி விலை 11.5% குறைந்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயம்.

அக்ரி கமாடிட்டி!