நடப்பு
புத்தக விமர்சனம்
Published:Updated:

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

ச.ஸ்ரீராம்

 தங்கம்!

''தங்கத்தைப் பொறுத்தவரையில் விலை ஏற்றத்தில் காணப்படுகிறது. போர்ச்சுக்கல் வங்கிகளில் நிலவிவரும் சிக்கலான சூழல் காரணமாக ஐரோப்பிய சந்தைகள் வீழ்ச்சியில் முடிவடைந்ததால் தங்கத்தின் விலை ஏறியுள்ளது.

அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லாததால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்காரணமாகக் கடைசிநாளின் இறுதியில் மட்டும் தங்கத்தின் விலை 0.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி பட்ஜெட்டில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த அறிவிப்புகள் எதையும் அரசு பட்ஜெட்டில் அறிவிக்காததால் தங்கத்தின் விலை ஏறத் தொடங்கியது. இதனால் நேற்று மட்டும் தங்கத்தின் விலை 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ரூபாயின் மதிப்பு குறைந்து வர்த்தகமாகிவருவதால் வரும் வாரங்களில் தங்கத்தின் விலை ஏற்றத்துடனேயே இருக்கும். சர்வதேச சந்தையில் தங்கத்தின் சப்போர்ட் லெவல்: 1355  1385 டாலர். மற்றும் இந்திய கமாடிட்டி சந்தையில் சப்போர்ட் லெவல் : 28000-29000 ரூபாய்.''

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

வெள்ளி!

தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்படுவதால் வெள்ளியின் விலையும் ஏற்றத்துடனேயே காணப் பட்டது. பட்ஜெட்டில் இறக்குமதி தொடர்பான எந்த அறிவிப்பு இல்லாத தாலும், ஐரோப்பாவில் நிலவிவரும் சூழலைப் பொறுத்தும் வெள்ளியின் விலை ஏற்றத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரத்தில் இந்திய சந்தையில் வெள்ளியின் விலை 3.2 சதவிகிதம் அதிகரித்துக் காணப்பட்டது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை 21.4 அவுன்ஸ் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய சந்தையில் வெள்ளியின் விலை ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே இருக்கும்.

காப்பர்!

காப்பரின் விலையும் ஏற்றத்துடனேயே காணப்படுகிறது. அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதால் காப்பரின் விலை அதிகரித்துள்ளது.அதுமட்டுமின்றி அமெரிக்காவின் காப்பரின் இருப்பு 0.6 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்திய கமாடிட்டி சந்தையில் ரூபாயின் மதிப்பு குறைந்துள் ளதால் காப்பரின் விலை 1.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கச் சந்தைகளில் காப்பருக்கான தேவை தொடர்ந்து அதிகமாகவே இருந்துவருவதால் சர்வதேச சந்தைகளில் காப்பரின் விலை வரும் வாரங்களில் அதிகரித்தே காணப்படும். இந்திய சந்தைகளில் காப்பரின் விலை சர்வதேச விலை நிலவரத்தைப் பொறுத்தே அமையும்.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலை சற்று அதிகரித்தே வர்த்தகமாகியது. ஈராக், புரட்சியாளர்கள் பிடியில் இருந்து மீண்டு அமைதி சூழல் திரும்பி வருவதால் எண்ணெய் வரத்து அதிகரித்துள்ளது.

சமீபகாலமாக உள்நாட்டு பிரச்னையால் தடைபட்டு வந்த ஆயில் வர்த்தகம் தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது. லிபியாவில் இருந்து 3,50,000 பேரல்கள் என்ற அளவில் கச்சா எண்ணெய் வரத்து உள்ளதாலும், சஹாரா கிடங்கிலிருந்து எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இந்திய சந்தையில் சென்ற வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலை ஒரு சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் அதிக மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்