Published:Updated:

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

ச.ஸ்ரீராம்

கச்சா எண்ணெய்!

 மலேசிய விமானம் உக்ரைனில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரேநாளில் இதன் விலை 2 டாலர் அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் சில பெரிய எண்ணெய் நிறுவனங்களின் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதால், இதன் விலை அதிகரித்தே காணப்படும்.

 உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தி யாளர்களில் ரஷ்யா 10 சதவிகிதத்துக்்கும் அதிகமாக உற்பத்தி செய்கிறது. இந்தத் தடைகளால் கச்சா எண்ணெய்யின் விலையில் அதிகரிப்பு தொடரும் என்று கூறப்படுகிறது.

 அதேசமயம் லிபியாவில் உள்ள கிடங்குகளிலிருந்து 5 லட்சம் பேரல்கள் வீதம் ஒரு நாளைக்கு வரத்து இருப்பதால், கச்சா எண்ணெய்க்கான தேவையில் பாதிப்பு இருக்காது.

 வரும் வாரங்களில் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச பிரச்னைகளின் காரணமாக சற்று அதிகரித்து காணப்படும். அதனை சரிசெய்யும் விதமாக, ஈராக் மற்றும் லிபியாவில் கச்சா எண்ணெய்யின் உற்பத்தி அதிகரித்து வருவது இதன் விலையைச் சமநிலையில் வைத்திருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் சப்போர்ட் லெவல்: 99 டாலர். இந்திய கமாடிட்டி சந்தையில் சப்போர்ட் லெவல்: ரூ.6,100  ரூ.6,060.''

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

தங்கம்!

 தங்கத்தின் விலை ஏற்றத்தோடு காணப்படுகிறது. கடந்த வியாழன் அன்று 1.4% அதிகரித்துள்ளது. மலேசிய விமானம் உக்ரைனில் தாக்கப்பட்டு 295 பயணிகள் பலியாகியுள்ளனர். இந்தக் காரணத்தால் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையில் இந்தத் தாக்குதல் காரணமாக 40 நிமிடங்களில் 20 டாலர் உயர்ந்துள்ளது.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,317 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தைகளில் நிலவிவரும் அச்சத்தால் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும் என்பதால் தங்கத்தின் விலை அதிகரித்தே வர்த்தகமாகும் என்கிறார்கள். வியாழன் அன்று உயர்ந்த தங்கத்தின் விலை வெள்ளியன்று குறைந்து காணப்பட்டது.

இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கத்தின் விலை உயர்ந்தே காணப்படு கிறது. 10 கிராமின் விலை ரூ.28,100 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச அளவில் நிலவிவரும் பிரச்னைகளால் தங்கத்தின் விலை இந்திய சந்தைகளிலும் உயர்ந்து வர்த்தக மாகும் என்று கூறப்படுகிறது.

வெள்ளி!

மலேசிய பயணிகள் விமானம் தாக்குதல் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங் கியதையடுத்து அதன் தாக்கத்தால் வெள்ளியின் விலையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ரஷ்யாவின் சில நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதால் வெள்ளியின் விலை அதிகரித்தே வர்த்தகமாகிறது.

சர்வதேச சந்தையில் 21.1 டாலராக இருக்கும் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை வரும் வாரங்களிலும் அதிகரித்தே காணப்படும். இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சர்வதேச நிலவரங் களைப் பொறுத்து அமையும்.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

காப்பர்!

 எல்எம்இயில் காப்பரின் இருப்பு குறைந்துள்ளதால், காப்பரின் விலை 0.4% அதிகரித்துள்ளது. அதேசமயம் முக்கிய காப்பர் உற்பத்தி நிறுவனமான ஆங்கிலோ அமெரிக்கன் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் அதிக உற்பத்தி செய்துள்ளது. மேலும், சீனாவில் முக்கிய கட்டுமான நிறுவனங்கள் தங்கள் கடனைத் திருப்புவதில் காலதாமதம் செய்யலாம் என்பதால் காப்பருக்கான தேவை குறையலாம். அமெரிக்க உற்பத்தி குறியீடுகளில் மாற்றம் ஏற்பட்டால், காப்பரின் விலையில் மாற்றம் வரும்.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

 இந்தியாவில் காப்பரின் விலை ரூபாயின் மதிப்பைப் பொறுத்து அமையும். வரும் வாரங்களில் விலையில் அதிக மாற்றம் இருக்காது.