Published:Updated:

கம்பெனி ஸ்கேன் : குஜராத் அல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்

கம்பெனி ஸ்கேன் : குஜராத் அல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்

1973-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் குஜராத் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் எனும் நிறுவனத் தினால் முதலீடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவன மாகும். இந்தியாவில் செயல்பட்டு வரும் கெமிக்கல் நிறுவனங்களில் மிகவும் பழைமையான நிறுவனம்.

இந்தியாவில் சோடியம் ஹைட்ராக்ஸைடு (காஸ்டிக் சோடா) என்ற கெமிக்கலை அதிக அளவில் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் இது. கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் செயல்பாடுகளில் முன்னேற்றம் இல்லா விட்டாலும் கூட நீண்ட நாள் அடிப்படையில் இந்த நிறுவனம் நல்ல லாபம் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்பதே இந்த நிறுவனத்தில் முதலீட்டுக்கான பார்வையைச் செலுத்தவைக்கிறது.

கம்பெனி ஸ்கேன் : குஜராத் அல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்

குஜராத்தில் வதோதரா மற்றும் தஹீஜ் என்ற இரண்டு இடங்களில் தனது தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், காஸ்டிக் சோடா, குளோரின், ஹைட்ரஜன் வாயு, ஹைட்ரோகுளோரிக் ஆசிட், குளோரோ மீத்தேன், ஹைட்ரஜன் பெராக்ஸைடு, பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு, பொட்டாசியம் கார்போனேட், சோடியம் சயனைட், சோடியம் பெரோசயனைட் போன்ற கெமிக்கல்களை உற்பத்தி செய்கிறது.

இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே தொடர்ச்சியாக விரிவாக்கத் திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்திவந்துள்ளது. இப்படி தொடர்ந்து விரிவாக்கங்களைச் செய்து வந்ததனாலேயே மிகப் பெரிய காஸ்டிக் சோடா தயாரிக்கும் நிறுவனமாக இருந்து வருகிறது.

கெமிக்கல் தயாரிப்பில், தயாரிக்கும் (எக்கனாமீஸ் ஆஃப் சைஸ்) அளவு என்பது பெரிய அளவில் லாபத்துக்கு உதவியாக இருக்கும். அந்தவகையில் இந்த நிறுவனம் பெரிய அனுகூலத்தைப் பெறுவதாக இருக்கிறது எனலாம். பழம்பெரும் நிறுவனமாக இருந்த போதிலும் நவீனமயமாக்கலுக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருவதால் இந்த நிறுவனத்தின் தொழிற்சாலைகள் நவீனமயப்படுத்தப் பட்ட புதிய உற்பத்திமுறையைக் கொண்டவையாகவே திகழ்கின்றன.

கம்பெனி ஸ்கேன் : குஜராத் அல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்

தயாரித்த கெமிக்கல்களை விற்பனை செய்யவும், உபயோகிக்கும் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு சேர்க்கவும் நல்லதொரு மார்க்கெட்டிங் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் நெட் வொர்க்கை தன்வசம் வைத்துள்ளது.

மேலும், தனக்குத் தேவையான ஆராய்ச்சிகளைச் செய்துகொள்ளத் தேவையான ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் வசதியையும் தன்வசம் கொண்டுள்ளதால், இதற்கான செலவினங்களும் கணிசமாகக் குறைகிறது. இதைத் தவிர, நல்லவிதமான தொழிலாளர் உறவு மற்றும் கெமிக்கல் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள் கிடைக்கும் இடத்துக்்கு அருகாமையில் தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பது என பல்வேறு அனுகூலங்களையும் கொண்டிருக்கிறது.

ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

இந்த நிறுவனம் தயாரிக்கும் முக்கிய கெமிக்கலான காஸ்டிக் சோடா நிறைய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு கெமிக்கலாகும். துணி துவைக்கும் சோப்புகள், டெக்ஸ்டைல் துறை, காகிதக்கூழ், காகிதம், அலுமினியம் ரிஃபைனிங் போன்ற தொழில்களில் காஸ்டிக் சோடா முக்கிய பங்கு வகிக்கிறது.

அதேபோல, இதன் மற்றுமொரு தயாரிப்பான குளோரின் பாலிவினைல் குளோரைடு (பிவிசி), சின்தெட்டிக் ரப்பர் மற்றும் தண்ணீர் சுத்திகரித்தல் என்ற மூன்று தொழில்களிலும் பெரிய அளவில் உபயோகிக்கப்படுகிறது.

கம்பெனி ஸ்கேன் : குஜராத் அல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்

பெட்ரோலியம் சார் பொருட்கள் தயாரிப்பு, ப்ளீச் மேனுபேக்சரிங், வேஸ்ட் மற்றும் வடிகால் சுத்திகரிப்பு, நுண்ணுயிரிக்கொல்லிகள் தயாரிப்பு, தீயணைப்பான்கள், நெல்மணிகள்/கோதுமையைப் பதப்படுத்திப் பாதுகாத்தல், சாயம் தயாரிப்பு, பூச்சிக்கொல்லி தயாரிப்பு, எலெக்ட்ரோ ப்ளேட்டிங், உரம் தயாரிப்பு, ஹைட்ரஜன் ஃப்யூல் செல் தயாரிப்பு என பல்வேறு தொழில்களிலும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகிறது.

குளோர்-அல்கலி எனப்படும் இந்த நிறுவனம் தயாரிக்கும் இரண்டு கெமிக்கல்களும் பொருளாதாரம் வேகமாக வளரும் தருணத்தில் அதிக அளவில் உபயோகிக்கப்பட்டு, தேவையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதிக விலை மாறுதல்களும், உலகத்தில் உள்ள மற்ற தயாரிப்பாளர்கள் தங்களுடைய தயாரிப்பு விலைபோகாதபோது போட்டி எண்ணத்தில் குறைந்த விலையில் இந்தியாவில் கொண்டுவந்து ஸ்டாக் செய்வது (டம்ப்பிங்) காஸ்டிக் சோடா தொழிலில் ஒரு தொடர் நிகழ்வு எனலாம்.

ரிஸ்க்குகள் என்ன?

ஒவ்வொரு டன் குளோரின் தயாரிக்கப்படும்போதும் 1.1 டன் அளவில் காஸ்டிக் சோடா உபபொருளாக வெளிப்படுகிறது. காஸ்டிக் சோடாவை சுலபமாகக் கிடங்குகளில் சேமித்துவைக்க முடியும் என்றபோதிலும், குளோரின் அதனுடைய தீங்குவிளைவிக்கும் வேதியியல் பண்புகளால் சேமித்துவைப்பது சுலபமில்லை. எனவே, காஸ்டிக் சோடாவின் தேவை அதிகரித்தால் மட்டுமே அதன் உற்பத்தியைக் கூட்ட முடியும். தேவை குறைந்தால் உற்பத்தியைக் குறைத்தே ஆகவேண்டும்.

கம்பெனி ஸ்கேன் : குஜராத் அல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்

காஸ்டிக் சோடாவும், குளோரினும் இணைந்தே தயாரிக்கப்படுவதால், பொருளாதார மந்தநிலையில் காஸ்டிக் சோடா உபயோகிப்பாளர்கள் குறையும்போது இந்த நிறுவனத்துக்கு காஸ்டிக் சோடா மற்றும் குளோரின் என்ற இரண்டு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் வருவாயில் குறைபாடு ஏற்படும் எனலாம். இந்த இரண்டு தயாரிப்புகளும் தொழிற்சாலைகளின் உபயோகத்துக்கு என்பதால், தேவை அதிகரிப்பானாலும் சரி, குறைவானாலும் சரி, ஒரேசமயத்தில் நடக்கும் என்பதால் லாபம் கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்புள்ளது எனலாம்.

இந்த நிறுவனத்தின் விற்பனையில் அதிக வருமானம் காஸ்டிக் சோடா சம்பந்தப்பட்ட வகையறாவாகவே இருப்பதும் கொஞ்சம் ரிஸ்க்கை அதிகமாக்குகிறது. இந்த நிலையை மாற்ற கம்பெனி சில நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவந்தபோதிலும் காஸ்டிக் சோடா வகையறா விற்பனையே தொடர்ந்து முன்னணியில் இருந்துவருவது குறிப்பிடத்தக்க ரிஸ்க் ஆகும்.

பொருளாதார மந்தநிலை தொடர்ந்தால், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சரியான விலை கிடைக்காமல் போகலாம். அதேபோல், உலகப் பொருளாதாரம் மந்தநிலையிலேயே தொடர்ந்தால், இந்த நிறுவனத்துக்குப் போட்டியாகச் செயல்படும் உலகத்தில் உள்ள நிறுவனங்கள் குறைவான விலையில் காஸ்டிக் சோடாவை விற்பனை செய்ய முற்பட்டு, இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

எப்போது வாங்கலாம்?

தயாரிக்கும் பொருளின் வேகமான விலை மாறுதல், உலகளாவிய அளவிலான போட்டி மற்றும் வியாபார தந்திரங்கள் மற்றும் டிமாண்ட் உருவானால் அது நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்றல்; அதேபோல், டிமாண்ட் இல்லாதுபோனால் அதுவும் வெகு நாட்களுக்கு இருந்து கொண்டேயிருத்தல் என ஒரு மாறுபட்ட குணாதிசயத்தைக் கொண்டது இந்த நிறுவனம்.

தற்போது இருக்கும் விலையிலேயே இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிப்போடாமல் ஓர் அசாதாரண இறக்கம் வரும்போது மட்டுமே சிறிய எண்ணிக்கையில் இந்தப் பங்குகளை நீண்ட நாள் முதலீட்டுக்காக வாங்கலாம். அதேபோல், நீண்ட நாள் அடிப்படை யில் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் காலத்தில் உடனடியாக விற்றுவிட்டு வெளியேறிவிடவும் வேண்டிய குணத்தினைக் கொண்ட பங்கு இது.

கம்பெனி ஸ்கேன் : குஜராத் அல்கலீஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்

ஏனைய பங்குகள் போல் இந்த நிறுவனத்தின் பங்குகளைக் கையாள்வதை முதலீட்டாளர்கள் தவிர்த்து, சரியான நேரத்தில் சரியான விலையில் வாங்கிப் போட்டும் அதே போல் சரியான நேரத்தில் சரியான விலைக்கு விற்று வெளியேறவும் செய்யவேண்டும்.

- நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்.)