Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: சிறிய அளவிலான ஏற்றம் தொடரலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: சிறிய அளவிலான ஏற்றம் தொடரலாம்!

பட்ஜெட்டின் பாதிப்பு இன்னமும் சந்தையில் முழுமையாக முடிந்தபாடில்லை என்றும்; முதல் காலாண்டு முடிவுகள் வெளிவர இருப்பதால் வாலட்டைலிட்டி இன்னமும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம் என்றும்; திடீர் ஏற்றங்கள் புதன்கிழமைக்குமேல் வந்துவிடும் வாய்ப்பு அதிகமாகத் தெரிகின்றது என்பதால் திங்கள் மற்றும் செவ்வாயன்று குளோஸிங்கை வைத்து மட்டுமே அடுத்தகட்ட மூவ்களை முடிவு செய்ய முடியும் என்றும் சொல்லியிருந்தோம்.

திங்களன்று சிறிய அளவிலான இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி மற்ற நான்கு நாட்களிலும் கணிசமான அளவில் ஏறியும் வாலட்டைலாக இருந்தும் வார இறுதியில் வாராந்திர அளவில் 204 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் குறிப்பிடும்படியான இந்திய பொருளாதார டேட்டா வெளியீடுகள் ஏதும் இல்லை எனலாம். அமெரிக்க டேட்டாக்களில் செவ்வாயன்று இன்ஃப்ளேஷன் டேட்டா மட்டுமே அடுத்த வாரத்தில் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாவாகும். எனவே, செய்திகள் மற்றும் ரிசல்ட்களின் போக்கை வைத்தே சந்தையில் நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: சிறிய அளவிலான ஏற்றம் தொடரலாம்!

செய்திகள் நெகட்டிவ்வாக இல்லாத பட்சத்தில் ஒரு சிறு அளவிலான (மைல்டு) புல்லிஷ் டிரெண்ட் வரும் வியாழனன்று வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது. எஃப்அண்ட்ஓ கேரி ஓவர்கள் வெள்ளியன்று முதல் ஆரம்பித்துவிடும் என்பதால் புதன் கிழமை தாண்டி ஓவர்நைட் பொசிஷன் கள் எதையும் வைத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். செய்திகள் மிகவும் நெகட்டிவ்வாக வந்து இறக்கங்கள் வந்தாலுமே ஷார்ட் சைடு வியாபாரத்தை தவிர்த்து சரியானதொரு ரிவர்ஸல்களை எதிர்பார்த்து சிறுசிறு லாங்சைடு வியாபாரம் மட்டுமே செய்யலாம்.

புதிய டிரேடர்கள் மற்றும் ஹைரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் ஓவர்நைட் பொசிஷன்களை வாரம் முழுவதும் முழுமையாகத் தவிர்ப்பதே நல்லது எனலாம். தற்போதைய சூழ்நிலையில் செய்திகளா அல்லது டெக்னிக்கலா என்று பார்த்தால் செய்திகளே சந்தையை முழுமையாக மாற்றியமைக்கும் என்பதால் டெக்னிக்கல் டிரேடர்கள் அதீத கவனத்துடன் டிரேடிங் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக உள்ளது.

18/07/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: அர்விந்த் ரெமடீஸ்(33.20), செஞ்சுரிப்ளை(87.55), கலிந்தீ(95.65), மைண்ட்ட்ரீ(886.80), சவுத் பேங்க்(32.95), டிசிஎஸ்(2441.20), டெக்ஸ்மோ பைப்ஸ்(16.45), விப்ரோ(547.05). குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: அம்புஜா சிமென்ட்(219.75), பிபிசிஎல்(583), சிஏபிஎஃப்(246.60), எஃப்எஸ்எல்(39.35), கிரீவ்ஸ் காட்டன் (117.20), ஜிஎஸ்பிஎல்(89.50), ஹிந்த் பெட்ரோ(395.45), ஐஓசி(335.20), மிர்சா இண்ட்(34.50), என்சிசி(73.90), ஆர்கிட் கெமிக்கல்(80.70), சின்டெக்ஸ்(91.95), டாடாகாம்(371.55), டாடாபவர்(105.85), வொக்பார்மா (586.25). நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): ப்ரூக்ஸ் (37), ஹிட்டாச்சி ஹோம்(359.25), இந்தியன்ஹ்யும்(245.85), கோட்டக் பேங்க்(935.85), பெட்ரோ நெட்(186.85), சத்பவ்(220.30), டாடா ஸ்டீல்(563).  டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாரந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): எல்ஐசி ஹவுஸிங் (306.15), இந்த் ஹோட்டல்(93.50).

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: ஏசிஇ(32.15), பிபிசிஎல்(583), சிசிஎல்(73.50), கோல் இந்தியா(375.60), டிஷ் டிவி(59.70), எரா இன்ஃப்ரா(23.30), எக்ஸைடு இண்ட்(159.80), ஹெச்டிஎஃப்சி(983), ஐபிடபிள்யூ எஸ்எல்(22.40), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்(1219.45), ஜூப்லியன்ட் ஃபுட்(1259.35), கேஎஸ்கே (106.45), மாதர்சன் சுமி (376.75), ரேமண்ட் (462), செயில்(87.45), டாடா குளோபல்(160.65), டாரன்ட் பவர்(154.75), யுப்ளெக்ஸ்(128.55). இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்குத் தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: ஷரான் பயோ (60.75), பெர்சிஸ்டென்ட் (1334.90), எஃப்எம்என்எல்(13.75) (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: சிறிய அளவிலான ஏற்றம் தொடரலாம்!

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: அலுவாலியாகான்ட்(135.45), அம்புஜா சிமென்ட்(219.75), செஞ்சுரிப்ளை(87.55), சிப்லா (441.45), கோல் இந்தியா(375.60), எஸ்ஸார்ஆயில்(107.40), கிரீவ்ஸ் காட்டன்(117.20),இந்தியாபுல் ஹவுஸிங்(373.25), ஐசிஐசிஐ பேங்க்(1480.45), இந்த்ஹோட்டல் (93.50), ஐவிசி(26.65), கேஎஸ்கே (106.45), எம் அண்ட் எம் (1183.65), நவ்நீத் எடு(80.25), என்எம்டிசி(174.45), ரிக்கோ ஆட்டோ (20.15), சத்பவ்(220.30), எஸ்கேஎஸ் மைக்ரோ(285), சுபெக்ஸ்(11.60), விப்ரோ(547.05). தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): பார்தி ஏர்டெல்(336.25), கெர்ய்ன்(345.35), சியுபி(80.75), ஜிபிபிஎல்(135.40), ஹெச்சிசி(41), ஹெச்டிஎஃப்சி(983), ஹெச்எஃப்சிஎல் (15.95), ஐடிசி (344.10), கோட்டக் பேங்க்(935.85), கேசெராசெரா(15), எம் அண்ட் எம் ஃபைன்(256.20), மாதர்சன் சுமி (376.75), என்டிபிசி(149.70), ஓஎன்ஜிசி (410.50), பவர்கிரிட் (137.10), சன்பார்மா(742.25), டாடா மோட்டார்ஸ்(475.30), யுபிஎல்(324.65)- இவற்றை வியாபாரத்துக்குத் தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: கேஇஐ(33.15), ரிக்கோ ஆட்டோ (20.15), அலுவாலியாகான்ட் (135.45), பிரகாஷ்(110.35), கிட்டெக்ஸ் கார்மென்ட்ஸ்(280.65), ஹெச்ஓவிஎஸ் (114.15), ரேமண்ட் (462), ப்ரூக்ஸ்(37).

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.