Published:Updated:

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

பிரீமியம் ஸ்டோரி

இந்த வாரம் நாம் ஸ்கேனிங்குக்கு எடுத்துக்கொண்டுள்ள நிறுவனம் கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட் (Granules india ltd) எனும் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமாகும்.

பார்மாசூட்டிகல் துறையில் ஆக்டிவ் பார்மாசூட்டிகல் இன்கிரிடியன்ட்ஸ் (ஏபிஐ),பார்மாசூட்டிகல் ஃபார்முலேஷன் இன்டர் மீடியரீஸ் (பிஎஃப்ஐ), பினிஷ்டு டோசேஜஸ் (எஃப்டி) என்ற பல்க் மருந்துகளை உபயோகிப்பாளர்களுக்குத் தேவையான விகிதத்தில் மாற்றி மாத்திரையாகவும் மருந்துகளாகவும் செய்துதரும் வசதிகளைக் கொண்ட நிறுவனம் இது.

1984ம் வருடத்தில் ஹைதராபாத் நகருக்கு அருகே  ஒரு  தொழிற்சாலையுடன் ட்ரைட்டான் லேபாரட்டரீஸ் என்ற பெயரில் பாரசிட்டமால் தயாரிப்ப தற்காக நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 1987ல் மருந்துகளை ஏற்றுமதி செய்து இந்தியாவிலிருந்து முதல்முறையாக அமெரிக்காவுக்்கு மருந்துகளை ஏற்றுமதி செய்த நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது.

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

1990ம் ஆண்டு ஜீடிமேட்டா என்ற இடத்தில் ஏபிஐ வசதியை நிறுவிய இந்த நிறுவனம், 2003ம் ஆண்டு காகிலாபூர் என்ற இடத்தில் பிஎஃப்ஐ வசதிகொண்ட தொழிற்சாலையை நிறுவியது. 2008ம் ஆண்டில் எஃப்டி வசதியை காகிலாப்பூரில் உருவாக்கியது. 2013ல் பெரிய அளவிலான விரிவாக்கப் பணிகளை காகிலாப்பூர் தொழிற்சாலை யில் செய்து முடித்திருக்கும் இந்த நிறுவனம் அக்டஸ் பார்மா என்ற நிறுவனத்தை வாங்கியது.

ஏபிஐ துறையில் ஏறக்குறைய 30  வருட அனுபவம் கொண்ட இந்த நிறுவனம் பாரசிட்டமால், இபுப்ரூபென், மெட்பார்மின், கியுயாய்பென்சின் மற்றும் மீத்தோகார்பமால் போன்ற மருத்துகளின் தயாரிப்பில் உலக அளவில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. அதேபோல் பிஎஃப்ஐ துறையில் ஏறக்குறைய 20 வருட கால அனுபவம் கொண்டது இந்த நிறுவனம். பாரசிட்டமால், அசிட்டோ மினோபென், மெட்பார்மின்ஹெச்சிஐ, இபுப்ரூபென், கியுயாபென்சின், மீத்தோகார்போமால், சிப்ரோப்ளாக்சின் போன்ற ஒற்றை ஆக்டிவ் மருந்துகளிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆக்டிவ் மருந்து களான பாரசிட்டமால் மற்றும் குளோரோபினர்மைன் மலியேட், டைபென் ஹைட்ரமைன், இபுப்ரூபென் மற்றும் சூடோஈபிட்ரைன் ஹெச்சிஐ, பாரசிட்டமால் மற்றும் கஃபெய்ன் போன்ற மருந்துகளில் உலகளாவிய அளவில் பிரசித்திபெற்றதாக இருக்கிறது. ஃபினிஷ்டு டோசேஜ் (எஃப்டி) வகையில்  டேப்லெட்கள், கேப்லெட்கள், பல்க் ப்ரஸ்பிட் கேப்ஸ்யூல்கள், பிலிஸ்டர் பேக்குகள், பாட்டில்கள் போன்றவற்றில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது.

பார்மா துறையில் இதே வேலைகளைச் செய்யும் மற்ற நிறுவனங் களுக்கும் இந்த நிறுவனத்துக்்கு நிறையவே வித்தியாசம் இருக்கிறது. இவர்கள் வைத்திருக்கும் புராடக்ட் போர்ட்ஃபோலியோ இவர்களுடைய உற்பத்தித்திறனை முழுமையாக உபயோகிக்கும்  திறன்  கொண்டிருப்பதால் 'எக்கனாமீஸ் ஆஃப் ஸ்கேல்’ என்ற அளவீட்டிலும் பலன்கள் அதிகம் கிடைக்கிறது.

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

பார்மா துறை என்பதில் குவாலிட்டி மற்றும் கம்ப்ளையன்ஸ் என்பது அதிக அளவில் கவனிக்கப்படும் ஒன்றாகும். இந்த நிறுவனத்துக்கு இந்த இரண்டும் ஒரு கலாசாரமாகவே மாறிப்போனதால், சிறப்பான செயல்பாட்டுக்கு வழிவகுக் கிறது.  இதனாலேயே தரம் குறித்து அதிகம் கவலைப்படும் மேலைநாடு களுக்கு அதிக அளவில் மருந்துகள் சப்ளை செய்யும் உலகளாவிய மூன்று நிறுவனங்களில் ஒரு நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்கிறது.

தற்போதைய விலை :

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

630.65
இபிஎஸ் :

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

39.75
பிஇ விகிதம் : 15.91
புத்தக மதிப்பு :

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

132.85
விலை/புத்தக மதிப்பு : 4.76
டிவிடெண்ட் : 20.00 %
டிவிடெண்ட் யீல்டு : 0.32 %
முக மதிப்பு :

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

10.00
52 வார அதிகம் :

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

703.70
52 வார குறைவு :

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

120.00
24.07.14 நிலவரப்படி...

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

விரிவாக்கம் ஏதும் உண்டா?

சமீபத்தில் இந்த நிறுவனம் நிறையவே ஜாயின்ட் வென்ச்சர் முயற்சிகளை எடுத்துவருகிறது. அதேபோல், ஒரு சில மருந்து தயாரிப்புகளில் மட்டுமே இருந்துவருவதைத் தவிர்த்து, புதிய மருந்துகளிலும் கால்பதித்து வருகிறது. சர்வதேச அளவில் பெரும் நிறுவனங் களுடன் கூட்டணி அமைத்து, அதன்  மூலம் காப்புரிமை காலாவதியான பல மருந்துகளை இந்தியா போன்ற பெரிய சந்தைகளில் அறிமுகப்படுத்த முயல்கிறது.

ஏன் முதலீடு செய்யவேண்டும்?

இதுவரையிலும் ஒரு பாரசிட்டமால் மற்றும் அதனுடன் இணைக்கப்படும் மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனமாகவே பார்க்கப்பட்ட இந்த நிறுவனம் சமீபத்தில் வாங்கிப்போட்ட ஆக்டஸ் பார்மா என்ற யுஎஸ்எஃப்டிஏ தரச்சான்று பெற்ற நிறுவனத்தின் மூலம் புதிய மருந்துகள் பலவற்றை அறிமுகப் படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும், சமீபத்தில் இந்த நிறுவனம் அஜினொமோட்டோஓம்னிகெம் கூட்டு வியாபாரத்துடன் செய்து கொண்ட கிராம்ஸ் (கான்ட்ராக்ட் ரிசர்ச் மற்றும் மேனுபேக்சரிங் சர்வீசஸ்) வியாபார ஒப்பந்தமும் நீண்ட நாள் அடிப்படையில் இந்த நிறுவனத்துக்கு லாபத்தைத் தரும்.  

ஏபிஐ தொழிலிலும்கூட இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. சாதாரணமாக ஏபிஐ நிறுவனங்கள் மருந்துகளை வெறுமனே தயாரித்துக்்கொடுக்கும் பணியிலேயே இருக்கின்றன. மருந்துகளை பிராண்ட் செய்து விற்கும் நிறுவனங்களே இந்த நிறுவனங்களுக்கு ஆர்டர்களைத் தருகின்றன. இந்த நிலையில் மருந்துகளை பிராண்ட் செய்து விற்கும் பார்மா நிறுவனங்களைப் பொறுத்தவரையில், மற்றொரு ஏபிஐ நிறுவனம் குறைவான விலையில் மருந்துகளைச் சப்ளை செய்ய ஒப்புக்்கொண்டால் ஆர்டரை மாற்றித் தந்துவிடும் வாய்ப்பு மிக மிக அதிகம்.

இந்த ரிஸ்க்கை இரண்டுவகையில் சமாளிக்கிறது இந்த நிறுவனம். ஒன்று, தரம் மற்றும் சர்வீஸ் குவாலிட்டி. தரமான மற்றும் அதீதமான சர்வீஸைத் தருவதால் பெரிய பிராண்ட் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் ஆர்டர் களைத் தக்கவைத்துக்கொள்வதோடு, விலையையும் சற்றே பிரீமியத்தில் நிர்ணயிக்க முடிகிறது. இரண்டாவதாக, மருந்துகள் உற்பத்தி செய்து சப்ளை செய்யும் ஒப்பந்தங்களை ஏறக்குறைய 3  5 ஆண்டு காலத்துக்கு இந்த நிறுவனம் பெரிய பிராண்டட் நிறுவனங்களுடன் செய்துகொள்கிறது.

கிரான்யூல்ஸ் இந்தியா லிமிடெட்!

தவிர, இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள பிராண்டட் மருந்து தயாரித்து விற்கும் நிறுவனங்கள் பலவும் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தங்களுடைய மருந்துகளைப் பதிவு செய்து விற்கின்றன. அப்படியிருக்கும் போது ஒரு ஏபிஐ நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறினால் ஒவ்வொரு நாட்டின் மருந்து அங்கீகரிக்கும் அரசு நிறுவனங்களும் புதிய ஏபிஐ நிறுவனத்தை சோதனை செய்ய வேண்டும். இதற்குண்டான கட்டணங்களும் அதிகம் என்பதால் இந்த நிறுவனம் பெற்ற ஆர்டர்கள் வேறுபக்கம் செல்ல வாய்ப்பு குறைவே.

ரிஸ்க் ஏதும் உண்டா?

பார்மா துறை என்றாலே ரெகுலேட்டர்கள்தான். அதுவும் உலக அளவிலான தொழில் என்றால் ரெகுலேட்டர்களின் கெடுபிடிக்கு கேட்கவே வேண்டாம். எனவே, இது ஒரு பிரதான ரிஸ்க்காகும். இரண்டாவதாக, இந்த நிறுவனம் போன்ற பார்மா நிறுவனங்கள் அதன் கூட்டு நிறுவனங்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் ரகசியமானவை. வெளியில் சாமான்யமாகத் தெரியாது. இதுவும் முதலீட்டாளர்களுக்கு ஒரு ரிஸ்க்தான். ஏற்கனவே கூறியபடி பாரசிட்டமால் சம்பந்தப்பட்ட மருந்துகளிலேயே இந்த நிறுவனம் தொடர்ந்து இருந்துவருவதும் ஒருவிதமான ரிஸ்க்தான். சமீபத்தில் இதிலிருந்து வெளிவருவதற்கு இந்த நிறுவனம்  எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் நீண்ட கால அனுபவத்தையும், உலகளாவிய முன்னணி நிலைமையையும் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் பங்குகளை விலை இறக்கத்தில் நீண்ட நாட்களுக்கான முதலீடாக வாங்கிப் பார்க்கலாம்.

நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின்  தனிப்பட்ட  முடிவாகும்)

 8 மாதத்தில் 33% லாபம் தந்த  கம்பெனி ஸ்கேன்!

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி எட்டு மாதங்களில் கம்பெனி ஸ்கேன் பகுதியில் 31 நிறுவனங்களை பரிந்துரை செய்திருக்கிறோம். இந்த நிறுவனத்தின் பங்குகளை வாசகர்கள் வாங்கியிருந்தால் 22  33% வரை லாபம் பார்த்திருக்க முடியும். இவற்றில் மூன்று பங்குகள் மட்டுமே குறுகிய காலத்தில் சிறிய அளவிலான நஷ்டத்தைத் தந்திருக்கிறது. மற்ற 28 பங்குகளும் நல்ல லாபத்தையே தந்திருக்கின்றன.

நாம் பரிந்துரைத்த பங்குகளை இதழ் வெளியான மறுநாள் (திங்கள்) அன்று வாங்கியிருந்தால், கடந்த 22.07.2014 அன்று 23% லாபத்தில் அது இருக்கும். அதேசமயம், இந்த இடைப்பட்ட காலத்தில் அதிக விலையில் விற்றிருந்தால், 29% லாபம் கிடைத்திருக்கும். மேலும், இதழ் வெளியானபின் வந்த குறைந்த விலையில் வாங்கி, அதிகபட்ச விலையில் விற்றிருந்தால் 33% லாபம் பெற்றிருக்க முடியும். இதுவே குறைந்தபட்ச விலையில் வாங்கி 22.07.14 அன்று விற்றிருந்தால், 27% லாபம் பார்த்திருக்க முடியும்.

கம்பெனி ஸ்கேனில் நாம் குறிப்பிட்ட பங்குகள் தந்த லாபத்தை துல்லியமாகத் தெரிந்துகொள்ள http://nanayam.vikatan.com/index.php?aid=8031 என்கிற இணையதள முகவரிக்குச் செல்லவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு