பிரீமியம் ஸ்டோரி

தங்கத்தின் விலைபோக்குக் குறித்துச் சொல்கிறார் குட்வில் கமாடிட்டி நிறுவனத்தின் மண்டல தலைவர் ஆரோக்கியராஜ்.

தங்கம்!

''தங்கத்தின் விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் நல்ல முறையில் காணப்படுவதாலும், போர்ச்சுகல் வங்கிகளில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்படுவதாலும்  தங்கத்தின் விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு கடந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து விலை குறைந்து வர்த்தமாகி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,291 டாலர் என்ற அளவுக்குக் குறைந்தது.  கடந்த ஒரு மாத காலத்தில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஏறக்குறைய 30 டாலர் அளவுக்கு குறைந்திருக்கிறது.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்
கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பிரச்னைகள் ஓரளவுக்கு அடங்கியிருப்பதால், வரும் வாரங்களிலும் தங்கத்தின் விலை சற்று குறைந்தே காணப்படும். அமெரிக்காவின் வேலைவாய்ப்பின்மை சதவிகிதம் குறைந்துள்ளதாலும், சர்வதேச பொருளாதாரத்தில் தொடர் முன்னேற்றம் காணப்படுவதாலும் தங்கத்தின் விலை சற்று குறைந்தே வர்த்தகமாகும்.

இந்திய கமாடிட்டி சந்தையைப் பொறுத்தவரை, ரூபாயின் மதிப்பைப் பொறுத்து தங்கத்தின் விலை இருக்கும்.''

இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கத்தின் விலை சப்போர்ட் லெவல் 27,300 ரூபாய்;  ரெசிஸ்டன்ஸ் லெவல் 28,400 ரூபாய்.

வெள்ளி!

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

உக்ரைனில் நிலவிவரும் பிரச்னைகளால் தங்கத்தின் விலையைப்போலவே வெள்ளி யின் விலையும் குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. அதுமட்டு மின்றி, அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ந்து வருவதால் வெள்ளியின் விலை இறக்கத்தோடு வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 20.3 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ரூபாயின் மதிப்பைப் பொறுத்து அமையும். வரும் வாரங்களில் வெள்ளியின் விலை குறைந்தே வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பர்!

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

காப்பரின் விலை சந்தையில் அதிகரித்தே காணப்படுகிறது. சீனாவில் காப்பர் உற்பத்தி கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதோடு கணிசமான அளவு இருப்பு குறைந்து வருவதாலும், தேவை அதிகரித்துள்ளதாலும் காப்பரின் விலை அதிகரித்தே வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச பொருளாதாரம் வளர்ந்து வருவதாலும், அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளதும் காப்பரின் விலை உயர முக்கியக் காரணமாக உள்ளது.

அடுத்த வாரங்களிலும் இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், காப்பரின் விலை அதிகரித்தே காணப்படும். இந்திய சந்தைகளிலும் காப்பரின் விலை சர்வதேச சந்தைகளைப் பொறுத்து அதிகரித்தே காணப்படும் என்று கூறப்படுகிறது.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

கச்சா எண்ணெய்!

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தே காணப்பட்டது. நைமேக்ஸ் கச்சா எண்ணெய் மட்டும் கடந்த வாரத்தில் 1 சதவிகிதம் குறைந்துள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கலான சூழல் நிலவி வந்தாலும் ஈராக்கிலிருந்து தேவையான அளவு எண்ணெய் வரத்து உள்ளதால் விலையில் பெரிய அளவில் மாற்றமின்றி வர்த்தகமாகி வருகிறது. அதுமட்டுமின்றி உலகின் இரண்டாவது மிகப் பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான சீனாவில் தேவை குறைந்துள்ளதாலும், அதேசமயம் வரத்து அதிகமாக உள்ளதாலும் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தே காணப்படுகிறது.

வரும் வாரத்தில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறையும் என்பதால் விலை குறைந்தே வர்த்தக மாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கமாடிட்டி சந்தையைப் பொறுத்தவரை, சர்வதேச சந்தைகளைப் பொறுத்தே கச்சா எண்ணெய்யின் விலை காணப்படும்.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044 66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு