பிரீமியம் ஸ்டோரி

  சென்னா (Chana)

சென்ற வாரத்தில் சென்னா விலை குறைந்து வர்த்தகமானது. மார்க்கெட் சென்டிமென்ட் பலமிழந்து காணப்பட்ட தால், சென்னாவின் விலையில் சரிவு ஏற்பட்டது. வர்த்தகர்கள் சென்னாவின் விலை மேலும் குறையக்கூடாது என எதிர்பார்க்கிறார்கள்.

அடுத்து சில தினங்களின் வரும் பருவநிலை சென்னா பயிரிடலுக்கு மிகவும் முக்கியம்.  மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் சரியான மழைப்பொழிவு இல்லாததால் மார்க்கெட் சென்டிமென்ட் பலமிழந்து காணப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் சென்னா உற்பத்தியானது 23% குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பின் மாற்றத்தினால் பர்மா, ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலிருந்து சென்னா இறக்குமதியானது குறைவாக காணப்படுகிறது. இதுவும் இந்திய சென்னா மார்க்கெட்டை பாதித்துள்ளது. தற்போதைய பருவநிலை தொடருமானால் காரீஃப் பருவத்தில் விளையும் பருப்புகளின் உற்பத்தி பாதிப்படையும். டெக்னிக்கலாக ரூ.2,810 விலை பலத்த சப்போர்ட்டுடன் உள்ளது. மேலும் விலை ஏற்றத்துக்குத் தயாராக இருப்பதுபோல் உள்ளது.

அக்ரி கமாடிட்டி!

  ஏலக்காய் (Cardamom)

ஸ்பாட் சந்தைகளில் ஏலக்காய் வரத்து அதிகமாக இருந்ததால், சென்ற வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்து வர்த்தகமானது. சந்தை நிலவரப்படி, முதல் ஏலக்காய் அறுவடையில் நல்ல விளைச்சல் கிடைத் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், வர்த்தகர்களும் ஓரளவுக்குத் திருப்திகரமாக இருக்கிறார்கள். ஆனால், வரும் இரண்டாம் சீஸனில் தரமற்ற ஏலக்காய்தான் கிடைக்கும் என கருதப்படுகிறது. காரணம், பருவம் தவறிப் பெய்துவரும் மழை மற்றும் சாதகமற்ற பருவநிலையே ஆகும்.

கடந்த வார வியாழக்கிழமை நிலவரப்படி, சராசரியாக ஒரு கிலோ 787 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதிகபட்ச விலை 1,012 ரூபாய்.

அக்ரி கமாடிட்டி!

கடுகு விதை (RM Seed)

சென்ற வாரத்தில் எண்ணெய் வித்துகளின் மீதான வலுவான மார்க்கெட் சென்டிமென்ட் காரணமாக கடுகு விதை விலை அதிகரித்து வர்த்தகமானது. இருப்பினும் மண்டிகளில் மந்தமான வர்த்தகச் சூழலே காணப்பட்டது. கடுகு விதை வரத்து 60,000  70,000 பைகளாக (ஒரு பை என்பது 85 கிலோ) இருந்தது. ராஜஸ்தான் மாநிலம் ரேப்சீடு மீதான மதிப்புக்கூட்டு வரியை ஐந்து சதவிகிதத்திலிருந்து மூன்று சதவிகிதமாகக் குறைத்துள்ளது.

ரேப்சீடு பயிர் விதைப்பு 71.38 லட்சம் ஹெக்டேர் இருக்கும் என எஸ்இஏ ஆஃப் இந்தியா கணக்கிட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட 3.89 லட்சம் ஹெக்டேர் அதிகம். ஐரோப்பாவில் வரும் ஆண்டில் 22.4 மில்லியன் டன் உற்பத்தி இருக்கும் என்று ஐரோப்பிய அமைச்சகம் கணக்கிட்டிருக்கிறது.

அக்ரி கமாடிட்டி!

இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 5.6% அதிகம். ஜெர்மனியின் குளிர்கால ரேப்சீடு உற்பத்தியானது 3.5% உயர்ந்து, 5.97 மில்லியன் டன்களாக உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ரேப்சீடு உற்பத்தியும் 19 சதவிகிதம் அதிகரிக்கும் என தெரிகிறது. ஆனால், உலக அளவில் ரேப்சீடு உற்பத்தியானது 2.7% குறைந்து 69.1 மில்லியன் டன்களாக இருக்கிறது என யுஎஸ்டியே அறிக்கை தெரிவிக்கிறது.

அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு