Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வாலட்டைல் வாரம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வாலட்டைல் வாரம்!

பிரீமியம் ஸ்டோரி

டிரேடர்ஸ் பக்கங்கள்

செய்திகள் மற்றும் ரிசல்ட்களின் போக்கை வைத்தே சந்தையின் நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றும்; செய்திகள் நெகட்டிவ்வாக இல்லாத பட்சத்தில் ஒரு சிறு அளவிலான (மைல்டு) புல்லிஷ் டிரெண்ட் வரும் வியாழனன்று வரையிலும் நீடிக்க வாய்ப்புள்ளது என்றும்; டெக்னிக்கல் டிரேடர்கள் அதீத கவனத்துடன் டிரேடிங் செய்யவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம்.

வியாழன் வரை ஏற்றத்தைச் சந்தித்த நிஃப்டி, வெள்ளியன்று தடாலடியாக இறங்கி, பின்னர் கொஞ்சம் ரெக்கவராகி வாராந்திர அளவில் 126 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் எக்ஸ்பைரி மற்றும் நான்கு டிரேடிங் தினங்களே உள்ளன. இந்திய டேட்டாக்களில் முக்கிய டேட்டாவாக வரும் வாரத்தில் வெள்ளியன்று ஹெச்எஸ்பிசி பிஎம்ஐ டேட்டா வெளிவர உள்ளது.

அமெரிக்க டேட்டாக்களில் செவ்வாயன்று கன்ஸ்யூமர் கான்ஃபிடன்ஸும், புதனன்று எம்ப்ளாய்மென்ட் சேஞ்ச், ஜிடிபி ரேட்க்யூஓக்யூ புதனன்று குவான்டிடேட்டிவ் ஈஸிங் டோட்டல், க்யூஇ டிரெஷரி, க்யூஇ எம்பிஎஸ் மற்றும் வெள்ளியன்று நான் ஃபார்ம் பேரோல் மற்றும் அன்எம்ப்ளாய்மென்ட் ரேட், ஐஎஸ்எம் மேனுபேக்சரிங் பிஎம்ஐ போன்ற முக்கிய டேட்டாக்கள் வெளிவர உள்ளது.  

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வாலட்டைல் வாரம்!

எக்ஸ்பைரி முடியும் (ஜூலை 31, வியாழக்கிழமை) வரை ஏற்ற இறக்கம்  அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எக்ஸ்பைரிக்குப் பின்னால் தலைகீழாக சந்தையின் போக்கு மாறிவிடக்கூடும் என்பதால் ஓவர்நைட் பொசிஷன்கள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே நிஃப்டியில் வியாபாரம் செய்யலாம். ஏனைய டிரேடர்கள் ஸ்டாக் ஸ்பெசிபிக்கான வியாபாரம் செய்வதே சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிர்க்க வேண்டிய நேரமிது.

25/07/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ஜிபிபிஎல் (143.25), மார்க்சன்ஸ் (33.70), பெட்ரோநெட் (184.30), ஐநாக்ஸ் லீஷர் (159.50), ஜீலியர்ன் (31.65), அம்டெக் ஆட்டோ (242.40),  ஜிஎம்ஆர் இன்ஃப்ரா (13.55), ராஜ் டிவி (123.00), பிடிலைட் இண்ட் (369.75), டயாபவர் (115.90) குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: லட்சுமி விலாஸ் (82.55), குஜராத் என்ஆர்இகோக் (11.70), ஹெச்டிஎஃப்சி பேங்க் (835.50), கோல் இந்தியா (377.00), ஜிவிகேபிஐஎல் (14.85), எக்ஸைடு இண்ட் (159.95), பார்தி ஏர்டெல் (354.80), ஹிண்டால்கோ (191.80), ஜிஎம்ஆர் இன்ஃப்ரா (25.35), ஐசிஐசிஐ பேங்க் (1475.65), விப்ரோ (551.05), ஐடியா (149.50), ஓஎன்ஜிசி (401.10), செஞ்சுரி ப்ளை (89.80), ஆப்டோ சர்க்யூட் (31.40) நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வாலட்டைல் வாரம்!

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): ஹெச்டிஎஃப்சி (1067.75), எஸ்கேஎஸ் மைக்ரோ (287), கிளென்மார்க் (636.30), இந்தியாபுல் ஹவுஸிங் (391.90), டாபர் (199.60), விஐபி இண்ட் (116), பிபிடீசி (161.85), லூபின் (1129.90), மாரிக்கோ (247.90), பாயர் கார்ப்.(1928.95) டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள்: (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): என்சிசி (69.40), தன்பேங்க் (49.25), யுபிஎல் (314.90), ஐவிஆர்சிஎல் இன்ஃப்ரா (21.60), எஸ்ஆர்இஐ இன்ஃப்ரா (46.35), எல்ஐசி ஹவுஸிங் (296), ஆன்மொபைல் (34.65), டாடா பவர் (100.65).

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: ஏஎல்பிகே (118.60), ரெடிங்டன் (98.50), டாபர் (199.60), இந்தியன் பேங்க் (157.70), பிபிடீசி (161.85), ஓரியன்ட் பேப்பர் (28.25), ஹீரோ மோட்டோகோ (2574.70), ஆயில் (582.50), ஏசிஇ (32), கோஹினூர் (49.35)  இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்குத் தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: கோல் இந்தியா (377), ஓஎன்ஜிசி (401.10), பிஐஇண்ட் (397.65), ஹெச்எஃப்சிஎல் (15.25), டிசிபி பேங்க் (78.95), ஜேபி  இன்ஃப்ரா டெக் (33.20), பிபிசிஎல் (591.55) (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்): இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: ரெடிங்டன் (98.50), டிவி18 ப்ராட்காஸ்ட் (29.85), ஹெச்டிஎஃப்சி (1067.75), மாதர்சன் சுமி (348.55), லட்சுமி விலாஸ் (82.55), எஸ்ஜேவிஎன் (23.95), கெய்ர்ன் (308.70), குஜாராத் என்ஆர்இ கோக் (11.70), ஹெச்டிஎஃப்சி பேங்க் (835.50), ஐடிசி (357.30), கோல் இந்தியா (377), டாடா மோட்டார்ஸ் (461.10), ஹெச்சிஎல் டெக் (1582.35), காம்மன் இந்தியா (28.30), எம் அண்ட் எம் ஃபைனான்ஸ் (238.70), எக்ஸைடு இண்ட் (159.95) தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கேற்றாற் போல் டிரேடிங் செய்யலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வாலட்டைல் வாரம்!

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்  (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): என்டிபிசி (148.95), ஜிவிகேபிஐஎல் (14.85), பார்தி ஏர்டெல் (354.80), என்எம்டிசி (176.25), ஐசிஐசிஐ பேங்க் (1475.65), மணப்புரம் (22.70), ஓஎன்ஜிசி (401.10), யுபிஎல் (314.90), பிஎஃப்எஸ் (31), ஜேஎம் ஃபைனான்ஷியல் (41.45), எஃப்எஸ்எல் (37.30), ரிலையன்ஸ் (1021.85) இவற்றை வியாபாரத்துக்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: வொக்பார்மா (749.35), ஜிபிபிஎல் (143.25), டாடா ஸ்பான்ஜ் (1102.60), கிளென் மார்க் (636.60), இந்தியாபுல் ஹவுஸிங் (391.90), ஷரான்பயோ (69.85), பிபிடீசி (161.85), ஆஷியானா ஹவுஸிங் (170.55), பாயர் கார்ப் (1928.95)

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு