சென்ற வாரம் 80சி பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகை தரக்கூடிய ஒரு ஃபண்டைப் பற்றிப் பார்த்தோம். இந்த வாரம் மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்து தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டைப் பற்றி விரிவாகக் காண்போம்.

இது 6,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்தை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் சைலேஷ் ராஜ் பான். இவர் இந்த ஃபண்டை 2005-ம் ஆண்டிலிருந்து நிர்வகித்து வருகிறார்.
இது மார்ச் 2005-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மல்டி கேப் திட்டமாகும். இந்த ஃபண்ட் சந்தைக்கு ஏற்ப தனது போர்ட்ஃபோலியோவை மாற்றிக்கொள்ளும். சில சமயங்களில் லார்ஜ் கேப் பங்குகளில் அதிகமாக முதலீட்டை வைத்துக்கொள்ளும்; சில சமயங்களில் மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளில் அதிகமாக முதலீட்டை வைத்துக்கொள்ளும். தற்போது இதன் போர்ட்ஃபோலியோவில் 33 சத விகிதத்தை லார்ஜ் கேப் பங்குகளிலும், எஞ்சியதை மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளிலும் வைத்துள்ளது.

அதேபோல், துறை சார்ந்த ஒதுக்கீட்டி லும் விகிதாசாரம், ஃபண்ட் மேனேஜரின் பார்வைக்கு ஏற்ப மாறுபடும். மேலும், எழும்பிவரும் துறைகளான இன்ஷூரன்ஸ், ரீடெய்ல், என்டர்டெய்ன்மென்ட் போன்ற துறை களுக்கு இந்த ஃபண்ட் தொடர்ந்து ஒரு ஒதுக்கீட்டைக் கொடுக்கிறது.

ஆக மொத்தத்தில், ஃபண்ட் மேனேஜர் தனது விருப்பம்போல முதலீட்டை மேற்கொள்ளும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஃபண்டின் இன்றளவுவரை உள்ள செயல்பாட்டைப் பார்க்கும்போது, ஃபண்ட் மேனேஜருக்குத் தரப்பட்ட சுதந்திரத்தை நன்றாகவே பயன்படுத்தியுள்ளது தெரிய வருகிறது.

இந்த ஃபண்டினுடைய மேனேஜரின் நோக்கம் லார்ஜ் கேப் பங்குகளின் நிரந்தரத் தன்மையையும், மிட் கேப் பங்குகளின் வளர்ச்சியையும் ஒருசேர பிடிப்பதுதான். அதனால் பொதுவாக 60:40 யுக்தியைக் கடைப்பிடிக்கிறது. அதாவது, எந்த நேரத்திலும் 60 சதவிகித லார்ஜ் கேப் பங்குகளும், 40 சதவிகித மிட்

அண்ட் ஸ்மால் கேப் பங்குகளும் இருக்கும். இல்லையேல் அதுவே உல்ட்டாவாக இருக்கும். அதுபோல் மிட் கேப் பங்குகள் சூடாகும்போது அவற்றை விற்றுவிட்டு, கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும் லார்ஜ் கேப் பங்குகளை வாங்குவதற்கு இந்த ஃபண்ட் யோசிப்பது இல்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரும்போது லார்ஜ் கேப் சூடாகிவிடும். அதுபோன்ற சமயங்களில், ஃபண்ட் மேனேஜர் மிட் கேப் பங்குகளில் முதலீட்டை அதிகமாக்கிக் கொள்வார். இவ்வளவு செய்தும் இந்த ஃபண்டினு டைய டேர்னோவர் 27 சதவிகிதம்தான். இந்த விகிதம் ஃபண்ட் மேனேஜர் நீண்ட நாட்கள் பங்குகளைத் தனது போர்ட் ஃபோலியோவில் வைத்திருப்பதைக் காண்பிக்கிறது.

இன்ஜினீயரிங், சர்வீசஸ், ஹெல்த்கேர் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டா கவும், ஃபைனான்ஸ் மற்றும் டெக்னாலஜி யில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது. உதாரணத்துக்கு இன்ஜினீயரிங் மற்றும் சர்வீசஸ் துறைகளின் நிஃப்டி 50 வெயிட் முறையே 0.88% மற்றும் 0% ஆகும். ஆனால், இந்த ஃபண்டோ 15.76% (இன்ஜினீயரிங்) மற்றும் 13.63% (சர்வீசஸ்) வைத்துள்ளது.

நிஃப்ட்டி 50 குறியீட்டையொட்டி தனது போர்ட்ஃபோலியோவை அமைத்துக்கொள்ளாத போதிலும், கடந்த காலங்களில் (1, 3, 5 மற்றும் 7 வருடங்களில்) தொடர்ச்சியாகக் குறியீட்டைவிட அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளது. இது இந்த ஃபண்டினு டைய ஆல்ஃபாவிலிருந்து (Alpha) தெரிகிறது.

இந்த ஃபண்டினுடைய ஆல்ஃபா 7.58 ஆகும். இது குறியீட்டைவிட 7.58% அதிக வருமானம் கொடுத்துள்ளதைக் காண்பிக்கிறது. இந்த அளவு அதிக வருமானத்தைக் குறைந்த ரிஸ்க்கில் கொடுத்துள்ளது, அதைவிடச் சிறந்ததாகும்.

குறைவான ரிஸ்க் என்பது இந்த ஃபண்டின் பீட்டாவிலிருந்து (Beta) தெரிய வருகிறது. இந்த ஃபண்டின் பீட்டாவான 0.96 சந்தையைவிடக் குறைவான ரிஸ்க் எடுத்துள்ளதைக் காட்டுகிறது (பீட்டா 1 என்பது சந்தைக்கு ஈடான ரிஸ்க்).

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.30.66 ஆகும். ஃபண்ட் ஆரம்பித்த இரண்டாம் ஆண்டிலிருந்து, 2010-ம் ஆண்டைத் தவிர, ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து டிவிடெண்டை வழங்கியுள்ளது இந்த ஃபண்ட்.

ஹைரிஸ்க், ஹைரிவார்டை விரும்புபவர்கள், இளைஞர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர் கள் என அனைவரும் இந்த ஃபண்டில் எஸ்ஐபி முறையிலும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீட்டை தாராளமாக மேற்கொள்ளலாம்.

யாருக்கு உகந்தது?

இளம் வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடித் தேவை இல்லாதவர்கள்.

யாருக்கு உகந்ததல்ல?

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உறுதியான / நிலையான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள்.