கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து காணப்பட்டது. அமெரிக்கச் சந்தைகளில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளதாலும், அமெரிக்காவில் வெளியாகியுள்ள தகவல்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதும் கச்சா எண்ணெய்யின் விலையேற்றத் துக்குக் காரணமாகியுள்ளது.

ஈராக் மற்றும் உக்ரைனில் உள்ள உள்நாட்டு சிக்கலைப் போக்க அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ள விமானத் தாக்குதல் மற்றும் அங்கு பாதிப்புக்குள் ளான மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது போன்ற செய்திகளால் மீண்டும் பதற்ற நிலை உருவாகியுள்ளதால் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி இஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த வாரம் 365 மில்லியன் பேரல்களாக இருந்த இருப்பில் இருந்து 1.7 மில்லியன் பேரல் அளவுக்கு குறையும் என்று கூறியுள்ளது.
வரும் வாரங்களிலும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தே வர்த்தகமாகும். சர்வதேச சந்தையில் 98.50 டாலராக உள்ள கச்சா எண்ணெய்யின் விலை 100-101 டாலர் வரை உயர வாய்ப்புள்ளது.
இந்திய சந்தையில் 6,080 ரூபாயாக உள்ள கச்சா எண்ணெய் 6,230 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளது'' என்றார்.

தங்கம்!

தங்கத்தின் விலை இந்த வாரம் சற்று அதிகரித்தே வர்த்தகமாகி வருகிறது. ஈராக் மற்றும் உக்ரைனில் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்குதல் அறிவிப்புகள் விடுத்ததையடுத்து பிரச்னைகள் மீண்டும்

எழத்தொடங்கியுள்ளன.

அதேசமயம் முதலீட்டாளர்களுக்கு கோல்டு இடிஎஃப் மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. சர்வதேச பிரச்னை களால் தங்கம் விலையில் சற்று ஏற்றம் காணப்படுவதால், வரும் வாரங்களிலும் தங்கத்தின் விலை ஏற்றத்திலேயே இருக்கும் என்று கூறப்படுகிறது.

தங்கத்தின் விலை சர்வதேச சந்தை களில் ஒரு அவுன்ஸ் 1,313 டாலராகவும், இந்திய கமாடிட்டி சந்தைகளில் 10 கிராம் தங்கத்தின் விலை 28,900 ரூபாய் அளவிலும் வர்த்தகமாகி வருகிறது. ரூபாயின் மதிப்பைப் பொறுத்து தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும். ரூபாயின் மதிப்பு குறைந்தே வர்த்தகமாவதால் தங்கத்தின் விலை இந்திய சந்தைகளில் அதிகரித்தே காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி!

கடந்த வாரத்தில் வெள்ளியின் விலை குறைந்தே காணப்பட்டது. தங்கத்தின் விலை சற்று ஏற்றத்தில் காணப்பட்டாலும் வெள்ளியின் விலை இறக்கத்திலேயே இருந்தது. உலோகங்களின் மீதான முதலீட்டில் ஆர்வம் குறைந்து காணப்படுவதும், அமெரிக்கச் சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதும் வெள்ளியின் விலை வீழ்ச்சிக்குக் காரணமாகிறது.

கடந்த வாரத்தில் வெள்ளியின் விலை 0.2% குறைந்துள்ளது. சிறிய அளவில் விலை குறைந்து காணப்படுவதால் வரும் வாரத்தில் சற்று ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை கடந்த நான்கு வாரங்களில் இல்லாத அளவுக்கு 20 டாலருக்குக் கீழ் குறைந்து 19.9 டாலராக உள்ளது.

இந்திய சந்தையில் வெள்ளியின் விலை சர்வதேச சூழலைப் பொறுத்தும் ரூபாயின் மதிப்பைப் பொறுத்தும் அமையும் என்று கூறப்படுகிறது.

காப்பர்!

அடிப்படை உலோகங்களில் காப்பரின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து வெளியான தகவல்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளதாலும், வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் காப்பரின் விலை அதிகரித்துள்ளது.

சீனாவில் இருந்துவரும் பணவீக்கம் தொடர்பான செய்திகளால் காப்பரின் விலையில் சற்று சறுக்கல்கள் இருக்கலாம் என்பதால், வரும் வாரத்தில் காப்பரின் விலையில் பெரிய மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வியாழனன்று சர்வதேச சந்தைகளில் 0.3% அதிகரித்துக் காணப்பட்ட காப்பரின் விலை, இந்திய கமாடிட்டி சந்தைகளில் 0.4% அதிகரித்துக் காணப்பட்டது.
ரூபாயின் மதிப்பு குறைவதாலும், அடிப்படை உலோகங்கள் மீதான ஆர்வம் குறைந்துள்ளதாலும் பெரிய மாற்றங்கள் காப்பரின் விலையில் இருக்காது என்று கூறப்படுகிறது.

இயற்கை எரிவாயு!

அமெரிக்க எரிசக்தி தகவல் அமைப்பான இஐஏ-வின் அறிக்கைப்படி, சர்வதேச சந்தைகளின் மந்தநிலையால் இயற்கை எரிவாயுவின் விலை பாதிக்கப்பட்டுள்ளது. தவிர, சர்வதேச பிரச்னைகளாலும் இயற்கை எரிவாயுவின் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தைகளில் இயற்கை எரிவாயுவின் விலை 2% குறைந்தும், இந்திய கமாடிட்டி சந்தையில் 1.44% குறைந்தும் வர்த்தகமானது. வரும் வாரங்களிலும் இதன் விலை குறைந்தே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.