இந்த வாரம் ஜீரகத்தின் விலைப்போக்கு குறித்து விரிவாகச் சொல்கிறார் ஃபார்ச்சூன் ஃபைனான்ஷியல் நிறுவனத்தின் கமாடிட்டி பிரிவின் தலைமை நிர்வாகி கமலேஷ் ஜோகி.

ஜீரகம் (Jeera)

“தேவை குறைவின் காரணமாக ஜீரகத்தின் விலையானது கடந்த வாரம் குறைந்து காணப்பட்டது. சந்தை நிலவரப்படி, வரும் வாரங்களில் புதிய ஜீரக வரத்து சந்தைக்கு வரும்போது விலை மேலும்

குறையும்; அப்போது வாங்கலாம் என்று வர்த்தகர்கள் காத்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் ஜீரகத்தின் விலையானது கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் ஜீரக பயிர் பரப்பளவு 4.55 லட்சம் ஹெக்டேராகும். இதற்கு முந்தைய ஆண்டில் இது 3.35 லட்சம் ஹெக்டேராக இருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜீரக உற்பத்தியானது 3.90 லட்சம் ஹெக்டேர்.

வழக்கம்போல, துருக்கி மற்றும் சிரியாவில் நிலவிவரும் அரசியல் பதற்றம் காரணமாக உலகச் சந்தைகளில் சப்ளை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய ஜீரகத்துக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன. சிரியா மற்றும் துருக்கியில் பயிர் சேதம் காரணமாக உற்பத்தி குறையும்.

கடந்த வியாழக்கிழமையில் உஞ்ஹா சந்தைக்கு ஜீரகத்தின் வரத்து 7,000 பைகள் (ஒரு பை என்பது 55 கிலோ). இது புதன்கிழமை வரத்தைவிட 2,000 பைகள் அதிகம். ஏப்ரல்-மார்ச், 2013-14ம் ஆண்டில் ஜீரகத்தின் ஏற்றுமதி 42% அதிகரித்து, 1.21 லட்சம் டன்களாக உள்ளன. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 85,602 டன்களாக இருந்தது.

கடந்த சில வாரங்களாகவே ஜீரகத்தின் தேவை குறைந்தே காணப் படுவதால் வரும் வாரத்திலும் ஜீரகத்தின் விலையும் குறைந்தே வர்த்தகமாகும்.”

சென்னா (Chana)

கடந்த வாரத்தில் சென்னா விலை அதிகரித்து வர்த்தகமானது. விழாக்காலத் தேவை காணப்பட்டதாலும், வரத்துக் குறைவு காரணமாகவும் விலை அதிகரித்தது. வேளாண்மை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையில் ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி, காரீஃப் பருவ பருப்பு வகைகள் பயிர் விதைப் பானது 6.72 மில்லியன் ஹெக்டேர் அளவு காணப்படுகிறது. இது அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் 8.3 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு ஆகிய பயிர் விதைப்புகள் முறையே 2.54 மில்லியன், 1.63 மில்லியன் மற்றும் 1.45 மில்லியன் ஹெக்டேர்களாக உள்ளன. சென்ற வாரத்தில் துவரம் பருப்பு விலையானது ஒரு குவிண்டாலுக்கு 50 ரூபாய் அதிகரித்து, 4,350 ரூபாய்க்கும், உளுந்து ஒரு குவிண்டாலுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 4,600 ரூபாய்க்கும் வர்த்தகமானது.

மூன்றாவது அட்வான்ஸ் எஸ்டிமேட் நிலவரப்படி, 2013-14-ம் ஆண்டுக்கான மொத்த பருப்பு வகைகளின் உற்பத்தி 19.6 மில்லியன் டன்கள். இது இதற்கு முந்தைய ஆண்டில் 19.8 மில்லியன் டன்களாக இருந்தது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளதால், அறுவடையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

வேளாண்மை அமைச்சகத்தின் நிலவரப்படி, ராபி சீஸனில் சென்னா பயிர் விதைப்பானது 2013-14-ம் ஆண்டில் 10.21 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் 9.51 மில்லியன் ஹெக்டேராக இருந்தது.

சென்னா தேவை அதிகமாக இருப்பதால், வரும் வாரத்திலும் விலை அதிகரித்தே வர்த்தகமாகும்.

மஞ்சள் (Turmeric)

சாங்லி ரக மஞ்சள் பயிர் விளைச்சலில் சேதம் ஏற்பட்டுள்ளது என்கிற செய்தியின் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமையில் மட்டும் மஞ்சள் விலையானது அதிகரித்து வர்த்தகமானது. மற்றபடி தேவை குறைவு மற்றும் தரமற்ற மஞ்சள் வரத்துக் காரணமாக விலை குறைந்தே வர்த்தகமானது.
மார்க்கெட் சென்டிமென்ட் காரணமாக விலை மேலும் குறையா மலும் தடுக்கப்பட்டது. நிஜாமாபாத் மற்றும் ஈரோடு மண்டிகள் வியாழக்கிழமை வரத்துகள் முறையே 2,500 பைகள் மற்றும் 6,000 பைகள் (ஒரு பை என்பது 75 கிலோ) காணப்பட்டது.

2013-14-ம் ஆண்டின் உற்பத்தியானது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்திலிருந்து 10-15% குறைந்து, 40 லட்சம் பைகளாகக் காணப் படுகிறது.

இருப்பினும் ஏப்ரல்-டிசம்பர்-2013ல் மஞ்சள் ஏற்றுமதி 58,000 டன்னாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 49,526 டன்னாக இருந்தது.

வருகிற வாரங்களில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி தேவை இருக்கும் என்று எதிர்பார்ப்பதால், விலையிலும் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சாங்லி பயிர் சேதம், குறைவான மஞ்சள் விதைப்பு போன்ற காரணங்களும் மஞ்சள் விலை உயர்வுக்குக் காரணமாக அமையும்.

சோயாபீன் (Soybean)

சோயாமீல் ஏற்றுமதியானது குறைவாக இருந்ததால், சென்ற வாரத்தில் வர்த்தகர்களிடையே சோயாபீன் வாங்கும் ஆர்வம் குறைந்து காணப்பட்டது. இந்தியாவின் ஆயில்மீல் ஏற்றுமதியானது 43% குறைந்துள்ளது.

ஏப்ரல்-ஜூலை 2014-நிலவரப்படி, ஆயில்மீல் ஏற்றுமதியானது 7,21,577 டன்களாகும். இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 10,38,819 டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வேளாண்மை அமைச்சகத்தின் ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி, சோயாபீன் பயிர் விதைப்பானது 9.54 மில்லியன் ஹெக்டேர். இது அதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 11.74 மில்லியன் ஹெக்டேராகும். இதற்குக் காரணம், இந்த முறை வழக்கத்தைவிட சாதாரண பருவ சூழ்நிலை காணப்பட்டதுதான்.

பருவநிலை மற்றும் மிதமான சோயாமீல் ஏற்றுமதி காரணமாக வரும் வாரத்திலும் சோயாபீன் விலை குறைந்து வர்த்தகமாகும்.