இந்த வாரம் நாம் ஸ்கேன் செய்யப்போகும் கம்பெனி பிளாஸ்டிப்ளெண்ட்ஸ் இந்தியா லிட் (Plastiblends India Ltd.)என்னும் நிறுவனத்தை. 1991ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய தெர்மோ பிளாஸ்டிக் மற்றும் மாஸ்டர்பேட்சஸ் ஏற்றுமதியாளர்களான கோல்சைட் குரூப் சம்பந்தப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்தியாவின் பிளாஸ்டிக்குக்கு கலர் சேர்க்க உதவும் மாஸ்டர்பேட்ச் என்ற பொருளைத் தயாரித்து விற்பனை செய்கிறது. நிறுவப்பட்ட வருடாந்திர உற்பத்தித்திறனாகிய 50,000 டன் என்ற அளவுடன் செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், பிளாஸ்டிக்குகளுக்கு கலர் அளிக்கும் பொருட்கள் தயாரிப்பில் ஆர்கனைஸ்டு செக்மென்டில் தயாராகும் இந்தியாவின் மொத்த சந்தை மதிப்பில் ஏறக்குறைய 60 சதவிகித பங்களிப்பை தன்வசம் வைத்துள்ளது.

இந்தியாவில் மொத்தமாக உற்பத்தி யாகும் மாஸ்டர்பேட்சஸ் அளவு வருடாந்திர அளவில் ஏறக்குறைய 3.5 லட்சம் டன் என்று கணக்கிடப்படுகிறது. இந்த உற்பத்தி அளவு ஆர்கனைஸ்டு மற்றும் அன் ஆர்கனைஸ்டு செக்டாரின் உற்பத்தியை உள்ளடக்கியது. இந்த இரண்டையும் சேர்த்து மொத்த சந்தை விற்பனை மதிப்பில் இந்த நிறுவனம் ஏறக்குறைய 1315 சதவிகித சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளது.

இந்த நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப ஏறக்குறைய 800 வகையான காம் பவுண்ட்களை வெவ்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல் தயாரித்து வழங்குகிறது. அதுவும் தவிர, இந்த நிறுவனம் இந்திய அரசாங்கத்தால் ஓர் ஏற்றுமதி நிறுவனத்துக்கு நிகரான அங்கீகாரத்தைப் பெற்றுள்ள நிறுவன மாகும். தற்சமயம் அறுபதுக்கும்.

மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. மொத்த விற்பனையில் ஏறக்குறைய 30% அளவுக்கு ஏற்றுமதி விற்பனை இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டத்தை வைத்துள்ளது.

கடந்த மூன்றிலிருந்து நான்கு வருடங்களுக்குள்ளாகவே தனது மார்க்கெட் ஷேரை 8 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்த்திக் கொண் டுள்ளது. அடுத்த 35 ஆண்டு காலத்துக்குள் தற்போதைய உற்பத்தித் திறனிலிருந்து உற்பத்தி அளவை 75,000 டன் அளவுக்கு மாற்றிக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் வருமானம் பெரும்பாலான காலகட்டத்தில் அந்தத் தொழிலில் இருக்கும் ஏனைய நிறுவனங் களின் வருமானத்தைவிட தொடர்ந்து அதிகமாகவே இருந்து வந்துள்ளது. உதாரணத்துக்கு, 200710 நிதியாண்டுகளில் இந்த நிறுவனத்தின் வருமானம் ஏறக்குறைய 19% (சிஏஜிஆர்) அளவில் இருந்து வந்துள்ளது. அதே காலகட்டத்தில், அந்தத் துறையின் வருமான வளர்ச்சி ஏறக்குறைய 1213% என்கிற அளவிலேயே இருந்துவந்துள்ளது.

இது எப்படி சாத்தியமாகிறது எனில், வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு புதுப்புது உத்தி களையும் அதிக அளவிலான தரத்தில் பொருட்களைக் கொடுத்து லாபத்தை அதிகப்படுத்துவதுமே ஆகும். தரம் மிகவும் உயரியதாக இருப்பதால், பிளாஸ்டிப்ளெண்ட்ஸ் நிறுவனம் நன்றாகவே லாபம் நிர்ணயித்து தனது தயாரிப்பினை விற்க முடிகிறது.

இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் களாக மிகவும் பெரிய நிறுவனங்களாகிய ஜேபிஎஃப் இண்டஸ்ட்ரீஸ், பாம்பே டையிங், வெல்பேக் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்கள் இருந்து வருகின்றன.

இந்தியாவில், பிளாஸ்டிக் மாஸ்டர் பேட்ச்களின் விற்பனை வளர்ச்சியும் ஏறக்குறைய வருடாந்திர அளவில் 1213 சதவிகித அளவில் இருக்கிறது. இதன் பேலன்ஷீட்டை ஆராய்ந்து பார்த்தாலும், ஆவரேஜ் ரிட்டர்ன் ஆன் ஈக்விட்டி ஏறக்குறைய 17 சதவிகித அளவில் இருக்கிறது. கடன் அளவு குறைவாக இருப்பதும் சாதகமான விஷயம்.

ரிஸ்க் ஏதாவது உண்டா?

பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழல் தொடர்பானது. இந்த நிறுவனம் இந்தத் துறையில் இருப்பதால், அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே செயல்பட வேண்டியிருக்கும். இந்தத் தொழிலுக்கும் பொருளாதார மந்தநிலை மிகப் பெரிய தடைக்கல்லாக அமையும் வாய்ப்பு இருக்கிறது.

ஏன் முதலீடு செய்யலாம்?

இந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான தயாரிப்புகள் தொழில் மற்றும் வேறொரு நிறுவனத்தின் பயன்பாட்டுக்கே இருக்கிறது. அன் ஆர்கனைஸ்டு செக்டாரின் போட்டி கடுமையாக இருந்தபோதிலும், தனது வளர்ச்சியையும் லாபத்தையும் பெரிய அளவில் குறைத்துக்கொள்ளாமலேயே செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம்.

சிறிய அளவிலான நிறுவனம் (ஸ்மால் கேப்) என்பதால், அதற்கே உண்டான ரிஸ்க் இருக்கும்போதிலும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் மிகச் சிறிய அளவுக்கு, ஒரு அசாதராண சூழலில் விலை இறக்கம் வரும்போது குறைந்த எண்ணிக்கையில் இந்தப் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் வாங்கிப்போடலாம். வாங்கிப்போட்டால் மட்டும் போதாது. இந்த நிறுவனம் குறித்த செய்திகளை டிராக் செய்து சரியான சமயத்தில் விற்று வெளிவரவும் வேண்டும்.

நாணயம் ஸ்கேனர்.

(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்)