Published:Updated:

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

ச.ஸ்ரீராம்

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

ச.ஸ்ரீராம்

Published:Updated:

தங்கம்!

‘‘தங்கத்தின் விலையானது கடந்த மாதம் 10-ம் தேதியில் நடந்த பெரிய ஏற்றத்துக்குப்பின், கடந்த  ஒரு மாத காலமாக 800 ரூபாய் இடைவெளியில் பெரிய ஏற்ற இறக்கமின்றி வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்காவில் வெளிவந்த வேலைவாய்ப்பு பற்றிய செய்திகள் அனைத்தும் அந்த நாட்டின் பங்குச் சந்தைக்கு சாதகமாகவே உள்ளது.

தற்போதைய வர்த்தகத்தில், ரெசிஸ்டன்ஸ் லெவலை உடைக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்கச் சந்தையின் செய்திகள் தங்கத்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த ஏற்றத்தை  எதிர்பார்க்கலாம். இந்திய சந்தைகளில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந் திருப்பதும் இந்த ஏற்றத்துக்கு காரணமா கிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1312 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்
கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

மேலும், உக்ரைன், ஈராக், காசா பிரச்னைகளில் மேலும் சிக்கல் வந்தால், அது தங்கத்தின் விலையேற்றத்துக்கு வழிவகுக்கும்.

 கடந்த வியாழனன்று இந்திய கமாடிட்டி சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலை 28,700 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமானது. இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கத்தின் சப்போர்ட் லெவல் ரூ.28,300 - ரூ.27,800. ரெசிஸ்டன்ஸ் லெவல்: ரூ.29,000 - ரூ.29,500.”

வெள்ளி!

கடந்த வாரம் தங்கத்தின் விலை குறைந்து காணப்பட் டதால், வெள்ளியின் விலையும் சரிவோடு வர்த்தகமாகி வந்தது. கடந்த புதனன்று 0.9% சரிந்த வெள்ளி சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 19.8 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.

உக்ரைன் பிரச்னையால் அடிப்படை உலோகங்களின் விலை இறங்க தொடங்கியதும், வெள்ளியின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துயுள்ளது. இதனால் அடுத்த வாரத்தில் வெள்ளியின் விலை இறக்கதோடு வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பர்!

காப்பரின் விலை குறைந்தே வர்த்த கமாகி வருகிறது. சர்வதேச சந்தை களில் அடிப்படை உலோகங்களின் சரிவாலும், சீனாவின் கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பாலும் காப்பரின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் காப்பரின் விலை ஒரு சதவிகிதம் குறைந்து கடந்த ஏழு வாரத்தில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. ஐரோப்பிய சந்தைகளில் உள்ள பொருளாதார மந்தநிலையாலும் காப்பரின் விலை சரிவில் உள்ளது என்று கூறப்படுகிறது.

சீனாவின் பொருளாதார நிலை காரணமாக, காப்பருக்கான தேவை குறைவதும், ஜெர்மனியின் ஜிடிபி குறைவதாலும் காப்பரின் விலை வரும் வாரங்களிலும் குறைந்துதான் வர்த்தக மாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கமாடிட்டி சந்தையில் 1.7% குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இந்திய கமாடிட்டி சந்தையில் ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களாலும் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய் யின் விலை அதிக மாறுதல் இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க எரிபொருள் தகவல் அமைப்பான இஐஏ தகவலின்படி, கச்சா எண்ணெய் இருப்பு 1.4 மில்லியன் பேரல்களாக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி அமெரிக்க அதிபர் ஒபாமாவின் தாக்குதல் அறிக்கையைத் தொடர்ந்து 130 ராணுவ வீரர்களை ஈராக் அனுப்பி இருப்பதால் பதற்ற நிலையும் போர் அபாயமும் அதிகரித்துள்ளது. இருப்பினும் லிபியாவிலிருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகமாகியுள் ளதால் விலை ஏற்றம் தடுக்கப்படும்..

ஈராக், உக்ரைன் பிரச்னைகளில் பெரிய மாறுதல் இல்லாதபட்சத்தில் விலை குறைந்தே காணப்படும். இந்திய சந்தைகளில் விலை இறக்கத்தோடு வர்த்தகமாகி வரும் கச்சா எண்ணெய், வரும் வாரங்களிலும் அதே நிலையில் தான் வர்த்தகமாகும் எனக் கூறப்படுகிறது.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

இயற்கை எரிவாயு!

கடந்த வாரம் இயற்கை எரிவாயு இந்திய சந்தைகளில் அதிக இறக்கத்துடன் காணப்படுகிறது. அமெரிக்காவில் வர்த்தகர்கள் லாபத்தை எடுக்க நினைத்ததால், விலையில்
4 சதவிகித அளவுக்கு வீழ்ச்சி இருந்தது.

அமெரிக்காவின் தட்பவெட்ப நிலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருப்பதாலும், இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் வரத்து அதிகமாக இருப்பதாலும் இயற்கை எரிவாயுவின் விலை குறைந்தே காணப்படும்.

இந்தியச் சந்தைகளை பொறுத்தவரை, ரூபாயின் மதிப்பு மேலும் வலுவிழந்தால் விலையேற்றம் இருக்கக்கூடும்.

குறிப்பு: தகவல்கள் மற்றும் அட்டவணை விவரங்கள் 14.8.2014 நிலவரப்படி தரப்பட்டுள்ளது.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044 -66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!