Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் ஏற்றம் தொடரும்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் ஏற்றம் தொடரும்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் ஏற்றம் தொடரும்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் ஏற்றம் தொடரும்!

Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

கடந்த சில நாட்களாக சந்தை டெக்னிக்கலாக நன்றாகவே வீக்காக இருந்து வருகிறது என்றும் இந்த நிலை மேலும் கீழே போவதற்கான அறிகுறி என்றே சொல்லலாம் என்றும் ரிவர்ஸல்கள் வந்தால்
7630 லெவலைத் தாண்டி மேலே வால்யூமுடன் குளோஸாகும் வரை ஏறுமுகம் வந்துவிட்டது என்று நம்ப வேண்டியதில்லை என்றும் சொல்லியிருந்தோம்.

வாரம் முழுவதுமே ஏற்றத்தை சந்தித்த நிஃப்டி வியாழனன்று இறுதியில் வாராந்திர ரீதியாக 223 பாயின்ட் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சந்தை சற்று குழப்பமான சூழ்நிலையில் இருப்பதைப் போன்ற தோற்றமிருந்தாலும் ஃபண்டமென்டல் எதிர்பார்ப்பு களிலேயே வேகமான ஏற்றத்தை தந்துள்ளது. நிஃப்டியின் மூவ்மென்டுகளும் மற்ற பங்குகளின் மூவ்மென்டுகளும்   பெரும்பான்மையான விஷயங்களில் ஒன்றுக்கு எதிர்பதமாக இருப்பதால் மிகவும் எச்சரிக்கையுடனேயே டிரேடர்கள் செயல்பட வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் ஏற்றம் தொடரும்!

மீண்டும் டெக்னிக்கல்கள் செயல்படாமல் போகக்கூடிய வாரத்தினுள் நுழைகின்றீர்கள். எனவே, செய்திகள் மற்றும் ஃபண்டமென்டல் களே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதை புரிந்துகொண்டு டிரேடிங்கில் இறங்கவேண்டும். முக்கிய இந்திய டேட்டா வெளியீடுகள் இல்லாத வாரம் இது. அமெரிக்க டேட்டாக்களில் செவ்வாயன்று கோர் இன்ஃப்ளேஷன் டேட்டாவும், இன்ஃப்ளேஷன் டேட்டாவும், புதனன்று எஃப்ஓஎம்சி மினிட்ஸும் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களாகும்.

வால்யூமின் மீது கண் வைத்து வியாபாரம் செய்ய வேண்டிய தருணம் இது. வால்யூம் நடக்காமல் இறங்கினாலும் சரி, ஏறினாலும் சரி டிரேடர்கள் சந்தையை விட்டு விலகி நிற்பதே சரியானதொரு ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.

14/08/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: சியுபி(75.50), ஏசியன் பெயின்ட்(617.80), எஃப்எஸ்எல்(37.20), ஐபி ஹவுஸிங் ஃபைன்(388.75), எஸ்ஜேவிஎன்(24.35), டிசிடபிள்யூ(22.70), ஐபி பவர்(10.15) குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: லஷ்மி விலாஸ்(80.50), ஹெச்டிஎஃப்சி(1124.30), பிப்பவ் டாக்(47.75), கெர்ய்ன்(318.60), பிரிசம் சிமென்ட்(80.75), அதானி போர்ட்ஸ்(272.40) நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாரந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்கிற்கு வாட்ச் செய்ய உகந்தது): கேஎஸ்சிஎல்(833.75),  ரெயின்(42.95), சிப்லா(448.60), ரிலையன்ஸ்(1002.95), பிஎஃப்எஸ்(38.05), டாபர்(217.90), சிசிஎல்(82.90), இகாரிஷி(198.55), சொனாட்டா சாஃப்ட்(84.15), இந்தியா சிமென்ட்(113.10).

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:எதிர்பார்ப்புகள் நிறைவேறினால் ஏற்றம் தொடரும்!

உறுதியாய் வாரந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்கிற்கு வாட்ச் செய்ய உகந்தது): ஐடிஎஃப்சி(145.40), ஜிந்தால்சா(77.35), விப்ரோ(545.95), மெர்கர்டர்(32.15), மணப்புரம்(21.85), ஜிடிஆஃப்ஷோர்(96), அக்ஷ்ஆஃப்டி பைபர்(15.35), டிபி ரியாலிட்டி(72.65), போர்டிஸ்(113.95).

சற்று பாசிட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள்: சியுபி(75.50), என்டிபிசி(142.05), ஹெச்டிஎஃப்சி பேங்க்(826.70), ரெயின்(42.95), சிப்லா(448.60), ஐசிஐசிஐ பேங்க்(1479.65), சசூன் பார்மா(165.90), டாடா மோட்டார்ஸ்(484.60), இந்தஸ்இந்த் பேங்க்(548.25), எஸ்எஸ்எல்டீ(289.50), பிபிசிஎல்(613.35) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்திற்கு தவிர்க்கவும்.
 

சற்று நெகட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள்: நேஷனல் அலுமினியம்(56.60), பிசி ஜுவல்லர்(127.35), ஜேபிஎஃப் இண்ட் (138.50) (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தை தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: இந்த் ஹோட்டல்(81.80), கேஇசி(100.05), மாரிக்கோ(266.05), டிவி18ப்ராட்காஸ்ட்(28.65), இசட்இ இஎல்(270), இன்ஃப்ராடெல்(267.60), ஹெச்டிஎஃப்சி(1124.30), டிசிபி பேங்க்(80.15), கோட்டக் பேங்க்(953.35), உஜாஸ்(25.85), நேஷனல் அலுமினியம்(56.60),கோல் இந்தியா(356.45), புஞ்ச் லாயிட்(36.90), சன் டிவி(369.35), ஹெச்டிஎஃப்சி பேங்க்(826.70), தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): என்டிபிசி(142.05), இன்ஃபி(3612.55), பார்தி ஏர்டெல்(365.20), பவர்கிரிட்(133.20), விப்ரோ(545.95), என்எம்டிசி(174.45), கெய்ர்ன்(318.60), ரிலையன்ஸ்(1002.95), பிஎஃப்எஸ்(38.05), எம் அண்ட் எம்(1321.85), பெட்ரோ நெட்(172), டிடிஎம்எல்(10.50), எல் அண்ட் டி(1484.10), அனந்த்ராஜ்(58.40), டாடா மோட்டார்ஸ்(484.60) இவற்றை வியாபாரத்திற்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: ரெயின்(42.95). ஹீலியோஸ்மேத்(85.95), மாஹா சீம்லெஸ்(314.25), ஜிஹெச்சிஎல்(67.75), இகாரிஷி(198.55), மேக்(367.05), விர்ல்பூல்(415.35), கைட்டெக்ஸ்(287.05) .

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.