நடப்பு
Published:Updated:

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

ச.ஸ்ரீராம்

தங்கம்!

‘‘தங்கத்தின் விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. இரண்டு வாரங்களாக டாலரின் மதிப்பு உயர்ந்து வர்த்தகமாகி வருவதாலும், சீனாவில் தங்கத்தின் மீதான சேமிப்பு குறைந்து வருவதாலும் விலை குறைந்துள்ளது.

அமெரிக்காவில் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிப்பு குறித்த எதிர்பார்ப்பினாலும்  தங்கத்தின் விலை குறைந்துள்ளது. மேலும், வேலை வாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளதும் தங்கத்தின் விலை குறைய காரணமாக உள்ளது.

வரும் வாரத்தில் சர்வதேச கமாடிட்டி சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க பொருளாதார நிலையையும், டாலரின் மதிப்பையும் பொறுத்தே அமையும்.

வரும் வாரத்தில் தங்கத்தின் விலை சற்று குறைந்தே வர்த்தகமாகும். மேலும் 27,600 ரூபாயிலிருந்து 28,600 ரூபாய்க்குள் வர்த்தகமாக வாய்ப்புள்ளது’’.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

வெள்ளி!

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

வெள்ளியின் விலை இறக்கத்து டனேயே வர்த்தகமாகி வந்தது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி யும் இதற்குக் காரணமாக அமைந்தது. மேலும், உலோகங்களின் வர்த்தகத்தில் காணப்பட்ட மந்தநிலையும் வெள்ளி யின் விலை குறைய காரணமாக அமைந்தது. கடந்த வாரத்தில் மட்டும் 0.6% குறைந்து வர்த்தகமான வெள்ளியின் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 19.4 டாலர் என்ற அளவில் இருந்தது. வரும் வாரங்களிலும் வெள்ளி யின் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

காப்பர்!

சென்ற வாரத்தில் காப்பரின் விலை சற்று ஏற்றத்துடன் காணப்பட்டது. உலகின் மிகப் பெரிய காப்பர் பயன்பாட்டாளர்களான சீனாவின் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், அமெரிக்காவில் காப்பருக்கான தேவை அதிகரித்திருப்பதும் காப்பர் விலையில் சற்று ஏற்றத்தைத் தந்துள்ளது.

 அடுத்த வாரத்தில் காப்பரின் விலை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் பொருளாதார மந்தநிலை இறக்கத்துக்குக் காரணமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய கமாடிட்டி சந்தையில் சர்வதேச சந்தைகளின் தாக்கத்தால் விலை 0.1% குறைந்து வர்த்தகமாகிறது. இதனால் சர்வதேச காப்பர் விலையைப் பொறுத்தும், ரூபாயின் மதிப்பைப் பொறுத்தும் இந்திய சந்தைகளில் காப்பரின் விலை இருக்கும்.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தே வர்த்தகமானது. அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி அதிகரித்ததும், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் நிலவிவந்த பதற்றமான சூழல் தற்போது சற்று தணிந்து அமைதி நிலைக்கு மாறியுள்ள தாலும் கச்சா எண்ணெய்யின் விலையில் இறக்கம் காணப்படுகிறது.

அடுத்த வாரத்தில் லிபியாவிலிருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரிப்பதால், விலை குறைந்தே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்க லாகவும் கச்சா எண்ணெய் அதன் வலிமையான சப்போர்ட் விலையான 103 டாலருக்கு கீழே சென்றுள்ளது. மிக விரைவில் 92 டாலர் வரை குறைய வாய்ப்புள்ளது.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

இந்திய சந்தையைப் பொறுத்தவரை யில், கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தே காணப்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும் 0.8% விலை அதிகரித்து வர்த்தகமாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சரிவும் இதற்குக் காரணமாகக் கூறப் படுகிறது. இந்திய சந்தைகளிலும் சர்வதேச தாக்கம் அடுத்த வாரத்தில் காணப்படும் என்று கூறப்படுகிறது.

கமாடிட்டி : மெட்டல் - ஆயில்

இயற்கை எரிவாயு!

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்கச் சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 2% அளவுக்கு உயர்ந்துள்ளது.

அதிகரித்துவரும் வெப்பநிலையால் குளிரூட்டிகள் மற்றும் குளிர்சாதன இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால் இந்த விலையேற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் 1.33% இயற்கை எரிவாயுவின் விலை கூடியுள்ளது. இதனால் அடுத்த வாரங்களிலும் விலை அதிகரித்தே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044 -66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள். அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!