நடப்பு
Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

சோயாபீன் (Soybean)

சர்வதேச சந்தைகளில் தேவை குறைவு, உற்பத்தி அதிகரிப்பு மற்றும் சோயாமீல் ஏற்றுமதி குறைவு போன்ற காரணங்களால் சென்ற வாரம் சோயாபீன் விலை குறைந்து வர்த்தகமானது. கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி நிலவரப்படி, சோயாபீன் 107.77 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 121.04 லட்சம் ஹெக்டேர்களாக இருந்தது. ஏப்ரல்-ஜூலை, 2014-ல் ஆயில் மீல்களின் மொத்த ஏற்றுமதி 31% குறைந்து 7,21,577 டன்கள் ஆகும். இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஆயில்மீல் களின் ஏற்றுமதி 10,38,819 டன்களாக இருந்தது. 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயில்மீல்களின் அளவும் அதற்கு முந்தய ஆண்டின் இதே காலகட்டத்திலிருந்து 37% குறைந்துள்ளது.

லோக்கல் சந்தைகளில் சோயாபீன் களின் விலை அதிகமாக உள்ளதால் கடந்த மூன்று மாதங்களாக சோயாபீன் ஏற்றுமதியும் குறைந்து காணப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

 வேளாண்மை அமைச்சகத்தின் மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2013-14-ம் ஆண்டுக்கான உற்பத்தி 119 லட்சம் டன்கள். இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 146.70 லட்சம் டன்களாக இருந்தது.

இனிவரும் வாரத்திலும் சோயாபீன் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் தேவை குறைவின் காரணமாக விலை குறைந்து வர்த்தகமாகும்.

  மஞ்சள் (Turmeric)

தேவை குறைவு, அதிகக் கையிருப்பு,  தெலுங்கானாவில்  மஞ்சள் உற்பத்தி அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த வாரம் மஞ்சள் விலை குறைந்தது. 

ஆகஸ்ட், 13-ம் தேதி நிலவரப்படி, தெலுங்கானாவில் மட்டும் 42,916 ஹெக்டேர்கள் மஞ்சள் பயிரிடப்பட்டு உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 36,933 ஹெக்டேர்களாக இருந்தது.

அக்ரி கமாடிட்டி!

வட இந்திய மாநிலங்களில் மஞ்சள் தேவை அதிகரித்திருப்பது வரும் வாரங்களில் மஞ்சள் விலை உயர்வுக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமல்லாமல், ஏற்றுமதி தேவைகள் அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் மஞ்சள் விலை உயர்வில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.

ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மஞ்சள் பயிர் வளர்ச்சிக்கு தகுந்த பருவநிலையின்மை, தொடர் மழைப்பொழிவு போன்ற காரணங்களால் மஞ்சள் விலையானது தொடர்ந்து குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. 

அக்ரி கமாடிட்டி!

 ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் சந்தைக்கு ஏலக்காய் வரத்து குறைவாகக் காணப்பட்டது. இதன்காரண மாகவும், அதிக மழைப்பொழிவு காரணமாகவும் விலை அதிகரித்து வர்த்தகமானது. அது மட்டுமல்லாமல், வர்த்தகர்கள் மத்தியில் முன்னதாகப் பெய்த பருவமழை காரணமாக அடுத்த பருவத்தில் தரமற்ற ஏலக்காய் வரத்துக் காணப்படும் என்கிற எதிர்பார்ப்பும் ஏலக்காய் விலை அதிகரித்ததற்குக் காரணமாக இருந்தது.

சந்தை நிலவரப்படி, கேரள மாநிலத்தின் குமுளி மற்றும் வண்டமேடு ஏரியாக்களில் மட்டும் நடப்புப் பருவத்தின் மகசூல் 20-30%  குறைந்துள்ளது.

அக்ரி கமாடிட்டி!

இந்திய ஸ்பைசஸ் போர்டு தகவலின்படி, 2013-14ம் ஆண்டின் ஏலக்காய் உற்பத்தி 18,100 டன்கள். இதில் சிறிய வகையைச் சேர்ந்த ஏலக்காய் அளவு 14,000 டன்கள், மீதி 4,100 டன்கள் பெரிய ஏலக்காய் வகையைச் சார்ந்தது.

அக்ரி கமாடிட்டி!

 ஜீரகம் (Jeera)

தேவை குறைவின் காரணமாக கடந்த வாரத்தில் ஜீரகத்தின் விலை குறைந்தே வர்த்தகமானது. இருப்பினும், வரும் வாரங்களில் ஜீரகத்தின் தேவை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பினாலும், சர்வதேச சந்தைகளில் வரத்துப் பற்றாக்குறை ஏற்படும் என்கிற எதிர்பார்ப்பினாலும் மேலும் விலை குறையாமல் தடுக்கப்பட்டது.

அக்ரி கமாடிட்டி!

கடந்த ஏப்ரல்-மார்ச் 2014-நிலவரப்படி, இந்தியாவின் ஜீரகத்தின் மொத்த ஏற்றுமதி 42 சதவிகிதமாக அதிகரித்து, 1,21,500 டன்களாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 85,602 டன்களாக இருந்தது.  நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் ஏற்றுமதியாகி இருக்கும் ஜீரகத்தின் அளவு 1000 டன்கள்.

ரூபாய் மதிப்பீட்டில் ஜீரகத்தின் ஏற்றுமதியை பார்க்கும்போது, 39 சதவிகித மாக அதிகரித்துள்ளது.