Published:Updated:

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்!

“கச்சா எண்ணெய் கமாடிட்டி வர்த்தகத்தில் விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க பொருளாதார தகவல்கள் பாசிட்டிவாக இருப்பதும், டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதும் கச்சா எண்ணெய்யின் விலையிறக்கத்துக்கு காரணமாகியுள்ளது. அமெரிக்காவில் கச்சா எண்ணெய்யின் இருப்பு 9 லட்சம் பேரல்களுக்குமேல் குறைந்துள்ளது. அதேசமயம் எண்ணெய் வரத்து 6 லட்சம் பேரல்களாக உள்ளதாலும், எண்ணெய் தட்டுப்பாடு இல்லாததாலும் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வர்த்தகமாகிறது.

ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதும் கச்சா எண்ணெய்யின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் வாரத்தில் டாலரின் மதிப்பு உயர்ந்தே வர்த்தக மாகும் என்பதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தே வர்த்தகமாகும்.

இந்திய கமாடிட்டி சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரத்தில் 0.4 சதவிகிதம் குறைந்து வர்த்தகமாகியுள்ளது. வரும் வாரத்திலும் சர்வதேச விலைப்போக்கைப் பொறுத்து, இந்திய சந்தையிலும் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்து வர்த்தகமாகும்’’.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கமாடிட்டி மெட்டல் & ஆயில்

தங்கம்!

தங்கம் விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதாலும், ஐரோப்பிய மத்திய வங்கியில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதும் விலை குறைந்து வர்த்தகமாகக் காரணமாகியுள்ளது.

வார இறுதியில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிந்தா லும், உலோகச் சந்தையில் மந்தநிலை தொடர்ந்து காணப்படுவதால் இந்த விலையிறக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கோல்டு இடிஎஃப் ஆன எஸ்பிடிஆர் கையிருப்பும் குறைந்துள்ளது. மேலும், சீனா மற்றும் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை குறைந்துள்ளதும் இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படு கின்றது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் கடந்த இரண்டரை  மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்து, 1,260 டாலராக உள்ளது. இந்திய கமாடிட்டி சந்தையில் 0.4 சதவிகிதம் விலை குறைந்து 10 கிராம் தங்கத்தின் விலை 27,461 ரூபாயாக உள்ளது. சர்வதேச சந்தைகளின் தாக்கத்தால் தங்கத்தின் விலை அடுத்த வாரத்திலும் குறைந்தே வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

வெள்ளி!

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

சர்வதேச சந்தைகளில் உலோகங் களின் விலை குறைந்து வர்த்தகமாகி வருவதால் வெள்ளியின் விலை இறக்கத்துடனேயே வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வர்த்தகமாவது வெள்ளியின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை குறைந்து ஒரு அவுன்ஸ் 19 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய கமாடிட்டி சந்தை யில் வெள்ளின் விலை 0.7 சதவிகிதம் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தைகளைப் பொறுத்து வெள்ளியின் விலை குறைந்தே வர்த்தகமாகும் என்று கூறப்படுகிறது.

காப்பர்!

அடிப்படை உலோகங்கள் சந்தையில் காப்பர் விலை ஏற்றத்தில் காணப்பட்டது. அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு ஆட்கள் எடுப்பதை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் வேலைவாய்ப்புத் தகவல்கள் சாதகமாக இருப்பதும், காப்பருக்கான தேவை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளதும் காப்பரின் விலை ஏற்றத்துக்குக் காரணமாகியுள்ளது. சர்வதேச சந்தையில் 0.6 சதவிகிதம் விலை அதிகரித்து காப்பர் வர்த்தகமாகியுள்ளது.
 

அமெரிக்காவில் டாலரின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையிலும், தேவை அதிகமாக இருப்பதாலும் வரும் வாரங் களில் காப்பரின் விலை அதிகரித்துக் காணப்படும் என்று கூறப்படுகிறது.

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

இந்திய கமாடிட்டி சந்தையில் காப்பரின் விலை சர்வதேச விலையைவிட சற்று அதிகரித்தே வர்த்தகமாகி வருகிறது.

அடுத்த வாரத்திலும் டாலரின் மதிப்பு உயர்ந்தே வர்த்தகமாகும் என்பதால் இந்திய சந்தையிலும் அதன் தாக்கம் காரணமாக காப்பரின் விலை அதிகரித்தே வர்த்தகமாகலாம் எனக் கூறப்படுகிறது.

கமாடிட்டியில் சந்தேகமா?

கமாடிட்டி குறித்த உங்களின் அத்தனை சந்தேகங்களையும் 044 66802920 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யுங்கள். உங்கள் அழைப்பின்போது எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்கமாட்டார்கள்.

அந்த இரண்டு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!