Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி!

ஏலக்காய் (Cardamom)

வரத்துக் குறைவு, விழாக்காலத் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் சென்ற வாரத்தில் செப்டம்பர் மாதத்துக்குப்பின் உள்ள ஏலக்காய் கான்ட்ராக்ட்டுகள் விலை அதிகரித்து வர்த்தகமானது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏலக்காய் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதால், விலை மேலும் அதிகரித்து வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சந்தை நிலவரப்படி, முன்னதாகப் பெய்திருக்கும் பருவ மழையால் ஏலக்காய் பயிர்கள் சேதம் அடைந்திருக்கின்றன. இதனால் வரும் பருவத்தில் தரம் குறைந்த ஏலக்காய்கள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2014-ம் ஆண்டு நிலவரப்படி, கவுதமாலாவில் ஏலக்காய் உற்பத்தி குறைந்து காணப்படுகிறது. கடந்த வார வியாழக்கிழமை நிலவரப்படி, சந்தைக்கு வந்த ஏலக்காய் மொத்த வரத்து 56 டன்கள். ஒரு கிலோ ஏலக்காயின் சராசரி விலை 781 ரூபாய். அதிகபட்ச விலை 1,061 ரூபாய்க்கு வர்த்தகமானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அக்ரி கமாடிட்டி!

மஞ்சள் (Turmeric)

தரமற்ற மஞ்சள் வரத்து மற்றும் தேவை குறைவின் தொடர்ச்சி காரணமாக கடந்த வாரத்தில் மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமானது. இதற்கு இன்னொரு காரணம், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகரித்ததே. ஆனால், வரும் வாரங்களில் ஏற்றுமதி தேவை அதிகரிப்பு மற்றும் வட இந்தியாவில் மஞ்சள் தேவை எதிர்பார்ப்பு போன்ற காரணங்கள் மஞ்சள் விலையை அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
தெலுங்கானா மாநிலத்தில் ஆகஸ்ட் 2014 நிலவரப்படி, மஞ்சள் பயிர் விளைச்சல் 43,808 ஹெக்டேர்களாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 41,723 ஹெக்டேர்களாக இருந்தது. வேளாண்மை அமைச்சகத்தின் மூன்றாவது உற்பத்தி கணக்கீட்டின்படி, 2013-14ம் ஆண்டின் மஞ்சள் உற்பத்தி 1.23 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 1.03 மில்லியன் டன்களாக இருந்தது. வரும் வாரத்தில் விலை குறைந்தே காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

கடுகு (RMSeed)

சென்ற வாரத்தில் வர்த்தகர்கள் கடுகை வாங்க ஆர்வம் காட்டாததால், விலை குறைந்து வர்த்தகமானது. கடுகு மீல் ஏற்றுமதி தேவை அதிகரிப்பு வரும் வாரத்தில் கடுகு விலை ஏற்றத்துக்கு சாதகமாக இருக்கும். கடந்த வாரத்தில் சந்தைக்கு வந்த வரத்து சுமார் 55,000 பைகள் (ஒரு பை என்பது 85 கிலோ) ஆகும். ரேப்சீடு மீல் ஏற்றுமதியானது கடந்த நான்கு மாதங்களில் 53 சதவிகிதமாக அதிகரித்து, 4.08 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த ஏற்றுமதி அளவு 2.67 லட்சம் டன்கள். ரேப்சீடு ஏற்றுமதியாளர்களில் மிக முக்கிய நாடான கனடாவில் முந்தைய ஆண்டைவிட 20% குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி தேவை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் கால தேவையினால் விலையில் மாற்றம் ஏற்படலாம்.

ஜீரகம் (Jeera)

தேவைக்குறைவு காரணமாக கடந்த வாரம் ஜீரகம் விலை குறைந்து வர்த்தகமானது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக ஜீரக வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படைந்து உள்ளன. கடந்த வியாழக்கிழமை அன்று உஞ்ஹா சந்தைக்கு வரத்து 6,000 பைகளாக (ஒரு பை என்பது 55 கிலோ) இருந்தது.

ஏப்ரல்- டிசம்பர் 2013 நிலவரப்படி, ஜீரகம் ஏற்றுமதி அளவு 89% அதிகரித்து, 96,500 டன்களாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத் தில் 50,944 டன்களாக இருந்தது.

2013-14-ம் ஆண்டின் ஜீரக உற்பத்தியானது 45-50 லட்சம் பைகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கம்போல, துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்டு வரும் பதற்ற சூழ்நிலை காரணமாக இந்திய ஜீரகத்துக்கு ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. அதிகமாக விலை இறங்கினால் வர்த்தகர்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரி கமாடிட்டி!

சோயாபீன் (Soybean)

கடந்த வாரத்தில் சோயாபீன் விலை குறைந்து வர்த்தகமானது. அதிக உற்பத்தி, சோயாமீல் ஏற்றுமதி குறைவு மற்றும் சோயாபீன் வளரும் பகுதிகளில் அதிக மழை பொழிவு போன்ற காரணங்களே விலை குறைவுக்கு காரணமாகும்.

வேளாண்மை அமைச்சக  அறிக்கை யில் ஆகஸ்ட் 29ம் தேதி நிலவரப்படி, 966 லட்சம் ஹெக்டேர் காரீஃப் பருவ பருப்பு வகைகள் பயிரிடப்பட்டுள்ளது.  இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தைவிட குறைவு. சோயாபீன் பயிரிடப்பட்டுள்ள அளவு 11.03 மில்லியன் ஹெக்டேர். இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தில் 12.18 மில்லியன் ஹெக்டேர். ஏப்ரல்-ஜூலை, 2014 நிலவரப்படி, மொத்த ஆயில்மீல் ஏற்றுமதி அளவு 31% குறைந்து, 7,21,577 டன்களாக உள்ளன. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 10,38,819 டன்களாக இருந்தது.

வரும் வாரத்தில் விலை குறைய வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம் அதிக விலையிறக்கம் வந்தால்  வர்த்தகர்கள் ஷார்ட் கவரிங் செய்யலாம்.