Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திசையற்ற நிலைமை தற்போதைக்கு வந்துவிடலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

டேட்டாக்களின் பாதிப்பே சந்தையின் போக்கை நிர்ணயிப்பதாய் அமையும் என்றும்; நல்லதொரு வீக்னெஸ் இடையிடையே தென்பட்டாலுமே ஷார்ட் சைடு வியாபாரத்தை முழுமையாகத் தவிருங்கள் என்றும்; திடீர் ஏற்றங்கள் வந்துவிடுவதற்கான வாய்ப்பு இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது என்றும் சொல்லியிருந்தோம்.

வாரத்தின் முதல் மூன்று நாட்கள் ஏற்றத்தில் முடிவடைந்த சந்தை கடைசி இரண்டு நாட்கள் இறக்கத்தை சந்தித்து, வார இறுதியில் வாராந்திர அளவில் 132 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் இந்திய டேட்டாக் களில் முக்கிய டேட்டாக்களாக திங்களன்று பேலன்ஸ் ஆஃப் டிரேட் டேட்டாவும், வெள்ளியன்று ஃபாரெக்ஸ் ரிசர்வ், இன்ஃப்ளேஷன், இண்டஸ்ட்ரீயல் புரொடக்‌ஷன், மேனுபேக்சரிங் புரொடக்‌ஷன் டேட்டாக்கள் வெளிவர இருக்கிறது. அமெரிக்க டேட்டாக்களில் வெள்ளியன்று வெளிவர உள்ள ரீட்டெயில் சேல்ஸ் டேட்டா முக்கிய டேட்டாவாகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வரும் வாரத்தில் ஏற்றத்துக்கான ட்ரிக்கர் (செய்திகள் மற்றும் அனுமானங்கள்) எதுவும் கிடைத்தால் மட்டுமே மேலே சொன்ன டார்கெட்கள் சாத்தியம் எனலாம். இல்லையென்றால் பெரும்பாலும் ஒரு திசை தெரியாத நிலையே தொடர வாய்ப்புள்ளது.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:  திசையற்ற நிலைமை தற்போதைக்கு வந்துவிடலாம்!

புல்லிஷ் நிலையிலேயே நிஃப்டி டெக்னிக்கலாக இருக்கிற போதிலும் அடுத்த லெவலுக்குச் செல்ல ஒரு முக்கிய நிகழ்வு தேவைப்படுகிறது. அது வரும்வரை இதே லெவலில் மேலும் கீழுமாய் இருக்கும் என்பதால் ஸ்டாக் ஸ்பெஷிபிக் வியாபாரம் செய்துவருவதே சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.

ஷார்ட் சைடு வியாபாரத்தினையும் பெரிய அளவிலான ஓவர்நைட் பொசிஷன்களையும் தவிர்ப்பதே மிகமிக நல்லது. கவனம் தேவை.

05/09/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: டென்(165.10), உஷா மார்ட் (40.25), டாபர் (226), நிதின் ஸ்பின்னர் (27.20), டிஎஃப்சிஐ லிட் (42.85) கோட்டக் பேங்க்(1078.45), சம்பல் ஃபெர்டிலைசர் (56.70), ஹிந்த் சிங்க்(171.65), மிர்சா இண்ட் (37.60), ஆன்மொபைல் (30.35), சிசிஎல் (97.55), பிஎஃப்எஸ் (43.65) குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: அன்சல்பிஐ(32.10), ஹெச்டிஎஃப்சி (1055.05), இன்ஃப்ரா டெல் (280.30), கெர்ய்ன்(331.80), எஸ்கே எஸ்மைக்ரோ (324.35), பார்தி ஏர்டெல் (401.10), எல்ஐசி ஹவுஸிங் ஃபைன் (319.70), புஞ்ச் லாயிட்(36.85), பஜாஜ் ஹிந்த் (21.10), டெல்டா கார்ப்(87.25), ஹெச்டிஎஃப்சி பேங்க் (848.45), ஹிந்த் ஆயில்எக்ஸ் (54.10), ஜீனஸ் பவர்(35.55) நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:  திசையற்ற நிலைமை தற்போதைக்கு வந்துவிடலாம்!

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங் கிற்கு வாட்ச் செய்ய உகந்தது): ஓரியன்ட் ரிப்ராக்டரிஸ்(96.65), என்எம்டிசி (185.80), ஷரான் பயோ(80.10), இப்காலேப் (789.30), ரெயின் (48.30), ஹெச்எஸ்ஐஎல் (355.20), டிஎஃப்சிஐ லிட்(42.85), சன்ப்ளாக் (30.95), பிரதிபா (58.10), ஏசியன் பெயின்ட் (647.05), எஜுகாம்ப் (33.65), கேமன் இன்ஃப்ரா (14.80).

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்கிற்கு வாட்ச் செய்ய உகந்தது): ஜிஎம்ஆர் இன்ஃப்ரா(24.55), ஐஎஃப்சிஐ(32.70),  யூகோ பேங்க்(84.95), மெக்டொவெல் (2283.15), நிதேஷ் எஸ்டேட் (12.55).

சற்று பாசிட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள்: ஓரியன்ட் ரிப்ராக்டரிஸ்(96.65), நிதின் ஸ்பின் (27.20), வக்ரன் ஜி(127.70), ரெயின் (48.30), பிரதிபா(58.10), பல்லார்பூர் (18.80) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்திற்கு தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள்: டென்(165.10), ஜீ மீடியா(18.05), சென்ட்ரல் பேங்க் (62.20), சுஸ்லான்(21.40), ஹிந்தால்கோ(167.70) (ரிவர்சலுக்கு வாட்ச் செய்யலாம்): இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: ஓரியன்ட் ரிப்ராக்டரிஸ் (96.65), நௌக்ரி (802.35), டென்(165.10), ஹெச்டீ மீடியா (107.95), உஷா மார்ட் (40.25), அமரராஜா பேட் (576.60), ஹெச்டிஎஃப்சி (1055.05), லஷ்மி விலாஸ் (75), இன்ஃப்ரா டெல்(280.30), டாடா மோட்டார்ஸ் (506), ஜிஎஸ்எஃப்சி (69.10), என்எம்டிசி (185.80), மாதர்சன் சுமி(387.30), ஹைடல் பெர்க்(81), ஷரான் பயோ(80.10), என்டிபிசி(142.85) தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): ஐடிசி (350.80), டாபர் (226), இசட்இஇஎல் (281.05), பவர் கிரிட் (134.45), சன் பார்மா(857.85), கெர்ய்ன் (331.80), ஃபெடரல் பேங்க்(124.70), டிவி18 பராட்காஸ்ட்(28.70), கோல் இந்தியா (370.30), எஸ்கேஎஸ் மைக்ரோ (324.35), பார்தி ஏர்டெல்(401.10), எல்ஐசி ஹவிஸிங் (319.70), ஐசிஐசிஐ பேங்க் (1547.05), எஸ்எஸ்எல்டீ(281.50), சுஸ்லான் (21.40) இவற்றை வியாபாரத்திற்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: ஓரியன்ட் ரிபைனரிஸ் (96.65), என்டிஎம்சி(185.80), நிதின் ஸ்பின்னர் (27.20), ஷரான்பயோ (80.10), ரெயின்(48.30), டிஎஃப்சிஐ லிட் (42.85), சன் ப்ளாக்(30.95), ப்ரதிபா(58.10), எவரெடி(112.25), எஜுகாம்ப்(33.65) மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.