இந்த வாரம் நாம் ஸ்கேனிங்குக்கு எடுத்துக்கொண்டுள்ள கம்பெனி சென்னையைத் தலைமை யகமாகக் கொண்டு இயங்கும் சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட்.

1954-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று இந்தியாவின் நம்பகத்தன்மை உள்ள ஒரு வங்கிசாரா நிதி நிறுவனமாகத் திகழ்கின்றது. வைப்பு நிதிகள், மியூச்சுவல் ஃபண்ட், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கான கடன் வழங்குதல், இன்ஷூரன்ஸ், வீட்டுக் கடன் வழங்குதல், சாஃப்ட்வேர் கள் வழங்குதல், பிசினஸ் பிராசஸ் அவுட்சோர்ஸிங், வாகன டயர்கள் வாங்க கடன் வழங்குதல், ஃப்ளீட் கார்டு கள், டிராக்டர்களுக்கான கடன் வழங்கு தல், மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான ரிஜிஸ்ட்ரார் மற்றும் டிரான்ஸ்ஃபர் ஏஜென்ட் சேவை வழங்குதல் என இந்த நிறுவனம் பல்வேறு நிதி மற்றும் நிதி சாரா தொழில்களில் கால் பதித்துள்ளது.

கார், கனரக வாகனங்கள் மற்றும் ஏனைய சொத்துகளுக்காக கடன்களை சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட் மூலமும், வீட்டு வசதிக் கடனை சுந்தரம் பிஎன்பி பரிபா ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (51 சதவிகித முதலீடு) மூலமும், அசெட் மேனேஜ்மென்ட் பிசினஸை (100 சதவிகித முதலீடு) சுந்தரம் அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி மூலமாகவும், ஜெனரல் இன்ஷூரன்ஸ் பிசினஸை ராயல் சுந்தரம் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட் மூலமாகவும் (49.9% முதலீடு) செய்து வருகிறது.

அகில இந்திய ரீதியாக ஏறக்குறைய 587 கிளைகளைக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தான் தொழில் செய்யும் பிரிவுகளில் கணிசமானதொரு சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், வாராக் கடனின் அளவில் மிகக் குறைவான சதவிகிதத்தையும் நல்லதொரு கிரெடிட் ரேட்டிங் குறியீட்டையும் பெற்று விளங்குவது சிறப்பான விஷயமாகும்.

தொழில் எப்படி?

இந்த நிறுவனத்தின் தொழில் பெருமளவு ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்ததாகவே இருக்கிறது. தற்போதையச் சூழலில் ஆட்டோ மொபைல் துறை நலிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதைப் போன்ற சூழல் கண்ணில் தெரிகிறது. கடந்த 29 மாதங்களாக (ஆண்டிலிருந்து ஆண்டு வரை) இறங்குமுகத்தில் இருந்த மத்திய மற்றும் கனரக வாகன விற்பனை வளர்ச்சி விகிதம், ஆகஸ்ட் மாதத்தில் முதல் முறையாக ஏறுமுகத்துக்கு மாறியுள்ளது. ஜிடிபி வளர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

ரிசர்வ் வங்கி கணக்கிடும் கன்ஸ்யூமர் கான்ஃபிடன்ஸ், சிமென்ட் உற்பத்தி போன்ற லீடு இண்டிகேட்டர்கள் நல்ல காலம் வரும் என்று கட்டியம் கூறுவதைப் போலவே இருக்கிறது. பொருட்களை லாரியில் கொண்டு செல்வதற்கான கட்டணம் கடந்த சில மாதங்களில் 4-5% அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் கமர்ஷியல் வாகனங்களின் உற்பத்தி அளவு நிர்மாணிக்கப்பட்ட அளவில் 60-65 சதவிகித அளவே இருந்தது. ஆனால், தற்போது கமர்ஷியல் வாகன டீலர்கள் இந்தநிலை மாறும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக இருந்த மந்தநிலையின் காரணமாக வாகனங் களுக்குக் கடன் தருபவர்கள் அதீத கவனத்துடன் கடன் தந்துவந்தனர். தொடர்ந்து கடன் வாங்கியவர்களைக் கண்காணித்துத் தக்கசமயத்தில் நடவடிக்கைகள் எடுத்துவந்ததால் பொதுவாகவே வாகனக் கடன் போர்ட்ஃபோலியோவில் தற்போதைய சூழலில் வாராக்கடனின் அளவு கணிசமாகக் குறைவாகவே இருக்கிறது. பண்டிகைக் காலம் வருவதால், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் தேவை அதிகரிக்கும் எனலாம். அதனாலேயே கடன் வழங்கும் அளவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஏன் முதலீடு செய்யலாம்?

மிகச் சிறந்தொரு பிராண்ட் மதிப்பைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் வியாபார அளவு வளர்ச்சியில் 19 சத விகிதத்தையும் (சிஏஜிஆர்), நிகர லாப வளர்ச்சியில் 23 சதவிகிதத்தையும் (சிஏஜிஆர்) எட்டி செயல்பட்டு வருகிறது.

புது வாகனங்களுக்கான கடன் தருதல் அதிகபட்சமாகத் தொடர்ந்து வளர்ந்துவருவது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். மொத்தமாக வழங்கப்படும் கடன் தொகையில் கமர்ஷியல் வாகனங் களுக்கான கடன் அளவு 48 சதவிகிதமும், பயணிகள் போக்குவரத்துக்கான வாகனங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையின் அளவு ஏறக்குறைய 36 சத விகிதமாகவும் இருந்துவருகிறது.

அறுபது வருடங்களுக்கு மேலான தொழில் அனுபவத்தைக் கொண்டிருக் கும் இந்த நிறுவனம், நல்லதொரு ஸ்திரமான வளர்ச்சியை எதிர்வரும் காலத்தில் பெறும் என்று எதிர்பார்க்க லாம். மேலும், சுந்தரம் ஃபைனான்ஸ் முதலீடு செய்திருக்கும் தொழில்களான அசெட் மேனேஜ்மென்ட் மற்றும் ஹோம் ஃபைனான்ஸ் துறைகளும் பொருளாதார வளர்ச்சி மேல்நோக்கிச் செல்லும்பட்சத்தில் நல்ல லாபத்தை ஈட்டித் தரக்கூடியவை.

ரிஸ்க்குகள் ஏதும் உண்டா?

பொதுவாகவே, நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் பொருளாதார வளர்ச்சியை ஒட்டியே அமைவதாக இருக்கும். பொருளாதாரச் சுணக்க நிலையிலிருந்து மீண்டு வந்துவிடும் வாய்ப்பிருப்பது போன்று தோன்றினாலும், ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டு எதிர்பார்த்ததைப்போல் வளர்ச்சி நிலை வராமல் மந்தநிலை இன்னமும் தொடர்ந்தால் சுந்தரம் ஃபைனான்ஸின் செயல்பாடுகள் எதிர்பார்த்த அளவு லாபத்தைத் தர வாய்ப்பு இல்லாது போகலாம்.
அதிலும் சுந்தரம் ஃபைனான்ஸின் பெரும் பங்கு வருமானம் வண்டி வாகனத் துறையின் வளர்ச்சியைச் சார்ந்து உள்ளது. இந்தத் துறையும் பொருளாதார வளர்ச்சியை ஒட்டியே வளர்ச்சியையோ, வீழ்ச்சியையோ சந்திக்கும். எனவே, பொருளாதாரத்தின் போக்கே பெரிய அளவில் லாப அளவீடுகளைப் பாதிக்கும் எனலாம்.

பொருளாதார ரீதியான ரிஸ்க்குகள் பெரியதாக இருந்த போதிலும் அறுபது ஆண்டு காலச் சிறப்பான அனுபவத்தைக் கொண்ட சுந்தரம் ஃபைனான்ஸ் இதுபோன்ற சவால்களைச் சுலபத்தில் முறியடிக்கும் அனுபவமும் முயற்சியும் கொண்டது எனலாம். எனவே, முதலீட்டாளர்கள் ஓர் அசாதாரண வீழ்ச்சியைச் சந்தை சந்திக்கும்போது சுந்தரம் ஃபைனான்ஸின் பங்குகளை நீண்ட கால முதலீட்டுக்காக வாங்கிப்போடலாம்.

- நாணயம் ஸ்கேனர்.
(குறிப்பு: இந்தப் பகுதி இன்றைய விலையிலேயே வாங்க வேண்டிய பங்கு பரிந்துரை பகுதி அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ள பங்குகளை வாங்குவது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகும்)