தங்கம்!

‘‘கடந்த இரண்டு வாரங்களாகத் தங்கத்தின் விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. உலகப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளதாலும், டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதாலும் தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. அமெரிக்க ஃபெடரல் வங்கி, வட்டி விகிதத்தில் உடனடி மாற்றம் செய்யாததால் வர்த்தகத்தில் ஷார்ட் கவரிங் அதிகரித்து விலையிறக்கம் தடுக்கப்பட்டது.

டெக்னிக்கலாக ஆர்எஸ்ஐ அதிகமாக விற்கப்பட்டுள்ளதாக காட்டுவதால், விலையில் திருப்பம் ஏற்படலாம். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1217 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. 1200 டாலருக்கும் கீழ் செல்லும்போது இறக்கம் 1185 டாலர் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பங்குச் சந்தைகள் கடந்த வியாழனன்று வேகமான வளர்ச்சியைக் கண்டதாலும், ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதாலும் இந்திய கமாடிட்டி சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. மேலும், தங்கத்துக்கான தேவை தற்போது குறைந்த அளவிலேயே உள்ளது. 10 கிராம் தங்கம் விலை 26,525 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.

சீனாவுடனான ஒப்பந்தங்களால் பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளதும் தங்கத்தின் விலை குறையக் காரணமாகியுள்ளது. பண்டிகைக் காலம் நெருங்குவதால் தேவை அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’’

வெள்ளி!

சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை குறைந்து வருவதால், வெள்ளியின் விலையும் குறைந்தே வர்த்தகமாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை ஒரு அவுன்ஸ் 18.5 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகும் நிலையில், எம்சிஎக்ஸ் சந்தையில் 1 கிலோ வெள்ளி 40,000 ரூபாய் என்கிற அளவில் வர்த்தகமாகிறது.

சீனா மற்றும் ஐரோப்பாவில் தொழிற்துறையில் உள்ள சுணக்கத்தாலும் வெள்ளிக்கான தேவை குறைந்தே காணப்படுகிறது. இந்திய சந்தையில் வெள்ளியின் விலை 1.06 சதவிகிதம் குறைந்து வர்த்தகமாகியது.

தங்கத்தின் விலை இறக்கத்தைப் பொறுத்து, வெள்ளியின் விலையும் அடுத்த வாரத்தில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பர்!

அடிப்படை உலோகங்களின் விலை மற்றும் தேவை சர்வதேச சந்தைகளில் குறைந்தே காணப்பட்டது. காப்பரின் விலையும் சர்வதேச சந்தையில் 1.4 சதவிகிதம் குறைந்து வர்த்தகமானது.

உலகின் மிகப் பெரிய காப்பர் பயன்பாட்டாளர்களான சீனா மற்றும் அமெரிக்காவில் காப்பருக்கான தேவை குறைந்து வருவதும் விலை குறையக் காரணமாகியுள்ளது. வேலை வாய்ப்பின்மை விகிதம் எதிர்பார்த்ததை விட அதிகமாகக் குறைந்துள்ளதால் காப்பரின் விலை கணிசமாகக் குறைந்து வர்த்தகமானது.

வரும் வாரங்களில் இந்தியாவில் காப்பரின் விலை சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொறுத்தும், ரூபாயின் மதிப்பைப் பொறுத்தும் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்!

கச்சா எண்ணெயின் விலை குறைந்தே வர்த்தகமாகி வருகிறது. கடந்த வியாழனன்று அமெரிக்கப் பொருளாதாரம் குறித்த தகவல்கள் சற்று இறக்கத்தில் காணப்பட்டதால், பிரென்ட் கச்சா எண்ணெயின் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் விலைச் சரிவை சந்தித்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் அக்டோபர் கான்ட்ராக்ட் விரைவில் முடிவடையும் என்பதால் 1.4 சதவிகிதம் குறைந்து, ஒரு பேரல் 93 டாலர் என்ற அளவிலும், இந்திய சந்தையில் 1 சதவிகிதம் குறைந்து, ஒரு பேரல் 5,672 ரூபாய் என்ற அளவிலும் வர்த்தகமானது.

எதிர்பார்ப்புக்கு அதிகமாக கச்சா எண்ணெயின் இருப்பு 3.5 லட்சம் பேரல் அதிகரித்துள்ளது இந்த விலைகுறைவுக்கு காரணமாகியுள்ளன. ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதால், அடுத்த வாரங்களிலும் கச்சா எண்ணெயின் விலை இறக்கத்துடன் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.