மஞ்சள் (Turmeric)

தேவைக் குறைவின் காரணமாக சென்ற வாரம் மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமானது. ஷார்ட் கவரிங் காரணமாக அக்டோபர் மாத கான்ட்ராக்ட் விலை சற்று அதிகரித்துக் காணப்பட்டது. வழக்கமாக வட மாநிலங்களில் இருந்து நவராத்திரி பூஜை காலங்களில் மஞ்சளுக்கான ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். ஆனால் இந்தமுறை அது குறைவாக உள்ளது எனவும், இதனால் மஞ்சள் விற்பனை 45% குறைந்துள்ளது எனவும் ஈரோடு மஞ்சள் மண்டி வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த வார புதன் கிழமை சந்தைக்கு வந்த 2,200 பைகள் (ஒரு பை என்பது 75 கிலோ) 997 பைகள் மட்டுமே விற்பனையானது. அன்றைய தினத்தில் ஒரு குவிண்டால் விரலி மஞ்சள் 3,670 ரூபாயிலிருந்து 6,040 ரூபாய் வரை விலை போனது. இந்தியாவின் ஸ்பைசஸ் போர்டு தெரிவித்துள்ள விவரத்தின்படி 2013-ம் ஆண்டின் ஏப்ரல் -டிசம்பர் மாதங்களில் மஞ்சள் ஏற்றுமதி யானது 17% அதிகரித்து 58,000 மில்லியன் டன்களாகக் காணப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் 2013-14-ல் 10,000 ஹெக்டேர் களாக இருந்த மஞ்சள் பயிர் விதைப்பு, 2014-15-ம் ஆண்டில் 12,000 ஹெக்டேர் களாக இருக்கிறது. அதேபோல, தெலங்கானா மாநிலத்தில் 43,000 ஹெக்டேர்களாக இருந்த மஞ்சள் பயிர் விதைப்பானது, தற்போது 44,600 ஹெக்டேர்களாக இருக்கிறது என பதிவாகி உள்ளது.

ஜீரகம் (Jeera)

கடந்த வாரத்தில் ஜீரகத்தின் அக்டோபர் மாத கான்ட்ராக்ட் விலை குறைந்து வர்த்தகமானது. இதற்கு மிக முக்கியக் காரணம், தேவைக் குறைவு மற்றும் அதிக கையிருப்பு. ஜீரகத்தின் விளைச்சலுக்கு சாதகமான பருவநிலை காணப்படுவதாலும், அதிகமான ஏரியாக்களில் ஜீரகம் பயிர் விதைத்திருப் பதாலும் 2014-ம் ஆண்டுக்கான உற்பத்தியானது 6.5-7 மில்லியன் பைகளாக (ஒரு பை என்பது 55 கிலோ) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 4.5-5 மில்லியன் பைகளாக இருந்தது. குஜராத் மாநிலத்தில் 4.55 லட்சம் ஹெக்டேர்கள் பயிரிடப்பட்டுள்ளதாகவும், இது அதற்கு முந்தைய ஆண்டில் 3.35 லட்சம் ஹெக்டேர்களுக்குப் பயிரிடப் பட்டிருந்ததாகவும் பதிவாகியுள்ளது. வரத்து குறைந்து, சில்லறை வர்த்தகத்தில் புதிய தேவை உருவாகும்போது எதிர்காலத்தில் ஜீரகத்தின் விலை அதிகரிக்கும். கடந்த வார வியாழக்கிழமை யில் உஞ்ஹா சந்தைக்கு 6,000 பைகள் வரத்துக் காணப்பட்டது.

சென்னா (Chana)

உள்நாட்டில் விழாக்காலத் தேவை காணப்பட்டதால், கடந்த வாரத்தில் சென்னா விலை அதிகரித்து வர்த்தகமானது. விழாக்காலத் தேவை தொடரும் என்பதால் வரும் வாரங் களிலும் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 12-ம் தேதி நிலவரப்படி, காரீஃப் பருவ பருப்பு வகைகள் 999 லட்சம் ஹெக்டேர் களில் பயிரிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் மூன்றாவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி உணவு தானியங்கள் பயிர் விதைப்பு (2013-14) 264.38 மில்லியன் டன்களாக உள்ளன.

வேளாண்மை அமைச்சகத்தின் நான்காவது அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2013-14-ல் மொத்த உணவு தானியங்களின் உற்பத்தி 19.27 மில்லியன் டன்களாகும். இதற்கு முந்தைய ஆண்டில் இது 18.34 மில்லியன் டன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிக அளவு கையிருப்பு, அதிக விளைச்சல் போன்றவை விலை ஏற்றத்துக்குத் தடையாக இருந்தாலும், பண்டிகைக் காலத் தேவை மற்றும் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பது போன்ற காரணங்களால் சற்று விலை யேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

சோயாபீன் (Soybean)

கடந்த சில வாரங்களாகவே சோயாபீன் விலை குறைந்தே வர்த்தக மாகி வருகிறது. உலகச் சந்தைகளின் தேவை குறைவு, சோயா மீல் ஏற்றுமதி தேவை குறைவு போன்ற காரணங்களே இதற்கு மிக முக்கியக் காரணமாகும். செப்டம்பர் 18-ம் தேதி நிலவரப்படி, சோயாபீன் விளைச்சலானது 11.03 மில்லியன் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது எனவும், இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 12.22 மில்லியன் ஹெக்டேர்களாக இருந்தது எனவும் வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் பருவ நிலை சாதகமாக இல்லாதுதான்.

வேளாண்மை அமைச்சகத்தின் முதல் அட்வான்ஸ்டு கணக்கீட்டின்படி, 2014-15-ம் ஆண்டுக்கான சோயாபீன் உற்பத்தி 11.82 மில்லியன் டன்களாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் சோயாமீல் ஏற்றுமதியானது 98.49% குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. சோயாமீல் ஏற்றுமதி குறைவாகக் காணப்படுவதாலும், சோயாபீன் தேவை குறைவு காரண மாகவும் வரும் வாரங்களிலும் விலை குறைந்து வர்த்தகமாகலாம்.

கடுகு விதை (Mustard seed)

கடந்த வாரம் கடுகு ஆயில், விழாக்காலத் தேவை காரணமாக விலை அதிகரித்துக் காணப்பட்டது. வர்த்தகர் களும், ஏற்றுமதியாளர்களும் அதிக ஆர்வம் காட்டியதாலும் விலை அதிகரித்து வர்த்தகமானது. உலகளாவிய ரேப் சீடு மற்றும் சனோலாவின் உற்பத்தியானது 69.7 மில்லியன் டன்களில் இருந்து 68.7 டன்களாகக் குறைந்துள்ளது.

அதேபோல, ரேப் சீடு ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் ஒன்றான கனடாவில் ரேப்சீடு உற்பத்தியானது 14.4 மில்லியன் டன்களில் இருந்து 20% குறையும் என்று அந்நாட்டின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதனால் ஐரோப்பாவில் ரேப்சீடு உற்பத்தி 21.25 மில்லியன் டன்களில் இருந்து 23.54 மில்லியன் டன்களாக அதிகரித்து புதிய ரெக்கார்டு ஒன்றை உருவாக்கியுள்ளது. கடுகு ஆயிலுக்குத் தேவை அதிகரித்துக் காணப்படுவதாலும், வரத்து குறைவின் காரணமாகவும் வரும் வாரங்களிலும் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.