Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: மந்தநிலை தொடரலாம் !

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: மந்தநிலை தொடரலாம் !

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: மந்தநிலை தொடரலாம் !

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: மந்தநிலை தொடரலாம் !

Published:Updated:

மூன்றே வியாபார தினங்களும், பின்னர் தொடர்ந்து விடுமுறை நாட்களும் வருகிறது என்பதால் பெரிய அளவிலான வியாபாரத்துக்கு வாய்ப்புகள் இல்லாத வாரமாக இருக்கக்கூடும் என்றும், முதலில் விற்று பின்னால் வாங்கும் (ஷார்ட் சைடு) வியாபாரத்தினை அறவே தவிர்ப்பதே நல்லது என்றும் சொல்லியிருந்தோம்.

மூன்று வியாபார தினங்களில், இரண்டில் சிறிய அளவிலான இறக்கத்தில் முடிவடைந்து வாராந்திர அளவில் கடந்த  புதனன்று ஏறக்குறைய 23 புள்ளிகள் இறக்கத்தில் முடிவடைந்தது. எதிர்வரும் வாரத்திலும் நான்கு டிரேடிங் தினங்களே உள்ளன.

வரும் வாரத்தில் செவ்வாயன்று ஹெச்எஸ்பிசி இந்தியா சர்வீசஸ் பிஎம்ஐ டேட்டாவும், வெள்ளியன்று இண்டஸ்ட்ரியல் புரொடக்‌ஷன், மேனுஃபேக்சரிங் புரொடக்‌ஷன் (இரண்டுமே வருட அளவிலான ஒப்பீடு) மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு போன்ற டேட்டாக்களே, வெளிவர உள்ள முக்கிய இந்திய டேட்டாக்களாகும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமெரிக்க டேட்டாக்களில் வியாழனன்று வெளிவர உள்ள வேலையில்லாதவர்கள் டேட்டாவே  ஓரளவுக்கு சந்தையைப் பாதிக்கக்கூடிய முக்கிய டேட்டாவாகும். செய்திகள், சந்தையின் டெக்னிக்கல் லெவல்கள், எஃப்ஐஐகளின் முதலீடு முதலியவற்றை அளவீடாக வைத்துப் பார்த்தால் சந்தையில் ஏற்றத்துக்கான வாய்ப்பு தற்போதைக்கு சற்று குறைவாகவே உள்ளது எனலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:  மந்தநிலை தொடரலாம் !

எனினும், வெளிவர இருக்கும் காலாண்டு முடிவுகள் பாசிட்டிவ்வாகவும், வேறேனும் பாசிட்டிவ் செய்திகள் வரும்பட்சத்திலும் சந்தை மீண்டும் ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற பாசிட்டிவ் ட்ரிக்கர்கள் வராத வரை சந்தை பலவீனமாகவும், திசையற்று செல்லும் ட்ரெண்டையுமே காண்பிக்கும்.

எனவே, டிரேடர்கள் அடிப்படையில் நல்ல பங்கிகளில்் மட்டுமே, இறக்கத்தில் டெக்னிக்கல் ரிவர்ஸலை எதிர்பார்த்து, சிறிய எண்ணிக்கையில் கட்டாய ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்யலாம். செய்திகளின் மீது முழுக் கவனம் வைத்தே வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

01/10/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ஓரியன்ட் பேப்பர்(29.45), ஹெச்சிஎல் டெக்(1740.15), கேஎஸ்சிஎல் (834.85), டெக் மஹிந்திரா(2520.80), ஐசிஐசிஐ பேங்க்(1428.85), ஐடியா(166.90), பெட்ரோ நெட்(192.05), எக்ஸைடு இண்ட் (172.15), ஏசியன் பெயின்ட்(631.70), தேனா பேங்க்(58.45), புஞ்ச் லாயிட்(36.35) குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ஐஎஃப்சிஐ(35.60), டாடா பவர் (80.80), என்ஹெச்பிசி(19.10), ஹெச்டிஎஃப்சி பேங்க்(868.00), டென் (139.85), மெக்டொவெல்(2350.85), லைக்கா லேப்(18.95) நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:  மந்தநிலை தொடரலாம் !

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): விப்ரோ (615.75), எம்இஜிஹெச்(18.95), இன்ஃபி(3847.30), பெர்ஜர் பெயின்ட் (399.85), பாட்டா இந்தியா(1392.20), அஜ்மீரா(144.65), அரோ கிரானைட்(81.90), ரெலிகேர்(353.05), ஆர்பிட் எக்ஸ்போர்ட்(303).

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): ராம் டிரான்ஸ்போர்ட்ஃபின்(910.40), டென்(139.85), அம்புஜா சிமென்ட்(210.65), ஹிந்த் சிங்க்(159.85), ஓஎன்ஜிசி(402.85), ஆர்கிட் கெமிக்கல்(71.70), பிடிசி(81.10).

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: சுஸ்லான்(13.50), எம்இஜிஹெச்(18.95), பெட்ரோ நெட் (192.05), சன் டிவி(342.75), டெக் மஹிந்திரா (2520.80), பிபோகஸ்(48.95),  ரிலாக்ஸோ (515.70), ரெலிகேர் (353.05), ஆர்பிட் எக்ஸ்போர்ட்(303) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்குத் தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: இன்ஃப்ரா டெல்(280.60), டாடா மோட்டார்ஸ்(502.75), சென்னை பெட்ரோ(100.25), மாருதி(2970.95), கப்ரியேல்(80.45) (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்): இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: என்எம்டிசி(166.95), பார்தி ஏர்டெல் (403.20), இன்ஃப்ராடெல்(280.60), கெய்ர்ன்(303.75), சவுத் பேங்க்(25.50), ஹெச்சிஎல் டெக்(1740.15), இசட் இஇஎல் (313.50), சியுபி(85.85), எம் அண்ட் எம் ஃபைனான்ஸ்(275.30), கோட்டக் பேங்க் (1011.65), எம்இஜிஹெச்(18.95), பல்ராம் சினி(54.25), ஸ்டெர்லைட் டெக்(71.45), விப்ரோ(615.75), மங்களூர்கெமிக்கல் ஃபெர்டிலைசர் (101.50), ஐடிஎஃப்சி (136.25), ஆப்டோ சர்க்யூட்(20.50), புஞ்ச் லாயிட்(36.35), மேன்இண்ட்ஸ்(67.20), பஜாஜ் ஹிந்த்(18.35) தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்குக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:  மந்தநிலை தொடரலாம் !

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்&(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): ஐபிபவர்(12.55), கோல் இந்தியா(344.60), பவர் கிரிட் (135.95), ஹெச்டிஎஃப்சி(1050.35), அம்புஜா சிமென்ட்(210.65), என்டிபிசி (139.05), கேசெராசெரா(13), சிப்லா (624.30), ஹெச்டிஎஃப்சி பேங்க்(868.80), எஃப்சிஇஎல்(11.90), ஐசிஐசிஐ பேங்க் (1428.85), பிஎஃப்எஸ்(44.05), மணப்புரம் (28.20), ஐடியா (166.90), டாடா மோட்டார்ஸ் (502.75) இவற்றை வியாபாரத்துக்குத் தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: எம்இஜிஹெச்(18.95), பல்ராம் சினி(54.25), காமன் இன்ஃப்ரா (15.45), ஐவிஆர்சிஎல் இன்ஃப்ரா(16.35), பெர்ஜர் பெயின்ட்(399.85), பாட்டா இந்தியா(1392.20)

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

எச்சரிக்கை: இந்தப் பகுதியில் உபயோகப்படுத்தப்படும் பல இண்டிகேட்டர்கள் மற்றும் டூல்கள் ஐந்துநாள் டிரேடிங் வாரத்தை மனதில் கொண்டே கணக்கீடு செய்யப்படுபவை.  எனவே, மூன்றே டிரேடிங் தினங்களைக் கொண்ட கடந்த வாரத்திலிருந்து செய்யப்படும் கணிப்புகள் தவறாகப் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது என்பதை டிரேடர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism