Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: நல்லதொரு கரெக்‌ஷன் வரலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: நல்லதொரு கரெக்‌ஷன் வரலாம்!

பிரீமியம் ஸ்டோரி

செய்திகள், சந்தையின் டெக்னிக்கல் லெவல்கள், எஃப்ஐஐகளின் முதலீடு முதலியவற்றை அளவீடாக வைத்துப் பார்த்தால், சந்தையில் ஏற்றத்துக்கான வாய்ப்பு தற்போதைக்கு சற்று குறைவாகவே உள்ளது என்றும், பாசிட்டிவ் செய்திகள் வரும்பட்சத்தில் சந்தை மீண்டும் ஏற்றத்தைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது என்றும், இதுபோன்ற பாசிட்டிவ் ட்ரிக்கர்கள் வராதவரை சந்தை பலவீன மாகவும் திசையில்லா போக்கை மட்டுமே காண்பிக்கும் என்றும் சொல்லி யிருந்தோம்.

செவ்வாய், புதன் மற்றும் வெள்ளியன்று இறக்கத்தைச் சந்தித்த நிஃப்டி, வியாழனன்று மட்டும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்வின் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பால் வேகமானதொரு ஏற்றத்தைச் சந்தித்தது. வெள்ளியன்று இறுதியில் வாராந்திர அளவில் ஏறக்குறைய 85 புள்ளிகள்  இறக்கத்தில் முடிவடைந்தது.

வரும் வாரத்தில் திங்களன்று இன்ஃப்ளேஷன் டேட்டாவும், செவ்வாயன்று ஹோல்சேல் ப்ரைஸ் இன்ஃப்ளேஷன் போன்ற முக்கிய இந்திய டேட்டாக்களும் வெளிவர இருக்கின்றன.

அமெரிக்க டேட்டாக்களில் புதனன்று ரீடெயில் சேல்ஸ் டேட்டாவும், வியாழனன்று ஜாப்லெஸ் க்ளைம் டேட்டாவும்,  வெள்ளியன்று பல்வேறு ஹவுஸிங் டேட்டாக்களும் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களாகும்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: நல்லதொரு கரெக்‌ஷன் வரலாம்!

மிகவும் வாலட்டைலான ஒரு சூழலுக்குள் சந்தை செல்லலாம் என்ற சூழல் உருவாகிக்கொண்டு வருகிறது எனலாம். வரும் வாரத்தில் வெளிவர இருக்கும் காலாண்டு ரிசல்ட்டுகள் பாசிட்டிவ்வாக இருந்தாலும் கூட, ஏற்ற இறக்கம்  தொடரவும்; இறக்கம் வந்துவிடவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக, டெக்னிக்கல் லெவல்களை அடிக்கடி உடைத்து அதிர்ச்சி தருமளவுக்கு நிஃப்டியின் போக்கு மாறக்கூடும்.

பண்டமென்டல்கள் நன்றாக இருக்கும் ஸ்டாக்குகளில் மட்டுமே ஸ்ட்ரிக்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்யக்கூடிய தருணம் இது. ஓவர்நைட் பொசிஷனும் எடுக்கவே கூடாது. வாரத்தின் இறுதியில் கடைசி நேரத்தில் டிரெண்ட் மாற வாய்ப்புள்ளது. கவனம் தேவை.

10/10/14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை
 
டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ஹெச்சிஎல்டெக் (1737.50), மணப்புரம் (28.70), சன்பார்மா (821.35), ஆர்ச்சீஸ் (29.80), டிசிடபிள்யூ (25), என்பிசிசி (661.15) - குறைந்த எண்ணிக்கை யில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: கேசெராசெரா (13), டாடாபவர் (82.80), ட்ரைடெண்ட் (31.45), மஹா பேங்க் (40.05), என்எம்டிசி (152), டாடா மோட்டார்ஸ் (492.70), புஞ்ச்லாயிட் (37.35), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (1143.20), டிபி ரியாலிட்டி (63.20), கேட்டீ (185.10), ஆர்சிஎஃப் (53.65), சிசிஎல் (120.15), ஹேவெல்ஸ் (266.35) - நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள்: (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): இன்பி (3888.65), விஐபிஇண்ட் (120.90), ஜெட்ஏர்வேய்ஸ் (243.95), டாடா மெட்டாலிக்ஸ் (119.60), டீடி பவர் சிஸ்டம்ஸ் (371.15).

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: நல்லதொரு கரெக்‌ஷன் வரலாம்!

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): மஹாபேங்க் (40.05), ஹிந்த்சிங்க் (154.75), என்எம்டிசி (152), எம்அண்ட்எம் (1317.40), யுபிஎல் (331.85), ஹெச்டிஎஃப்சி (1006.40), எப்ஆர்எல் (114.10), மாதர்சன் சுமி (368.35), பாரத்ஃபோர்ஜ் (761.25), டாடா மோட்டார்ஸ் (492.70), எம்ஆர்பிஎல் (61.10), ஹிந்த்யூனிலீவர் (720.35), கீதாஞ்சலி (61.75).

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: மேக்மா (122), ரிலையன்ஸ் (960.65), ஏசியன்பெயின்ட் (663.25), பிப்பவ்டாக் (41.10), ஜோதிலேப் (264) ஐடிஎஃப்சி (139.95), ரேமண்ட் (466.50), பிஎஃப்சி (240.85), பிஎச்இஎல் (221.60) - இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்கு தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: விப்ரோ (584.70), ஹெச்சிஎல்இன்சிஸ் (78.90), டைட்டான் (397.90), எஸ்ஆர்இஐஇன்ஃப்ரா (42.60), அலெம்பிக்லிட் (51.50), பென்இன்ட் (51.75), பூர்வா (97), ஜிபிபிஎல் (161.80), நாகர்கேப் (88.25) - (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்) - இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.

 டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: விஜயாபேங்க் (46.50), பவர்கிரிட் (136.05), அனந்த்ராஜ் (52.50), டிவி18ப்ராட்காஸ்ட் (28.15), கெர்ய்ன் (285.80), டெக்மஹிந்திரா (2339.05), ரிலையன்ஸ் (960.35), டாடாகுளோபல் (160.25), ஹெச்சிஎல்டெக் (1737.50), சிப்லா (592.40), விப்ரோ (584.70), டிசிஎஸ் (2678.50), எஸ்எஸ்எல்டீ (249.75), பாரத்ஃபோர்ஜ் (761.25), டாடாமோட்டார்ஸ் (492.70), ஏசியன்பெயின்ட் (663.25) - தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள் - (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): கேசெராசெரா (13), கெயில் (444), பார்திஏர்டெல் (392.30), என்டிபிசி(141.25), எம்அண்எம் ஃபைனான்ஸ் (284.80), கோல்இந்தியா (335.25), டாடாபவர்(82.80), அம்புஜா சிமென்ட்(211.45), என்எம்டிசி (152), ஸ்பிக் (23.20), நேஷனல்அலுமினியம் (59), ஹெச்டிஎஃப்சி (1006.40), ஐடீசி (353.10), இசட்இஇஎல் (318.90), ஹெச்டிஎஃப்சி பேங்க் (867.30), ஐடியா (152.80), ஹிந்தால்கோ (150.15), மாதர்சன் சுமி (368.35), பிஎஃப்எஸ் (43.65) - இவற்றை வியாபாரத்துக்குத் தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: இன்பி (3888.65), ஜெட்ஏர்வேய்ஸ் (243.95), டென் (150), டீடிபவர்சிஸ் (371.15).

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

எச்சரிக்கை: இந்தப் பகுதியில் உபயோகப்படுத்தப்படும் பல இண்டிகேட்டர்கள் மற்றும் டூல்கள் ஐந்துநாள் டிரேடிங் வாரத்தை மனதில் கொண்டு கணக்கீடு செய்யப்படுபவை. எனவே, நான்கே டிரேடிங் தினங்களைக் கொண்ட கடந்த வாரத்திலிருந்து செய்யப்படும் கணிப்புகள் பெருமளவுக்கு பலிக்காமல் போகும் வாய்ப்பு இருக்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு