நடப்பு
Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் இறக்கங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் !

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் இறக்கங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் !

டிரேடர்ஸ் பக்கங்கள்

மிகவும் வாலட்டைலான ஒரு சூழலுக்குள் சந்தை செல்லலாம் என்ற சூழல் உருவாகிக்கொண்டு வருகின்றது எனலாம் என்றும், குறிப்பாக டெக்னிக்கல் லெவல்களை அடிக்கடி பிரேக் செய்து அதிர்ச்சி தருமளவுக்கு நிஃப்டியின் போக்கு மாறக்கூடும் என்றும் வாரத்தின் இறுதியில் கடைசி நேரத்தில் டிரெண்ட் மாற வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம்.

நான்கு டிரேடிங் தினங்களைக் கொண்ட சென்ற வாரத்தில் இரண்டு நாட்கள் ஏற்றத்தையும், இரண்டு நாட்கள் இறக்கத்தையும் கொண்டு முடிவடைந்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக ஏறக்குறைய 80 பாயின்ட் அளவில் இறக்கத்துடன் முடிவடைந்தது.

பெரிய அளவிலான இந்திய டேட்டா வெளியீடுகள் இல்லாத வாரத்தை எதிர்கொள்ளப் போகிறோம். அமெரிக்க டேட்டாக்களில் புதனன்று இன்ஃப்ளேஷன் டேட்டாவும், வியாழனன்று ஜாப்லெஸ் க்ளைம் டேட்டாவும் வெளிவர இருக்கும் முக்கிய டேட்டாக்களாகும். செய்திகள், ரிசல்ட்டுகள் மற்றும் தீபாவளி சென்டிமென்ட் போன்றவையே வரும் வாரத்தில் சந்தையை எடுத்துச் செல்வதாக இருக்கும்.

வரும் வாரம் முகூர்த் டிரேடிங் தவிர்த்து மூன்றே டிரேடிங் தினங்கள் இருக்கும் வாரம். எனவே, பெரிய அளவிலான வியாபாரத்துக்கு ஸ்கோப் இருக்காது எனலாம். கொஞ்சம் திசை தெரியாமல் நகரவும், பின்னர் தீபாவளி சென்டிமென்டிலும் மட்டுமே டிரேடிங் நடக்க வாய்ப்புள்ளது.  கவனத்துடன் வியாபாரம் செய்வதே நல்லது. நிஃப்டி வியாபாரத்தைத் தவிர்த்து, வலுவான அடிப்படை கொண்ட பங்குகளில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் டிரேடர்கள் வியாபாரம் செய்யலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் இறக்கங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் !

உலகச் சந்தைகளின் மூவ்மென்ட் மீண்டும் நெகட்டிவ்வாக மாறினால், திடீர் இறக்கம் மீண்டும் வந்துவிடும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்பதை மறந்துவிடாமல் டிரேடிங் செய்ய வேண்டியிருக்கும்.

17.10.14 அன்று குளோஸிங்கில் இருக்கும் நிலைமை.

 டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: ஹெச்டிஎஃப்சி(997.15), பார்தி ஏர்டெல்(395.95), ஐடிசி(353.95), ஐடியா(154.20), சிப்லா(595.60), மாதர்சன்சுமி(373.65), லூபின்(1347.15), அம்புஜா சிமென்ட்(207.35), சன்டிவி (307.80), அலோக் டெக்ஸ்ட்(11.60), இசட்இஇஎல்(322.40) குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்: கேஎஸ்கே(64.80), எஸ்ஜேவிஎன்(22), கிளென்மார்க்(710.05), பிப்பவ் டாக்(40.25), ஓஎன்ஜிசி(397.10), சிமஹிந்திரா(13), ராஜ் டிவி(119.05), மெர்கர்டர்(24.80), எம்எம்டிசி(62.50), சென்ட்ரல் பேங்க்(61), பேங்க் ஆஃப் பரோடா(871.95), எல் அண்ட் டி எஃப்ஹெச்(64.70) நிஃப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.

உறுதியாய் வாராந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): இண்டஸ்இந்த்பேங்க்(660.85), இமாமி (734.50), பஜாஜ் கார்ப்(289.35).

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் இறக்கங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் !

உறுதியாய் வாரந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள் (டிரேடிங்குக்கு வாட்ச் செய்ய உகந்தது): ஜக்ரன்(123.35), நேஷனல் அலுமினியம் (59.75), டிசிபி பேங்க்(83.45), ஹெச்சிஎல் டெக்(1505.50), எஃப்எஸ்எல்(39.25), ராலீஸ்(211.85), ஜிந்தால்சா(75.85), டிசிஎஸ்(2441.15), எஜுகாம்ப்(27.40), அதானி போர்ட்ஸ்(250.35).

சற்று பாசிட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: இமாமி லிட்(734.50), செஞ்சுரிப்ளை(116.40), பிஎஃப்எஸ்(43), ஹீரோ மோட்டோகோ(2873.90), ஆந்திரா பேங்க் (71.90), பாரத் ஃபோர்ஜ்(752.15), ஓரியன்ட் பேங்க்(247.45) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை வியாபாரத்துக்குத் தவிர்க்கவும்.

சற்று நெகட்டிவ் டிரெண்டுக்கு மாறிய ஸ்டாக்குகள்: நெட்வொர்க்18(46.75), இந்த்ஹோட்டல் (94.25), ராலீஸ்(211.85), டெல்டா கார்ப் (86), மேன்இண்ட்ஸ்(63.55) (ரிவர்ஸலுக்கு வாட்ச் செய்யலாம்) இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தைத் தவிருங்கள்.
 
டேட்டா:

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்: கேஎஸ்கே(64.80), எஸ்ஜேவிஎன்(22.00), மங்களூர் கெமிக்கல் பெர்(95), என்எம்டிசி(159.85), நேஷனல் அலுமினியம்(59.75), அதானி எண்ட் (440.95),ஹெச்டிஎஃப்சி (997.15), கெய்ர்ன் (276.25), பார்தி ஏர்டெல்(395.95), கோட்டக் பேங்க்(1000.05), எம் அண்ட் எம் ஃபின்(277.90), ஐடிசி(353.95), ரிலையன்ஸ்(937.90), டாடா குளோபல் (153.35), ஹெச்சிஎல் டெக்(1505.50), எல் அண்ட் டி(1452.90), ஹெச்டிஎஃப்சி பேங்க்(885.25) தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டுக்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: திடீர் இறக்கங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் !

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள் (10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்): பவர்கிரிட்(134.10), என்டிபிசி (140.95), கேசெராசெரா(13.00), ஏசியன் பெயின்ட்(640.10), இன்ஃபி(3851.65), மணப்புரம்(26.30), டிவி18 ப்ராட்காஸ்ட் (27.45), கோல் இந்தியா(350.65), சன் பார்மா (798.35), ஆப்டோ சர்க்யூட்(19), எஸ்எஸ்எல்டி(232.65), சிப்லா(595.50), சவுத் பேங்க் (26.15), பஜாஜ் ஹிந்த்(16.80), ஐடிஎஃப்சி (139.60), மாதர்சன் சுமி(373.65) இவற்றை வியாபாரத்துக்குத் தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்: ஆந்திரா பேங்க்(71.90), எடெல்வெயிஸ்(48.10), என்பிசிசி(732.55), டால்பின்ஆப்(169.90), இமாமி லிட் (734.50), இன்செக்டிசைட் இந்தியா (768.60), லஷ்மிஇஎஃப்எல்(13.75).

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

எச்சரிக்கை: இந்தப் பகுதியில் உபயோகப்படுத்தப்படும் பல இண்டிகேட்டர்கள் மற்றும் டூல்கள் ஐந்துநாள் டிரேடிங் வாரத்தை மனதில் கொண்டு கணக்கீடு செய்யப்படுபவை.

எனவே, நான்கு டிரேடிங் தினங்களைக் கொண்ட சென்ற வாரத்திலிருந்து செய்யப்பட்டுள்ள கணிப்புகள் ஓரளவுக்கு பலிக்காமல் போகும் வாய்ப்புள்ளது என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.