Published:Updated:

அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க ஃபெடரல்... இந்திய சந்தை இனி எப்படி இருக்கும்?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க ஃபெடரல்... இந்திய சந்தை இனி எப்படி இருக்கும்?

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் சமீபத்தில் நிகழ்த்திய உரையால் உலகம் முழுக்க உள்ள பங்குச் சந்தைகள் கடுமையாக இறக்கம் கண்டன. அதன் விளைவுகள் இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கவே செய்தன.

கடந்த வாரத்தின் முதல் நாள் அன்றே இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தில் வர்த்தகமாயின. மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை சரிவு கண்டது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 250 புள்ளிகள் வரை இறக்கம் கண்டது.

பெரும்பாலான துறைக் குறியீடுகளும் சரிவில் வர்த்தகமாயின. குறிப்பாக, ஐ.டி, ரியால்ட்டி, மெட்டல் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஆகிய துறைகளின் குறியீடுகள் 2% - 3% வரை இறக்கத்தில் வர்த்தகமாயின. இந்த நிகழ்வு பங்குச் சந்தை முதலீட்டாளர் களுக்குக் கலக்கத்தை உண்டாக்கியது.

ஜெரோம் பாவெல்
ஜெரோம் பாவெல்

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே பங்குச் சந்தையின் போக்கு பெரும்பாலும் இறக்கத்தின் போக்கிலேயே இருந்துவருகிறது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி வர வாய்ப்புள்ளதாக ஒருபக்கம் பேசப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் அதிகரித்துவரும் பணவீக்கம் அச்சுறுத்தலாக இருக்கிறது.

இதற்கிடையில் உலக நாடுகளுக்கு இடை யிலான போர்ச் சூழல், உலக வர்த்தக சூழலில் இடையூறுகள் எனப் பல விஷயங்கள் சந்தைக்கு எதிராகவே இருக்கின்றன. ஆனாலும், கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கில் தீவிரமாக நகர்ந்தது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகளை மேற்கொண்டதால், உலகளாவிய நெருக்கடி சூழல்களையும் தாண்டி சந்தை ஏற்றம் கண்டது.

இந்த நிலையில், ஃபெடரல் வங்கித் தலைவர் ஜெரோம் பாவெல் பணவீக்கம் குறித்தும், வட்டி விகிதம் குறித்தும் பேசினார். அவர் பேச்சில், ‘‘அமெரிக்காவில் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதால், அதைக் கட்டுக்குள் வைத்திருக்க வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் வந்து வட்டி விகிதம் உயர்த்தப்படுவது தாமதமாகும் என்பது இப்போதைக்கு நடக்கும் சூழல் இல்லை. எனவே, வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்படுவதற்குதான் அதிக வாய்ப்புள்ளது’’ என்று அவர் கூறினார்.

அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால், பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்படையும். மக்களின் செலவுகள் அதிகரிக்கும்; கடன்கள் வாங்குவது குறையும்; தொழில் விரிவாக்க நடவடிக்கைகள் குறையும். இப்படி பல பாதிப்புகள் ஏற்படும் என்றாலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேறு வழியில்லை’’ என்று அவர் பேசிய பின், பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தைச் சந்தித்தன.

அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க ஃபெடரல்... இந்திய சந்தை இனி எப்படி இருக்கும்?

அமெரிக்க ஃபெடரல் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்துமெனில், அதன் பாதிப்பு இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக் குமா, இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித நிலைப்பாடு எப்படி இருக்கிறது, இந்தியப் பங்குச் சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும் என்ற கேள்விகளெல்லாம் முதலீட் டாளர்களிடையே எழுந் துள்ளன. இதே கேள்விகளைப் பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். பதில் களை விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் வட்டி விகிதம் குறித்து பேசியவுடன் அந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்கப் பங்குச் சந்தைகள் கடுமையான இறக்கம் கண்டன. அந்த இறக்கம் இந்தியப் பங்குச் சந்தையில் திங்கள் அன்று எதிரொலித்தது.

இது எதிர்பார்க்கப்பட்ட இறக்கம்தான். இந்த இறக்கம் அப்படியே தொடரும் என்று நினைக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் பலமுறை ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளா வதுதான் பங்குச் சந்தைகளின் இயல்பு. இதுபோன்ற அதிக அளவு இறக்கம் உண்டாகும் போதுதான் முதலீட்டாளர்களிடையே பதற்றம் உருவா கிறது. ஏன் இறங்குகிறது என்ற கேள்வி வருகிறது. ஆனால், ஆயிரம் புள்ளிகள் ஏறும்போது ஏன் ஏறுகிறது என்று யாரும் கேட்பதில்லை.

திங்கள் அன்று பங்குச் சந்தை கண்ட இறக்கமானது தற்காலிகமானதுதான் என்பதை அடுத்த நாளே சந்தை தெளிவுபடுத்தியது. திங்கள் அன்று எவ்வளவு இறங்கியதோ அதைவிட அதிகமாகவே செவ்வாய் அன்று ஏற்றம் கண்டு வர்த்தகமானது. எனவே, திங்களன்று வந்த இறக்கம் குறித்து முதலீட் டாளர்கள் அதிகம் கவலைப் படத் தேவையில்லை.

மேலும், அமெரிக்காவின் பொருளாதார சூழலும், இந்தியாவின் பொருளாதாரச் சூழலும் வேறு வேறு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அங்குள்ள பணவீக்க உயர்வும், இங்குள்ள பணவீக்க உயர்வும் ஒரே மாதிரி அல்ல, என்றாலும் அமெரிக்காவில் ஃபெடரல் வங்கி வட்டிவிகிதத்தை உயர்த்தினால், இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். அப்படித்தான் இதற்கு முந்தைய வட்டி விகித உயர்வு நடவடிக்கைகள் இருந்திருக்கின்றன.

ஆனால், இனிவரும் காலங்களில் அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்து வதற்கும், இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

நான் இப்படிச் சொல்லக் காரணம், நம்முடைய பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதுதான். இங்கு தொழில் நடவடிக்கை கள் நன்றாக இருக்கின்றன; முதலீடுகள், கடன் வளர்ச்சி அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நடவடிக்கை களையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. எனவே, அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகமாக உயர்த் தினாலும், இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் இன்னும் ஒரு முறை மட்டுமே வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்

சந்தையின் எதிர்பார்ப்பையும் தாண்டி, வட்டி விகிதம் உயர்த்தப் பட்டால்தான் பங்குச் சந்தை களின் செயல்பாடு எதிர்பாராத விதத்தில் இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் தற்போதுள்ள நிலையில் குறைவுதான்.

எனவே, இந்தியப் பங்குச் சந்தைகள் அக்டோபர் மாதம் வரையில் அதிர்ச்சி அல்லது ஆச்சர்யம் தரக்கூடிய பெரிய ஏற்ற, இறக்கங்கள் இல்லாமல்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதன் பிறகு, ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரம் எப்படி இருக்கிறது என்பதை முடிவு செய்யும் விஷயமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், போர்ச்சூழல் தற்காலிகமாகக் கொஞ்சம் தணிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, அது முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதை மறக்கக்கூடாது.

அடுத்த சில மாதங்களில் ரஷ்யா - உக்ரைன் போர்ச் சூழல் முடிவுக்கு வராவிட்டால் அது கமாடிட்டி சந்தைகளின் வர்த்தகத்தில் கணிசமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. காரணம், குளிர்காலம் வரவிருப்பதால் கமாடிட்டி களின் தேவை அதிகமாக இருக்கும். எரிபொருள் போன்றவற்றின் வர்த்த கமும் விநியோகமும் பாதிக்கப்பட்டால், அது அவற்றின் விலை உயர்வுக்கு வித்திடும். அதனால் பங்குச் சந்தைகள் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

எனவே, அக்டோபர் மாதத்துக்குப் பிறகு, மீண்டும் ஒரு முறை சந்தையின் நிலவரத்தை மறுஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் வரலாம் என்பதை முதலீட் டாளர்கள் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது’’ என்று பேசி முடித்தார் ரெஜி தாமஸ். பங்குச் சந்தையில் எப்போதும் ஏற்றம், இறக்கம் இருக்கும்தானே!