Published:Updated:

இனி பங்குச் சந்தையிலும் தங்கம்... உருவாகிறது கோல்டு எக்ஸ்சேஞ்ச்..!

கோல்டு எக்ஸ்சேஞ்ச்
பிரீமியம் ஸ்டோரி
News
கோல்டு எக்ஸ்சேஞ்ச்

பங்குச் சந்தை

நம் நாட்டில் கூடிய விரைவில் வரப் போகிறது கோல்டு எக்ஸ்சேஞ்ச். இனி பங்குகளைத் தினமும் வாங்கி விற்பது போல, தங்கத்தையும் பங்குச் சந்தையில் வாங்கி, விற்கலாம். அதற்கான ஏற்பாடுகளை செபி தொடங்கியுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவில் கோல்டு எக்ஸ்சேஞ்ச் அமைக்கும் அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் வெளியிட்டார். இந்த கோல்டு எக்ஸ் சேஞ்சுக்கும் செபியே ஒழுங்குமுறை ஆணைய மாகச் செயல்படும் என்றும் சொன்னார். இதையடுத்து கோல்டு எக்ஸ்சேஞ்சை அமைக்கும் வேலையில் இறங்கிய செபி, தற்போது அதை உருவாக்க பங்குச் சந்தை களுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், வர்த்தகத்துக்கான தங்கத்தை நிர்வகிக்கும் ‘வால்ட் மேனேஜர்’களுக்கான’ விதிமுறை களையும் வெளியிட்டுள்ளது.

இனி பங்குச் சந்தையிலும் தங்கம்... உருவாகிறது கோல்டு எக்ஸ்சேஞ்ச்..!

இவ்வாறு உருவாக்கப்படும் கோல்டு எக்ஸ் சேஞ்சில் வர்த்தகமாகும் தங்கம் ‘எலெக்ட்ரானிக் தங்க ரசீதுகள்’ என அழைக்கப்படும். இவை மற்ற பங்குகளைப் போலவே, வர்த்தகம், கிளியரிங் மற்றும் செட்டில்மென்ட் ஆகிய நடைமுறைகளின்படி இயங்கும். இந்த எலெக்ட்ரானிக் தங்க ரசீதுகளின் வர்த்தகம், தங்கத்தின் பிசிக்கல் டெலிவரி, தங்கத்தின் தரம், அளவு ஆகியவற்றை சரிபார்த்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய அனைத்துக்குமான கட்டமைப்பை கோல்டு எக்ஸ்சேஞ்ச் செய்யும்.இதற்கான ‘வால்ட் மேனேஜர்கள்’ தங்களை செபியின்கீழ் பதிவு செய்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ரூ.50 கோடி நிகர மதிப்பு கொண்ட எந்தவொரு இந்திய நிறுவனமும் ‘வால்ட் மேனேஜ’ராக விண்ணப்பிக்கலாம்.

தங்கத்தை வாங்க, விற்க உதவும் இந்த கோல்டு எக்ஸ்சேஞ்ச் உருவாக்கப்படுவதன் மூலம் உள்நாட்டில் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து வெளிப்படைத்தன்மை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தை நகை யாக மட்டுமே வாங்கும் பழக்கம் குறைந்து, முதலீட்டு நோக்கில் பலரும் தங்கம் வாங்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்!