Published:Updated:

பட்ஜெட் 2022 - 23... பங்குச் சந்தைக்கு என்னென்ன பாசிட்டிவ் அம்சங்கள்..?

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பட்ஜெட் 2022 - 23... பங்குச் சந்தைக்கு என்னென்ன பாசிட்டிவ் அம்சங்கள்..?

பங்குச் சந்தை

Published:Updated:
பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
பங்குச் சந்தை

ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டைத் தொடர்ந்து பங்குச் சந்தை உயர்ந்தாலும், தற்போது பங்குச் சந்தை தனது கவனத்தை சர்வதேச அளவில் காணப்படும் வட்டி விகித உயர்வு மற்றும் தொடர்ச்சியாகக் காணப்படும் பத்திரங்கள் மீதான வருவாய் அதிகரிப்பு, நிறுவனங்களின் மூன்றாம் காலாண்டு நிதிநிலை முடிவுகளின் சீஸனில் இதுவரை காணப்படும் வருவாய் அதிகரிப்பு ஆகியவற்றின் மீது குவித்துள்ளது. அடுத்து வரும் பிப்ரவரி 9-ம் தேதி நடக்க உள்ள ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கைக் கூட்டத்தில் வரும் காலத்துக்கான பணப்புழக்கம் மற்றும் வட்டி விகிதம் தொடர்பான முடிவுகள் குறித்தும் பலவிதமான எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

ரெஜி தாமஸ் 
பங்குச் சந்தை நிபுணர்
ரெஜி தாமஸ் பங்குச் சந்தை நிபுணர்

இந்த பட்ஜெட்டிலிருந்து பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை விஷயங்களைப் பார்ப்போம்.

1. டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் மூலதன முதலீட்டில் கவனம்

புதிய சிறந்த இந்தியாவை உருவாக்கும் மூலதனச் செலவினங்களையும் அதிகரித்து உள்ளது. ஸ்டார்ட்அப் உள்ளிட்ட அனைத்து துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. மொத்தத்தில், டிஜிட்டல்மயமாக்கல் பட்ஜெட்டின் மிக முக்கியமான நோக்கமாக உள்ளதைப் பார்க்க முடிகிறது. இதற்காகப் பல துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சி, டிஜிட்டல் பேங்கிங் யூனிட், டிஜிட்டல் சுகாதாரப் பதிவுகள், டிஜிட்டல் நிலப் பதிவுகள் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்களுக்கான நிதி ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. பட்ஜெட் மறைமுகமாக கிரிப்டோகரன்சி களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது.

மேலும், ஸ்டார்ட்அப், ட்ரோன் தொழில் நுட்பம், 5ஜி அலைக்கற்றை ஏலம், டிஜிட்டல் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றிலும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தியுள்ளது.

ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யும் திட்டத்தின் மூலம் முழுமையான டிஜிட்டல் நிதிசார் உட்கட்டமைப்பு உருவாக்கப்படும். 2022-23 நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி அதன் டிஜிட்டல் நாணயத்தை பிளாக்செயின் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கி அறிமுகம் செய்யும்.

இந்த டிஜிட்டல் நாணய முறை வந்ததும் நிதிசார் துறையில் டிஜிட்டல்மயமும் அதன் பயன்பாடுகளும் அதிகரிக்கும். இதனால் ரொக்கப் பணப்புழக்கம் குறைந்து, அது சார்ந்த செலவினங்களும் குறையும். மேலும் பணப் புழக்கத்தின் போக்கைக் கண்காணிக்கவும், நிழல் வங்கி செயல்பாடுகளையும் கட்டுக்குள் கொண்டுவரும். முழுமையான டிஜிட்டல் பரிவர்த்தனைப் பொருளாதாரமாக மாறுவதுடன், பணப் பரிவர்த்தனைகளில் செயல்திறன் அதிகரிப்பதையும் காண முடியும்.

மேலும், கொரோனாவுக்குப் பிறகு, குறைந்த உள்நாட்டு நுகர்வை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், 2022 மத்திய பட்ஜெட்டில் வருவாய் செலவினங்களின் ஒதுக்கீட்டைக் குறைவாக நிர்ணயித்து, மூலதனச் செலவினங்களுக்கான ஒதுக்கீட்டைத் தொடர்ந்து இரண்டாவது வருடமாக அதிகமாக நிர்ணயித்துள்ளது. வருவாய் செலவினங்களின் வளர்ச்சி 2022 நிதி ஆண்டில் 2.7 சதவிகிதமாக இருந்தது, 2023-ம் நிதி ஆண்டில் வருடாந்தர அடிப்படையில் 0.9% அளவுக்கு மட்டுமே அதிகரித்துள்ளது.

ஆனால், மூலதனச் செலவினங்களின் வளர்ச்சி 2022-ம் நிதி ஆண்டில் 41 சதவிகிதமாக இருந்தது, 2023-ல் வருடாந்தர அடிப்படையில் 24.5% அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023-ம் நிதி ஆண்டுக்கான அரசு மூலதனச் செலவினம் 2020-ல் இருந்த ரூ.3.4 லட்சம் கோடி என்ற அளவைவிட இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டு, ரூ.7.5 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

பட்ஜெட்டில் மொத்த அரசு செலவினங்களின் வளர்ச்சி 4.6 சதவிகிதமாக உள்ள நிலையில், மூலதனச் செலவினங் களின் வளர்ச்சி அதிகமாக இருப்பது அரசின் செலவு செய்யும் போக்கின் தரம் உயர்ந்துள்ளது. அரசின் மொத்த செலவினங்களில் மூலதனச் செலவினங்களின் பங்களிப்பு 19 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன் மூலதனச் செலவினங்களின் பங்கு 12 - 13% என்கிற அளவில்தான் இருந்தது.

2. வரி விதிப்பு

திருத்தப்பட்ட வரிக் கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் மற்றும் சொத்துகள் மீதான நீண்ட கால ஆதாய வரி மீதான கூடுதல் வரிக் குறைப்பு முதல் கிரிப்டோ சொத்துகள் மீதான வருமானத்துக்கு 30% வரி விதிக்கப்பட்டது வரை பட்ஜெட்டில் வரி சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றன.

3. கவர்ச்சி அறிவிப்புகள்

ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கவிருக்கும் நிலை யிலும் பட்ஜெட்டில் மக்களைக் கவரும் ‘பாப்புலிஸ்ட்’ அறிவிப்புகளை அரசு தவிர்த்துவிட்டு, நீண்ட கால அடிப்படையிலான வளர்ச்சிக்கான காரணிகளில் மட்டுமே கவனத்தைச் செலுத்தியுள்ளது. நிதிப் பற்றாக்குறை அளவு 2022-ல் 6.9 சதவிகிதமாக உள்ள நிலையில், 2023-ல் 6.4 சதவிகித மாகக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 பட்ஜெட் போலவே, 2023 பட்ஜெட் தரவுகள் வருவாய் சார்ந்து பழைமைவாத அடிப்படையில் இருந்தாலும், மொத்தமாக பட்ஜெட்டின் கணிப்புகள் நம்பகத்தன்மையுடன் இருப்பதாகக் கருதலாம்.

பங்குச் சந்தையில் துறை சார்ந்த செயல்பாடு

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மூலதனச் செல வினங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றால் வேளாண், உட்கட்டமைப்பு, சிமென்ட், வங்கி, நிதிச் சேவை, காப்பீடு, ஐடி, மெட்டல், கெமிக்கல் ஆகிய துறைகள் பலன் அடையும் என எதிர்பார்க்கலாம். பங்குச் சந்தையின் பார்வையில், இந்த பட்ஜெட்டில் அதிருப்திகரமான விஷயங்கள் எதுவும் பெரிதாக இல்லை. மேலும், அரசின் வருவாய் இலக்குகள் எட்டப்படும்பட்சத்தில் கூடுதலாக மூலதனச் செலவினங்கள் செய்ய வாய்ப்புகளும் உள்ளன.

அதே சமயம், நுகர்வு, பொரு ளாதார மீட்சி ஆகியவற்றுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இல்லாதது ஏமாற்றம் அளித் தாலும், 2023-ல் நிறைவான தடுப்பூசி இலக்கை எட்டுவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக் காரணிகள் பாதிக்காமல் தொடர்ந்து பொருளாதாரத்தை முன்னேற்றத்தில் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. கச்சா எண்ணெய் பேரல் 90 டாலர் என்ற அளவில் ஏற்றம் காண்பது பணவீக்க சவாலைக் கொண்டு வரும்.

நிஃப்டியின் மதிப்பீடுகள் 2023-ம் ஆண்டு இ.பி.எஸ்ஸில் 20 மடங்கு என்ற அளவில் சற்று அதிகமாகவே இருக்கிறது. எனவே, நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகளும், வட்டி விகித உயர்வும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக உள்ளன.

பட்ஜெட் அன்று சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப் பட்டாலும் வர்த்தக முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி இரண்டுமே பாசிட்டிவ் போக்கில் நிறைவு செய்தன. 16836 என்ற நிலையில் உள்ள இடைநிலை பாட்டம் தற்போது தக்கவைத்துக் கொள்ளப்படும். பட்ஜெட் இடைக்கால பூஸ்டராக இருந்து குறுகிய காலத்தில் 18190-18300 என்ற நிலையை பரிசோதிப்பதற் கான வாய்ப்புகளை உருவாக் கும் என எதிர்பார்க்கலாம்.

தமிழில்: ஜெ.சரவணன்

பட்ஜெட் 2022 - 23... பங்குச் சந்தைக்கு என்னென்ன பாசிட்டிவ் அம்சங்கள்..?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism