நடப்பு
Published:Updated:

காளை Vs கரடி ஜெயிக்கப் போவது எது? கணிக்கும் நிபுணர்... கைகொடுக்கும் பங்குகள்!

காளை Vs கரடி
பிரீமியம் ஸ்டோரி
News
காளை Vs கரடி

C O V E R S T O R Y

கே.கார்த்திக் ராஜா, செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட், Rupeedesk.in

கே.கார்த்திக் ராஜா
செபி 
பதிவு பெற்ற 
ரிசர்ச் 
அனலிஸ்ட், Rupeedesk.in
கே.கார்த்திக் ராஜா செபி பதிவு பெற்ற ரிசர்ச் அனலிஸ்ட், Rupeedesk.in

இந்தியப் பங்குச் சந்தை அண்மைக் காலத்தில் ஏற்ற இறக்கத்திலே இருந்து வருகிறது. கரடிக்கும் காளைக்கும் இடையே பயங்கரமாக நடந்துவரும் இந்த மோதலில் கரடியின் கை வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே ஓங்கி இருக்கிறது. வரும் வாரங்களிலும் கரடியின் ஆதிக்கம் தொடரவே அதிக வாய்ப்புள்ளது. இந்த நிலையில், சந்தையின் போக்கை பாதிக்கும் ஃபண்டமென்டல் காரணிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

காளை Vs கரடி
காளை Vs கரடி

சந்தையைப் பாதிக்கும் காரணிகள்

* கோவிட்-19 பரவல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் இரண்டாவது அலை வரக்கூடும் என்ற பயம் உருவாகி யிருக்கிறது.

* அமெரிக்க பாண்டுகளின் வருமானம் அதிகரித்திருப்பது, இந்தியப் பங்குச் சந்தைக்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. நீண்ட நாள்களாக சுமார் 0.25% வருமானம் கொடுத்து வந்த 10 ஆண்டு அமெரிக்க கருவூல ரசீதுகள், அதாவது பாண்டுகள் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.75% அளவுக்கு அதிக வருமானத்தைத் தந்துள்ளன.

* இந்தியா போன்ற வளர்ந்துவரும் பங்குச் சந்தைகளிலிருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (FII) முதலீட்டை வெளியே எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நடப்பு மார்ச் மாதத்தில் 14 வர்த்தக தினங் களில் ஆறு நாள்கள் எஃப்.ஐ.ஐ-க்கள் நிகர விற்பனையாளர்களாக உள்ளனர்.

* சர்வதேச அளவில் அமெரிக்க - சீன பொருளாதாரப் போர் பங்குச் சந்தைகளில் மோசமான விளைவு களை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள், ஒருவரை ஒருவர் கண்டபடி விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, மனித உரிமைகள், வர்த்தகம், சர்வதேசக் கூட்டு குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருவதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.

* இந்தியாவில் இன்னும் பல புதிய பங்கு வெளியீடுகள் (IPO) வந்து கொண்டிருக்கின்றன. இவை சந்தையில் லிக்யூடிட்டியைப் (liquidity) பராமரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காளை Vs கரடி
காளை Vs கரடி

டெக்னிக்கல்கள் சொல்லும் ரகசியங்கள்...

சந்தையின் போக்கை டெக்னிக்கல் அடிப்படையில் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். நிஃப்டியின் முக்கியமான புள்ளியாகக் கருதப்படும் 15330-ஐ வெற்றிகரமாகக் கடக்க முடியாமல் சந்தை திணறி வருகிறது. அதனால் சந்தையில் வாலடைலிட்டி தொடர்கிறது.

கோவிட் பாதிப்பு அதிகமிருந்த 2020 மார்ச்-ஏப்ரலில் இறக்கத்துக்குப் பிறகு, சந்தை V வடிவ மீட்சிக்குப் பிறகு, சிறிது காலத்துக்குப் பக்கவாட்டு நகர்வில் இருந்துவருகிறது. வரும் வாரங்களில் நிஃப்டி 14030 மற்றும் 15430 இடையே வர்த்தமாக வாய்ப்புண்டு. நிஃப்டி அடுத்த ஏற்றத்துக்கு நேரம் எடுத்துக்கொள்ளக் கூடும். எனவே, முதலீட்டாளர்கள் பொறுமை காப்பது மிக அவசியம்.

வாராந்தர முடிவில், நிஃப்டி 13000 புள்ளிகளுக்குக்கீழே இறங்காதபட்சத்தில், சந்தை நீண்டகாலத்துக்கு காளையின் பிடிக்கு மாறும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. 15330 புள்ளிகளைத் தாண்டி பிரேக் அவுட் ஆகாத வரைக்கும் நிஃப்டி, பெரிய ஏற்றத்தைப் பெறாமல் நீண்ட வரம்புக்குள் வர்த்தகமாகக் கூடும். அதே நேரத்தில், கடந்த சில மாதங்களாக, நிஃப்டி குறியீட்டில் இறக்கம் ஏற்படும் போதெல்லாம், அதன் 50 நாள் மூவிங் ஆவரேஜ் நிலையில் ஆதரவு (support) கிடைப்பதைக் காண முடிகிறது.

தனிப்பட்ட பங்குகளில் கவனம்

இந்த நிலையில், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், நிஃப்டி குறியீட்டைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, சில குறிப்பிட்ட, தனிப்பட்ட பங்குகளில் கவனம் செலுத்தலாம். குறிப்பாக, அடிப்படையில் வலுவான நல்ல மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங் களில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேற்கொள்ளலாம்.வரும் மாதத்தில் நிஃப்டியின் வலிமையான ரெசிஸ்டன்ஸ் 14992/15052/15330/15430 ஆகவும், வலிமையான சப்போர்ட் 14350/14014/13014 ஆகவும் உள்ளன.

கவனிக்க வேண்டிய பங்குகள்...

சந்தையின் தற்போதைய நிலை யிலும் நீண்டகால முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய ஐந்து பங்குகளை இனி பார்ப்போம்...

முதலீடு
முதலீடு

ஐ.டி.சி (ITC)

தற்போதைய விலை: ரூ.215.95

இலக்கு காலம்: 6 - 15 மாதங்கள்

இலக்கு விலை ரூ.300 - ரூ.360

கிட்டத்தட்ட 110 ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது ஐ.டி.சி நிறுவனம். இந்த நிறுவனம் லார்ஜ் கேப் பிரிவில் (பங்குச் சந்தை மதிப்பு ரூ.2,74,340 கோடி) வருகிறது. சிகரெட் தயாரிப்புக்குப் பெயர் பெற்ற இந்த நிறுவனம், இன்றைக்கு ஒரு எஃ.ப்.எம்.சி.ஜி நிறுவனமாகவே அதிகம் அறியப்படுகிறது.

மூன்றாம் காலாண்டில் இதன் விற்பனை நன்கு மீண்டு வந்திருக்கிறது. பட்ஜெட்டில் புதிதாக வரி விதிக்கப்படவில்லை என்பது இந்த நிறுவனத்துக்கு சாதகமான அம்சம்.

இந்த நிறுவனம் தொடர்ந்து எஃ.ப்.எம்.சி.ஜி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஹோட்டல் வணிகத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இது அதன் லாபத்தை அதிகரிக்கக் கூடும். தவிர, இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாடும் மேம்படும்.

கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தில் மொத்த சொத்து மதிப்பு 7.76% அதிகரித்துள்ளது. கடன் 4.36% குறைந்துள்ளது இவை நிறுவனத்துக்குச் சாதக மான அம்சங்கள் ஆகும்.

இதன் பங்கின் விலை 20 நாள்கள் இ.எம்.ஏ-க்கு (Exponential Moving Average) மேல் நிலை பெற்றிருக்கிறது. பங்கின் விலை சார்ட்டில் ஹையர் ஹைஸ் மற்றும் ஹையர் லோ (Higher Highs and Higher Low) பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. இது பங்கின் விலை ஏறப்போகிறது என்பதற்கான பாசிட்டிவ் சிக்னல் ஆகும். வால்யூம் அதிகரிப்பால், புல்லிஷ் கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் உருவாகி யுள்ளது. இந்தப் பங்கில் புதிய முதலீடு அதிகரித்துள்ளது.

தினசரி சார்ட்டில் டபுள் பாட்டம் உருவாகியிருக்கிறது. கூடவே ஆர்.எஸ்.ஐ இண்டி கேட்டர் டைவர்சன்ஸ் உடன் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எம்.ஏ.சி.டி ஆய்வு முடிவு, இந்தப் பங்கில் புதிய முதலீடு அதிகரித்திருப்பதைக் குறிக்கிறது. மேலும், சமீப காலத்தில் இதன் வால்யூம் அதிகரித்திருப்பது புதிய முதலீடு நடப்பதை உறுதி செய்திருக்கிறது. அருமையான கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன்கள் இந்தப் பங்கில் உருவாகி இருக்கின்றன. குறுகிய காலத்தில் இந்தப் பங்கின் விலை தொடர்ந்து ஏறும் என எதிர்பார்க்கலாம்.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் (BRITANNIA)

தற்போதைய விலை: ரூ.3,537.75

இலக்கு காலம்: 6 - 15 மாதங்கள்

இலக்கு விலை ரூ.3,735 - ரூ. 4,135

இந்த நிறுவனம் லார்ஜ்கேப் பிரிவில் (பங்குச் சந்தை மதிப்பு ரூ.84,930 கோடி) வருகிறது. இது ஒரு எஃ.ப்.எம்.சி.ஜி நிறுவனம். இந்த நிறுவனம் புதிதாக ரூ.1,532 கோடி முதலீடு செய்திருக்கிறது. இது ஆண்டுக்கணக்கில் 79% அதிகரிப்பாகும்.

இந்த நிறுவனம், அதன் செயல்பாட்டு வருவாயில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே வட்டிக்காகச் செலவிடு கிறது. மேலும், அதன் பணியாளர்களுக்காக செய்யும் செலவானது மிகவும் குறைவாக அதாவது, ஆண்டுக்கு 4.2% என்ற அளவில்தான் உள்ளது.

இந்த நிறுவனம் தற்போது தொழிற்சாலை விரிவாக்கத்தில் இருக் கிறது. மொத்தம் ஐந்து தொழிற்சாலைகள் பெரிதாக்கப்படுகின்றன. அதனால் குறுகிய காலத்தில் இதன் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். கூடவே, நிறுவனத்தின் வளர்ச்சியும் மேம்படும் என எதிர் பார்க்கலாம்.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் என்பது பருவ மழையை நம்பியிருக்கிறது. மூலப்பொருள்களான விளைபொருள் களின் விலை, சப்ளை மற்றும் மழையை ஒட்டியே நிர்ணயம் ஆகும். இந்த நிறுவனத்தின் விற்பனையில் கிராமப்புறப் பங்களிப்பு சுமார் 30 சதவிகிதமாக உள்ளது.

கடந்த மூன்றாண்டு காலத்தில் நிஃப்டி எஃப்.எம்.சி.ஜி இண்டெக்ஸ் சுமார் 30% வருமானம் கொடுத்திருக்கும் நிலையில், இந்தப் பங்கு கிட்டத்தட்ட 43% வருமானம் தந்துள்ளது. இந்தப் பங்கின் விலை அதன் 52 வார விலையைவிட 12% அதிகமாக உள்ளது.

பங்கின் விலை 50 நாள்கள் இ.எம்.ஏ-க்கு (Exponential Moving Average) மேல் நிலைபெற்றிருக்கிறது. பங்கின் விலை சார்ட்டில் ஹையர் ஹை மற்றும் ஹையர் லோ பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. இது பங்கின் விலை ஏறப்போகிறது என்பதற்கான பாசிட்டிவ் அறிகுறியாகும்.

வால்யூம் அதிகரிப்பால், புல்லிஷ் கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் உருவாகி உள்ளது. இந்தப் பங்கில் புதிய முதலீடு அதிகரித்துள்ளது. தினசரி சார்ட்டில் டபுள் பாட்டம் உருவாகியிருக்கிறது. கூடவே ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர் டைவர்சன்ஸ் உடன் சிறப்பாக உருவாகியிருக்கிறது.

எம்.ஏ.சி.டி ஆய்வு முடிவு பங்கில் புதிய முதலீடு அதிகரித்திருப்பதைக் குறிக்கிறது. கூடவே, சமீப காலத்தில் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இது புதிய முதலீடு நடப்பதை உறுதி செய்திருக்கிறது.

இந்தப் பங்கின் டிரேடிங் சார்ட்டில் அருமையான கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன்கள் உருவாகியுள்ளன. குறுகிய காலத்தில் இந்தப் பங்கின் விலை தொடர்ந்து ஏறும் என எதிர்பார்க்கலாம்.

பெர்ஜர் பெயின்ட்ஸ் (BERGEPAINT)

தற்போதைய விலை: ரூ.741.05

இலக்கு காலம்: 6 - 15 மாதங்கள்

இலக்கு விலை: ரூ.800 - ரூ.920

கிட்டத்தட்ட நூற்றாண்டு பாரம்பர்யம் கொண்ட நிறுவனம் இது. இந்த நிறுவனம் லார்ஜ்கேப் பிரிவில் (பங்குச் சந்தை மதிப்பு ரூ.70,938 கோடி) வருகிறது.

கட்டுமானப் பொருள்கள் துறையைச் சேர்ந்த இந்த நிறுவனம் எனாமல், வார்னிஸ் மற்றும் பெயின்ட் தயாரிப்பில் உள்ளது. இந்தப் பிரிவில் அதிக பங்குச் சந்தை மதிப்புகொண்ட நிறுவனத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் அதன் புரொமோட்டர்களின் பங்குச் சந்தை மூலதனம் சுமார் 75 சதவிகிதமாக உள்ளது. 2019-20-ம் நிதி ஆண்டில் இதன் நிகர லாபம் 32.15% வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிறுவனம் அடிப்படையில் வலுவானதாக உள்ளது.

பங்கின் விலை 50 நாள்கள் இ.எம்.ஏ-க்கு (Exponential Moving Average) மேல் நிலைபெற்றுள்ளது. பங்கின் விலை சார்ட்டில் ஹையர் ஹை மற்றும் ஹையர் லோ பேட்டர்ன் உருவாகியிருப்பதால், பங்கின் விலை இன்னும் ஏறப் போகிறது என்பதற்கான பாசிட்டிவ் அறிகுறியாக உள்ளது.

வால்யூம் உயர்வால் புல்லிஷ் கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. இந்தப் பங்கில் புதிய முதலீடுகள் அதிகரித்துள்ளது. இந்தப் பங்கின் தினசரி விலை சார்ட்டில் தலைகீழ் ஹெட் அண்ட் ஷோல்டர் (Inverted Head and Shoulder) பேட்டர்ன் உருவாகி யிருக்கிறது. கூடவே ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர் டைவர்சன்ஸ் உடன் நன்றாக உருவாகியிருக் கிறது. எம்.ஏ.சி.டி ஆய்வு முடிவு, பங்கில் புதிய முதலீடு அதிகரித் திருப்பதை உறுதி செய்கிறது. கூடவே, சமீப காலத்தில் வால்யூம் அதிகரித்திருப்பது அண்மைக் காலத்தில் புதிதாக முதலீடு செய்யப்பட்டு வருவதை உறுதி செய்திருக்கிறது. அருமையான கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன்கள் உருவாகியிருக்கின்றன. குறுகிய காலத்தில் பங்கின் விலை தொடர்ந்து ஏறும் என எதிர்பார்க்கலாம்.

கடந்த ஓராண்டுக் காலத்தில் பங்கின் விலை வார அடிப்படை யில் நன்றாக ஏற்றம் கண்டு வருகிறது. கோவிட்-19 பரவல் சிக்கலுக்குப் பிறகு, பங்கின் விலை சுமார் 60 சதவிகிதத்துக்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது. பங்கின் விலை அதன் 52 வார உச்சத்திலிருந்து சுமார் 12 சத விகிதமே குறைவாக உள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி (ADANIGREEN)

தற்போதைய விலை: ரூ.1,291.35

இலக்கு காலம்: 15 - 21 மாதங்கள்

இலக்கு விலை: ரூ.1,610 - ரூ.2,320

இந்த நிறுவனம் கடந்த 2015–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இது லார்ஜ்கேப் பிரிவில் (பங்குச் சந்தை மதிப்பு ரூ.1,95,845 கோடி) வருகிறது. அதானி குழுமத்தைச் சேர்ந்த இது, மின் உற்பத்தித் துறையில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் முக்கிய வருமானமாக மின் சப்ளை மற்றும் இதர செயல் பாட்டு வருமானம் உள்ளது.

இந்த நிறுவனம், ஸ்கை பவர் குளோபல் நிறுவனத்தில் 100% பங்கு மூலதனத்தை வாங்கியிருக் கிறது. இது இந்த நிறுவனத்துக்கு மிகவும் சாதகமான அம்சமாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிதிநிலை, தரமான நிர்வாகத்தைக் கொண்டதாக இந்த நிறுவனம் உள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளாக இந்த நிறுவனத்தின் புரொமோட்டர் பங்கு மூலதனம் எந்த மாற்றமும் இல்லாமல் 74.92 சதவிகிதமாக உள்ளது. பங்கின் விலை 50 நாள்கள் இ.எம்.ஏ-க்கு (Exponential Moving Average) மேல் நிலை பெற்றிருக்கிறது. பங்கின் விலை சார்ட்டில் ஹையர் ஹை மற்றும் ஹையர் லோ பேட்டர்ன் உருவாகியுள்ளது. இது பங்கின் விலை இன்னும் ஏறப்போகிறது என்பதற்கான பாசிட்டிவ் அறிகுறியாக உள்ளது. வால்யூம் உயர்வால் புல்லிஷ் கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் உருவாகி யிருக்கிறது. இது இந்தப் பங்கில் புதிய முதலீடு அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக இருக்கிறது.

பங்கின் தினசரி விலை சார்ட்டில் ரவுண்ட் பாட்டம் பேட்டர்ன் உருவாகி யிருக்கிறது. கூடவே, ஆர்.எஸ்.ஐ இண்டி கேட்டர் டைவர்சன்ஸ் உடன் நன்றாக உருவாகியிருக்கிறது. எம்.ஏ.சி.டி ஆய்வு முடிவு பங்கில் புதிய முதலீடு அதிகரித் திருப்பதைக் குறிக்கிறது. மேலும், சமீப காலத்தில் வால்யூம் அதிகரித்திருப்பது புதிய முதலீடு நடப்பதை உறுதி செய்திருக்கிறது. அருமையான கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன்கள் உருவாகியிருக் கின்றன. குறுகிய காலத்தில் பங்கின் விலை தொடர்ந்து ஏறும் என எதிர்பார்க்கலாம். பங்கின் விலை அதன் 52 வார உச்சத்தில் உள்ளது.

கோஃபோர்ஜ் (COFORGE)

தற்போதைய விலை: ரூ.2,825.65

இலக்கு காலம்: 12 - 36 மாதங்கள்

இலக்கு விலை: ரூ.3,600 - ரூ.4,150

இந்த நிறுவனம் 1992-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இது மிட்கேப் பிரிவில் (பங்குச் சந்தை மதிப்பு ரூ.17,698 கோடி) வருகிறது. இந்த நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சாஃப்ட்வேர் துறையின்கீழ் வருகிறது. இதன் வருமானத்தில் சேவை முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. கோவிட் பரவல் தொடங்கியதிலிருந்து ஐ.டி துறை சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுவருகிறது. தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி கண்டுவரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிறுவனம் 2018 முதல் தொடர்ந்து வருமான வளர்ச்சியைத் தக்கவைத்து வருகிறது.

இந்த நிறுவனப் பங்கில் மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடு கணிசமாக இருக்கிறது. இது இந்தப் பங்குக்குக் கூடுதல் வலுவூட்டுவதாக உள்ளது. பங்கின் விலை 50 நாள்கள் இ.எம்.ஏ-க்கு (Exponential Moving Average) மேல் நிலைபெற்றிருக்கிறது.

பங்கின் விலை சார்ட்டில் ஹையர் ஹை மற்றும் ஹையர் லோ பேட்டர்ன் உருவாகியுள்ளது. இது பங்கின் விலை இன்னும் ஏறப்போகிறது என்பதற்கான பாசிட்டிவ் அறிகுறியாக உள்ளது. வால்யூம் உயர்வால் புல்லிஷ் கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் உருவாகியிருக்கிறது. இது இந்தப் பங்கில் புதிய முதலீடுகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.

பங்கின் தினசரி விலை சார்டில் டவுள் பாட்டம் பேட்டர்ன் உருவாகி யிருக்கிறது. கூடவே ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர் டைவர்சன்ஸ் உடன் நன்றாக உருவாகியிருக்கிறது. எம்.ஏ.சி.டி ஆய்வு முடிவு பங்கில் புதிய முதலீடு அதிகரித்திருப்பதைக் குறிக்கிறது. கூடவே, சமீப காலத்தில் வால்யூம் அதிகரித்திருப்பது புதிய முதலீடு நடப்பதை உறுதி செய்திருக்கிறது. அருமை யான கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன்கள் உருவாகியிருக் கின்றன. குறுகிய காலத்தில் பங்கின் விலை தொடர்ந்து ஏறும் என எதிர்பார்க்கலாம்.

இந்தப் பங்கின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 220% ஏற்றம் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் நிஃப்டி மிட்கேப் 100 இண்டெக்ஸ் சுமார் 24 சதவிகிதம்தான் அதிகரித்துள்ளது.

முதலீடு
முதலீடு

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு...

தற்போதைய நிலையில், சந்தையில் நியாயமான இறக்கம் (correction) வந்தால் முதலீடு செய்ய வசதியாக முதலீட்டாளர்கள் பணத்தைக் கைவசம் வைத்திருப்பது நல்லது.

பங்குச் சந்தை உச்சத்திலிருக்கும் போது மொத்த முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது. முதலீட்டுத் தொகையை 5 அல்லது 6 பிரிவாகப் பிரித்து, துறைகளின் முன்னணி நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துவந்தால் நீண்டகாலத்தில் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.

டிஸ்க்ளெய்மர்: கே.கார்த்திக் ராஜா (SEBI Registration Number (Research Analyst) INH2000007292), நிதி ஆராய்ச்சி ஆலோசகர், Rupeedesk Consultancy. www.rupeedesk.in. முதலீட்டு முடிவு உங்களின் சொந்த முடிவாக இருக்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகரை கலந்து ஆலோசிக்கவும்.