Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! முதலீட்டாளர்கள் கவனத்துக்கு!

பங்குகள்... வாங்கலாம்
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்

B U Y & S E L L

சந்தையின் தொடக்க இடைவெளிகளின் ஆதிக்கம் தொடர்ந்து காணப்படுவதால் ஏற்ற இறக்கத்திலிருந்து ஓய்வு கிடைப்பது சாத்தியமாக இல்லை. இதனால் முதலீட்டாளர்கள், வர்த்தகர்களுக்கு கடந்த வார வர்த்தக நாள்கள் கடினமானதாகவே இருந்தது. அவர்களுக்கான ஸ்டாப்லாஸ் நிலையும் இடது, வலது மற்றும் நடுவில் என அலைக்கழித்தது. இதனால் தற்போது வர்த்தகர்களின் சென்டிமென்ட் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

டாக்டர் 
சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

காரணம் கடந்த வாரத்தில் ஏற்பட்ட இறக்கங்களில் சந்தையின் போக்கு குறித்தும் விலை நகர்வு குறித்தும் ஒரு தெளிவான முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இதனால் நீண்டகால அடிப்படையிலான சப்போர்ட் நிலைகள் சற்று அச்சத்துக்குள்ளானாலும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளன.

முந்தைய வாரங்களில் தெரிவித்திருந்த பிரதான சப்போர்ட் நிலை பெரிதாகப் பாதிப்படையவில்லை. அதேபோல் ஏற்றத்தின் போக்கும் கொஞ்சம் இருந்ததைப் பார்க்க முடிந்தது. எனவே, சந்தை தற்போது கன்சாலிடேஷன் செயல்பாட்டில் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

சந்தையின் பெரும்பான்மை செயல்பாடானது மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் செயல்பாடுகளால் நிர்ணயிக்கப்படுவதாக இருக்கிறது.

எனவே, இந்தப் பங்குகளில் தொடர்ந்து முதலீட்டாளர் களின் ஈடுபாடு நிலையாக இருந்துவருவதால் பெரிய அளவில் பதற்றத்தை சந்தையில் பார்க்க முடியவில்லை. எனவே, சந்தையின் போக்கு வரும் வாரத்திலும் இப்படியே தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.

நிஃப்டி 15375 என்ற நிலையைக் கடந்து ஏற்றம் கண்டால்தான் மீண்டும் உச்சங்களை எட்டுவதற்கான புதிய மொமென்டத்தைப் பார்க்க முடியும். வரும் நாள்களில் இதற்கான முயற்சி ஒருமுறை நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. சந்தையில் தாக்கம் செலுத்தக்கூடிய செய்திகள் முக்கியக் காரணியாக இருக்கலாம். பாசிட்டிவ் செய்திகள் வரும்பட்சத்தில் காளையின் போக்கை உருவாக்கி பிரேக் அவுட் செயல்பாட்டை ஏற்படுத்தலாம். அதுபோன்ற பிரேக் அவுட் உண்டாகும் போது காளையின் ஆதிக்கம் அதை தக்க வைத்துக்கொள்ள தயாராகவே இருக்கிறது.

சமீபத்திய கன்சாலிடேஷன் செயல் பாடு பொசிஷன்களிலும் சந்தையிலும் ஓரளவுக்கு தாக்கம் செலுத்தியிருக்கிறது. இதனால் சந்தை சற்று மென்மையாகவும் குறைந்தபட்ச ரெசிஸ்டன்ஸ் போக்கிலும் மேல்நோக்கி நகர வாய்ப்புள்ளது.

வரும் நாள்களில் நிஃப்டியில் 14950 என்ற நிலைக்குக் கீழே ஸ்டாப்லாஸ் வைத்துக்கொண்டு லாங் பொசிஷன்களை எடுக்கலாம்.

மார்க்கெட்
மார்க்கெட்

ஐ.எஃப்.சி.ஐ (IFCI)

தற்போதைய விலை ரூ.14.30

பொதுத்துறை நிறுவனங்களில் பாரம்பர்யமாக உள்ள நிறுவனப் பங்குகளுக்குத் தற்போது நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது. அவற்றில் கடந்த வாரத்தில் சர்க்யூட் உச்ச அளவை ஐ.எஃப்.சி.ஐ எட்டியது.

கடந்த இரண்டு வாரங்களாக இதன் விலை நகர்வு நல்ல வால்யூமுடன் சிறப்பான மொமென்டத்தில் ஏற்றத்தில் இருக்கிறது. இந்தப் பங்கு மேலும் ஏற்றமடைவதற்கான சாத்தியங் களுடனும் உள்ளது. ரூ.22 இலக்குடன் இந்தப் பங்கை குறுகியகால முதலீடாக வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.10 என வைத்துக்கொள்ளவும்.

எம்.எம்.டி.சி (MMTC)

தற்போதைய விலை ரூ.45.80

இந்தப் பங்கில் கடந்த சில மாதங்களாகவே நல்ல நிலை உருவாகியிருக்கிறது. தற்போது அதிலிருந்து பிரேக் அவுட் ஆகி மேல்நோக்கி நகரத் தயாராக இருக்கிறது. பங்கின் நகர்வு நல்ல மொமென்டத்துடன் இருப்ப தோடு வால்யூமிலும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. எனவே, தற்போதைய விலை யிலிருந்து ஏற்றம் அடைந்து வரும் காலத்தில் ரூ.50-56 வரை உயரும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.38 என வைத்துக் கொள்ளவும்.

சார்ட்
சார்ட்

கிராபைட் (GRAPHITE)

தற்போதைய விலை ரூ.511.45

இந்தப் பங்கு வேகமான ஏற்றத்துக்குப் பிறகு, கடந்த சில வருடங்களாகக் கடும் இறக்கத்தைச் சந்தித்து வந்தது.

இந்த நிலையில் இந்தப் பங்கில் இறக்கம் முடிவுக்கு வந்து தற்போது மீண்டும் டிமாண்ட் உருவாகியிருக்கிறது. சார்ட் பேட்டர்னிலும் பாசிட்டிவ் விலை நகர்வுக்கான அறிகுறிகளைப் பார்க்க முடிகிறது.

குறுகிய காலத்தில் ஏற்றத்தின் போக்கில் ஒரு குறிப்பிட்ட ஒருங்கிணைப்பு உருவாகி அதன் பிறகு, பிரேக் அவுட் ரேஞ்ச் உருவாவதற்கான சாத்தியம் தெரிகிறது. பங்கின் நகர்வு தொடர்ந்து ஏற்றமடையும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தற்போதைய விலையில் இந்தப் பங்கை வாங்கலாம். குறுகியகாலத்தில் ரூ.620 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.480 என ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும்.

தமிழில்: திவ்யா

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், Growth Avenues, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.