Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

டந்த வாரம் நமது கட்டுரையில், ‘நிஃப்டிக்கு 11200 என்ற வரம்பு அடுத்த இலக்காக இருக்கும்; இந்த இலக்கைத் தாண்டிவிட்டால், மேலும் சில நூறு புள்ளிகளை எளிதாகத் தொடர்ந்து பெறக்கூடும். அதுவரை குறிப்பிட்ட சில பங்குகளை வாங்கி, விற்கிற உத்தியை நாம் கடைப்பிடிப்பதே சரி’ என்று குறிப்பிட்டிருந்தோம். அந்த இலக்கை அடைந்தபின் அதனைக் கடப்பதற்குத் தீவிரமான முயற்சியை எடுக்கக்கூடும் எனத் தோன்றியது.

டாக்டர் சி.கே.நாராயண் 
நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES

ஆனால், தற்போது ஏற்பட்டிருக்கும் ஏற்றம் மிகப்பெரிதானது. மிட்கேப், ஸ்மால்கேப் பங்கு விலை மிகப் பெரிய ஏற்றம் கண்டிருக்கிறது. பங்குச் சந்தையின் சென்டிமென்ட் மாறியுள்ளது, மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்வது குறித்து பெரும் முதலீட்டாளர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதனை அடுத்து முதலீட்டாளர்கள் புதிதாக முதலீட்டைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

பங்குச் சந்தையானது, வியாழக்கிழமை அன்று தடைநிலைக்கு அருகே தலைகீழாக மாறி 400 புள்ளிகள் கீழிறங்கியது. அன்று நீண்டகால முதலீட்டாளர்கள் வெளியேறக்கூட வாய்ப்பில்லாமல் இருந்தது. முதலீட்டாளர்கள் அனைவர் முகத்திலும் விரக்தி அதிகமாக இருந்தது. வெள்ளிக்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கும்வரை அனைவரின் மனநிலையும் மிகவும் மோசமாக இருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஆனால், அந்த நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் பலராலும் கிண்டலடிக்கப்பட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனடியாகத் தேசம் போற்றும் தலைவியாக மாறினார். அவருடைய அறிவிப்புகளின்மூலமாக அவரை நோக்கிவந்த பந்தை மிகச் சரியாக அடித்தார். மிகவும் மோசமான மனநிலையிலிருந்த சந்தையின் சூழல் உடனடியாக மாற்றம் பெற்றது. வலுவாக மேலேறிய சந்தை, அன்றைய தினம் முழுவதும் ஏற்றத்தின் போக்கிலேயே இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய உயர்வாக அன்றைய தினம் அமைந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட அனைத்து இண்டெக்ஸ்களிலும் வலுவான ஏற்றம் காணப்பட்டது. பெரிய மதிப்பீட்டிலான பங்குகள் குறித்த எண்ணம் தற்போது முற்றிலுமாக மாறியது. தொழிலதிபர்கள் அல்லது பங்குச் சந்தையின் முக்கிய முதலீட்டாளர்கள் என அனைவரும் இந்த முக்கிய நிகழ்வில் ஒருமித்திருக்கிறார்கள். எனவே, தற்போது உருவாகியுள்ள இந்தப் புதிய போக்கு நீண்ட காலத்துக்கு நீடிக்க வேண்டும். அடுத்த வாரத்தில், நிஃப்டி 11150-க்கு வரும் பட்சத்தில், முதலீட்டுக்கு வாய்ப்பாக அமையும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எஸ். ஹெச்.கெல்கார் அண்டு கம்பெனி (SHK)

தற்போதைய விலை: ரூ.133.85

வாங்கலாம்.

சில பங்குகளின் விலை மோசமான செயல்பாட்டின் காரணமாக மட்டுமே அல்லாமல், வேறு சில காரணங்களுக்காகவும் சரிவடையும். இந்த நிறுவனத்தின் புரமோட்டர்களுக்கு இடையில் நடைபெற்றுவந்த உட்பூசல் காரணமாக, அவர்களின் சிலர் பங்குகளை விற்று வெளியேறினர். இதனால், கடந்த சில மாதங் களாகப் பங்குகளின் விலை இறக்கத்தில் இருந்தது; தற்போது விற்பனை ஒரு முடிவுக்கு வந்து புதிய முதலீடுகள் உள்ளே வந்து, பங்கு விலை ஏற ஆரம்பித்திருக்கிறது. பங்கின் விலையானது இறக்கத்திலிருந்து சராசரி ரெஸிஸ்டன்ஸ் நிலைக்கு வந்திருக்கிறது. ரூ.130-132 என்கிற விலையை உடைத்திருப்பதால், தொடர்ந்து மேலும் ஏறக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.122. குறுகிய காலத்தில் பங்கின் விலை ரூ.150-160 வரை செல்லும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் மில்ஸ் (WSTCSTPAPR)

தற்போதைய விலை: ரூ.262.70

வாங்கலாம்.

பேப்பர் நிறுவனப் பங்குகள் மீண்டும் முதலீட்டாளர்களின் விருப்பமான பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அண்மையில் அறிவிக்கப்பட்ட பிளாஸ்டிக் தடையானது, பேப்பர் நிறுவனங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. இதனால் பேப்பர் நிறுவனப் பங்குகளின் விலை யானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வெஸ்ட் கோஸ்ட் பேப்பர் மில்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இறங்கியதிலிருந்து 50% அதிகரித்திருக்கிறது. பங்கின் விலையானது 270-275 ரூபாயைக் கடந்தால், மேலும் விலை வேகமாக உயர வாய்ப்புள்ளது. பங்கு முதலீட்டில் பொறுமை காக்கும் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனப் பங்கில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.250.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டிக்ஸான் டெக்னாலஜிஸ் (DIXON)

தற்போதைய விலை: ரூ.2,600

வாங்கலாம்.

இந்த நிறுவனப் பங்கானது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது, விலை ஏற்றம் நன்றாக இருந்தது. ஆனால், கடந்த சில மாதங்களாக இறக்கத்தில் இறங்கியது. 4,475 ரூபாயிலிருந்து இறங்கி 1,825 ரூபாய் வரை வந்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்தபட்ச விலையில் வர்த்தகமானது. ஆனால், தற்போது வலிமையுடன் ஏற ஆரம்பித்திருக் கிறது. சார்ட் பேட்டர்னில் ரிவர்சல் கேண்டில் நிலை உருவாகியிருக்கிறது. பங்கு விலை தினசரி வரை படத்தில் இந்தப் பங்கின் விலையானது புதிய உச்சத்தைத் தொடக்கூடும் என்பதைச் சுட்டி காட்டுகிறது. இறக்கத்தில் ஏற்றம் உருவாகி இருப்பது, இந்தப் பங்கில் முதலீடு செய்யும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. ஸ்டாப்லாஸ் ரூ.2,475. குறுகிய கால இலக்கு விலை ரூ.2,800.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிஸ்க்ளெய்மர்: இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் (டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், GROWTH AVENUES, SEBI Registration (Research Analyst) INH000001964) வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.